
Paarthai paarthaen
Sirithaai sirithaen
Iravum pagalum ninaivil valarum
Idhuthaan kaadhala
Paarthaal paarkkum
Sirithaal sirikkum
Iaravum pagalum ninaivil vlarum
Idhuthaan kaadhala
Paarthai paarthaen
Sirithaai sirithaen
Thaniyaai irukkum velaiyilae unnai
Parkka vaenum pol irukkudhu
Dhinam saapida marandhu thookkathai izhandhu
Sindhikka manasu thudikkudhu
Dhinam saapida marandhu thookkathai izhandhu
Sindhikka manasu thudikkudhu
Paarthai paarthaen
Sirithaai sirithaen
Andhiyil vaanil chandhiran vandhaal
Sindhaiyum theeyaai kodhikkudhu
Unnai kandathum thondrum aanandha vellam
Thanimai theeyai anaikkudhu
Unnai kandathum thondrum aanandha vellam
Thanimai theeyai anaikkudhu
Kannangariya koondhalilae oru
Malligai malarai soodavaa
Un kannamirandai pirar kaanamal
Kaigalinaale moodavaa
Kannamirandai pirar kaanamal
Kaigalinaale moodavaa
Paarthaai
Male : Paarthaen
Female : Sirithaai
Male : Sirithaen
Both : Iravum pagalum ninaivil valarum
Adhuthaan kaadhalae….
எஸ். வேதாச்சலம்
கண்ணதாசன்
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
இரவும் பகலும் நினைவில் வளரும்
இதுதான் காதலா..........
பார்த்தால் பார்க்கும்
சிரித்தால் சிரிக்கும்
இரவும் பகலும் நினைவில் வளரும்
இதுதான் காதலே ...........
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
தனியாயிருக்கும் வேளையிலே உன்னை
பார்க்க வேணும் போலிருக்குது
தினம் சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து
சந்திக்க மனசு துடிக்குது
தினம் சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து
சந்திக்க மனசு துடிக்குது
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
அந்தியில் வானில் சந்திரன் வந்தால்
சிந்தையும் தீயாய் கொதிக்குது
உன்னை கண்டதும் தோன்றும் ஆனந்த வெள்ளம்
தனிமைத் தீயை அணைக்குது
உன்னை கண்டதும் தோன்றும் ஆனந்த வெள்ளம்
தனிமைத் தீயை அணைக்குது
பார்த்தால் பார்க்கும்
சிரித்தால் சிரிக்கும்
கன்னங்கரிய கூந்தலிலே ஒரு
மல்லிகை மலரைச் சூடவா
உன் கன்னமிரண்டைப் பிறர் காணாமல்
கைகளினாலே மூடவா
கன்னமிரண்டைப் பிறர் காணாமல்
கைகளினாலே மூடவா
தன்னந்தனியே உன்னிடம் மட்டும்
ரகசிய கீதம் பாடவா
தத்தித் தவழும் பிள்ளையைப் போல
கன்னி உன் மார்பில் ஆடவா
தத்தித் தவழும் பிள்ளையைப் போல
கன்னி உன் மார்பில் ஆடவா
பார்த்தாய்
ஆண் : பார்த்தேன்
பெண் : சிரித்தாய்
ஆண் : சிரித்தேன்
இருவர் : இரவும் பகலும் நினைவில் வளரும்
அதுதான் காதலே ...........
பார்த்தாய் பார்த்தேன்
சிரித்தாய் சிரித்தேன்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
Movie Summary: Pasamum Nesamum is a 1964 Tamil drama film directed by K. S. Gopalakrishnan, revolving around family relationships, love, and moral values.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: Traditional Tamil film music with melodic orchestration typical of 1960s K. V. Mahadevan compositions, blending Carnatic raga influences with light music.
Key Artists Involved:
Lyrics: Kannadasan
Scene Context: A romantic duet picturized on the lead pair, expressing mutual admiration and love through poetic lyrics and melodic exchange.