Vaanathil Paranthu

1976
Lyrics
Language: English

Male : Paal nilaavil thottil katti
Aadu kannae aadu
Paasam anbu deivam endru
Paadu kannae paadu

Male : Kuyilgal kiligal anilgal ellaam
Ungalai pola thambi
Ulagam ennum urundai panthu
Ullathu ungalai nambi

Female : Vaanaththil paranthu sirikkum velli nila
Aanantha irakkai virikkum pillaigalaa
Vaanaththil paranthu sirikkum velli nila
Anantha irakkai virikkum pillaigalaa

Female : Mazhalaigal sinthum muththu
Kurunagai ungal soththu
Mazhalaigal sinthum muththu
Kurunagai ungal soththu
Vanjangal illaatha mullai koththu

Chorus : …………..

Female : Maanikka kaalgal nadamidumpothu
Navaneetha kannananai kandaen
Aanippon oonjal arasakkumaaran
Alangaara therinai kandaen

Female : Annam ennum vellai ullam
Ponnai vellum anbu vellam
Paasam enbathai sumanthu
Deivam vanthathu piranthu
Chorus : Paasam enbathai sumanthu
Deivam vanthathu piranthu

Female : Vaanaththil paranthu sirikkum velli nila
Aanantha irakkai virikkum pillaigalaa

Female : Mazhalaigal sinthum muththu
Kurunagai ungal soththu
Vanjangal illaatha mullai koththu

Chorus : …………..

Male : Nilavu valarnthaal pournamiyaagum
Mannum vinnum jolikkum
Ninaivu valarnthaal ungal arivum
Medhaigal polae manakkum

Male : Antha nilaavai aagaayaththil
Vaiththavan peyarthaan iraivan
Intha nilaavai engal kaiyil
Thanthavan peyarthaan thalaivan

Female : Maanthalir maeni koondhalai thadavi
Mayangaatha ullangal yaedhu
Saantha nilaavil neendhi ezhunthu
Thazhuvaatha illangal yaedhu

Female : Thendralai konjum thennai
Kandrinai konjum annai
Kaalam neram piranthaal
Naanum annai kuzhanthaai

Female : Vaanaththil paranthu sirikkum velli nila
Aanantha irakkai virikkum pillaigalaa

Female : Mazhalaigal sinthum muththu
Kurunagai ungal soththu
Vanjangal illaatha mullai koththu…


Language: Tamil

ஆண் : பால் நிலாவில் தொட்டில் கட்டி
ஆடு கண்ணே ஆடு
பாசம் அன்பு தெய்வம் என்று
பாடு கண்ணே பாடு

ஆண் : குயில்கள் கிளிகள் அணில்கள் எல்லாம்
உங்களைப் போல தம்பி
உலகம் என்னும் உருண்டை பந்து
உள்ளது உங்களை நம்பி……

பெண் : வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா
ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா
வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா
ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

பெண் : மழலைகள் சிந்தும் முத்து
குறுநகை உங்கள் சொத்து
மழலைகள் சிந்தும் முத்து
குறுநகை உங்கள் சொத்து
வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து…

குழு : …………………………..

பெண் : மாணிக்க கால்கள் நடமிடும்போது
நவநீத கண்ணனை கண்டேன்
ஆணிப்பொன் ஊஞ்சல் அரசக்குமாரன்
அலங்கார தேரினை கண்டேன்

பெண் : அன்னம் என்னும் வெள்ளை உள்ளம்
பொன்னை வெல்லும் அன்பு வெள்ளம்
பாசம் என்பதை சுமந்து
தெய்வம் வந்தது பிறந்து…
குழு : பாசம் என்பதை சுமந்து
தெய்வம் வந்தது பிறந்து…

பெண் : வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா
ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

பெண் : மழலைகள் சிந்தும் முத்து
குறுநகை உங்கள் சொத்து
வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து…

குழு : ……………………………

ஆண் : நிலவு வளர்ந்தால் பௌர்ணமியாகும்
மண்ணும் விண்ணும் ஜொலிக்கும்
நினைவு வளர்ந்தால் உங்கள் அறிவும்
மேதைகள் போலே மணக்கும்

ஆண் : அந்த நிலாவை ஆகாயத்தில்
வைத்தவன் பெயர்தான் இறைவன்
இந்த நிலாவை எங்கள் கையில்
தந்தவன் பெயர்தான் தலைவன்

பெண் : மாந்தளிர் மேனி கூந்தலை தடவி
மயங்காத உள்ளங்கள் ஏது
சாந்த நிலாவில் நீந்தி எழுந்து
தழுவாத இல்லங்கள் ஏது

பெண் : தென்றலை கொஞ்சும் தென்னை
கன்றினை கொஞ்சும் அன்னை
காலம் நேரம் பிறந்தால்
நானும் அன்னை குழந்தாய்…..

பெண் : வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா
ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

பெண் : மழலைகள் சிந்தும் முத்து
குறுநகை உங்கள் சொத்து
வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து…


Movie/Album name: Veedu Varai Uravu

Artists