Nambinor Keduvathillai

1959
Lyrics
Language: English

Nambinaar keduvathilai

Thunbame iyarkai enum
Sollai maranthiduvom
Female : Thunbame iyarkai enum
Sollai maranthiduvom
Male : Inbame vendi nirppom yaavum
Aval tharuvaaal
Yaavum aval tharuvaaal
Naangu marai theerppu….

Aadharam sakthi endre
Arumaraigal koorum

Aadharam sakthi endre
Arumaraigal koorum

Yaathanum thozhil purivom
Yaadhum aval thozhilaam
Yaadhum aval thozhilaam
Naangu marai theerppu….

Paadi unnai saranadainthen
Paasamellaam kalaivaai
Female : Paadi unnai saranadainthen
Paasamellaam kalaivaai

Kodi nalam seithiduvaai
Kuraigal ellaam theerpaai
Kuraigal ellaam theerpaai
Naangu marai theerppu….


Language: Tamil

எம். கே. ஆத்மநாதன்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

நம்பினார் கெடுவ தில்லை

நம்பினார் கெடுவ தில்லை
நான்கு மறைத் தீர்ப்பு....
நம்பினார் கெடுவ தில்லை
நான்கு மறைத் தீர்ப்பு....

அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிகவரம் பெறலாம்...
அதிகவரம் பெறலாம்...
நான்கு மறைத் தீர்ப்பு....
நம்பினார் கெடுவ தில்லை...
நான்கு மறைத் தீர்ப்பு....

துன்பமே இயற்கையெனும்
சொல்லை மறந்திடுவோம்
பெண் : துன்பமே இயற்கையெனும்
சொல்லை மறந்திடுவோம்
ஆண் : இன்பமே வேண்டி நிற்போம்
யாவுமவள் தருவாள்
யாவுமவள் தருவாள்
நான்கு மறைத் தீர்ப்பு....

நம்பினார் கெடுவ தில்லை
நான்கு மறைத் தீர்ப்பு....

ஆதாரம் சக்தி யென்றே
அருமறைகள் கூறும்
பெண் : ஆதாரம் சக்தி யென்றே
அருமறைகள் கூறும்

யாதானுந் தொழில் புரிவோம்
யாதுமவள் தொழிலாம்
யாதுமவள் தொழிலாம்
நான்கு மறைத் தீர்ப்பு....

நம்பினார் கெடுவ தில்லை...
நான்கு மறைத் தீர்ப்பு....

பாடியுனைச் சரணடைந்தேன்
பாசமெல்லாங் களைவாய்
பெண் : பாடியுனைச் சரணடைந்தேன்
பாசமெல்லாங் களைவாய்

கோடிநலஞ் செய்திடுவாய்
குறைகளெல்லாந் தீர்ப்பாய்
குறைகளெல்லாந் தீர்ப்பாய்
நான்கு மறைத் தீர்ப்பு....

நம்பினார் கெடுவ தில்லை
நான்கு மறைத் தீர்ப்பு....
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிகவரம் பெறலாம்..
அதிகவரம் பெறலாம்..
நான்கு மறைத் தீர்ப்பு....
நம்பினார் கெடுவ தில்லை...
நம்பினார் கெடுவ தில்லை...
நம்பினார் கெடுவ தில்லை...


Movie/Album name: Naalu Veli Nilam

Movie Summary Naalu Veli Nilam (1959) is a Tamil drama centered on agrarian life, land ownership, and family conflict, in which a virtuous farmer faces exploitation and hardship before justice and faith restore his fortunes.

Song Credits - Song: Nambinor Keduvathillai - Film: Naalu Veli Nilam (1959) - Lyricist: Not verified - Composer: Not verified - Singers: Not verified

Musical Style A devotional/philosophical Tamil film song in a traditional melodic idiom, conveying reassurance and faith through a steady, hymn-like tune.

Raga Details Not verified.

Key Artists Involved Not verified.

Awards & Recognition Not verified.

Scene Context The song appears in a devotional/situational passage of the film, expressing the idea that those who place their trust in God will not be forsaken—suited to a moment of adversity and moral reassurance for the protagonist.


Artists