Lottery Penne

2022
Lyrics
Language: English

Pennaai vandha kanavae
Vinnindru pozhivadhenna
Mannil undhan pozhivaal
En nenjam nanigiradhae

Thuli thuliyaai
Kaadhal midhakkiradhae
Nijamdhaanaa
Panithuliyaai mounam kalaigiradhae

Ven megamaai midhandhen parandhen
Muppogamaai vilaindhen vazhindhen
Kaarmegathin karuppu vellai naan
Pudhu vaanavil varnam theettava

Manadhil maayangal seidhaayae
Kaanum yaavum azhagaaga
Kaanaa ulagil kaal padhithen
Manjam thottu thendral veesa

Ey lottery lottery pennae
Un koodavae irukkanum kannae
Naalellaam poovaai malarndhidathaan
Mittaai kuyil neeyadi maanae
Saaral mazhai veesidum thaenae
Naan pirandhadhu unnidam serndhidathaan

Neerillaadha thaamarai
Vaanai paarthadhae azhagiya
Pookkalaaga poomazhai
Thoova ketkudhae

Un arugil vaazhum naatkalo
Moga thoondilaai
Nenjamellaam konda kaadhalo
Thaamadham illaa thagavalai theda

Vaagai mazhaiyae keladi
Un kaadhal nanban naanadi
Thadam maattridu konjam
Ketkudhae nenjam
Indrae inidhaaga

Ey lottery lottery pennae
Un koodavae irukkanum kannae
Naalellaam poovaai malarndhidathaan
Mittaai kuyil neeyadi maanae
Saaral mazhai veesidum thaenae
Naan pirandhadhu unnidam serndhidathaan

Nenjam ellaam neeyae
Niraindhaayae uyirae uyirae
Mounam illaa malaraai malarndhenae

Ven megamaai midhandhen parandhen
Muppogamaai vilaindhen vazhindhen
Kaarmegathin karuppu vellai naan pudhu

Manadhil maayangal seidhaayae
Kaanum yaavum azhagaaga
Kaanaa ulagil kaal padhithen
Manjam thottu thendral veesa


Language: Tamil

ஹரி எஸ் ஆர்

ராகவ் மிர்தாத் மற்றும் ரேஷ்மம் குமார்

பெண்ணாய் வந்த கனவே
விண்ணின்று பொழிவதென்ன
மண்ணில் உந்தன் பொழிவால்
என் நெஞ்சம் நனைகிறதே

துளி துளியாய்
காதல் மிதக்கிறதே
நிஜம்தானா
பனித்துளியாய் மௌனம் கலைகிறதே

வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன்
முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்
கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்
புது வானவில் வர்ணம் தீட்டவா

மனதில் மாயங்கள் செய்தாயே
காணும் யாவும் அழகாக
காணா உலகில் கால் பதித்தேன்
மஞ்சம் தொட்டு தென்றல் வீச

ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே
உன் கூடவே இருக்கணும் கண்ணே
நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்
மிட்டாய் குயில் நீயடி மானே
சாரல் மழை வீசிடும் தேனே
நான் பிறந்தது உன்னிடம்
சேர்ந்திடதான்

நீரில்லாத தாமரை
வானை பார்த்ததே
அழகிய பூக்களாக
பூமழை தூவ கேட்குதே

உன் அருகில் வாழும் நாட்களோ
மோக தூண்டிலாய்
நெஞ்சமெல்லாம் கொண்ட காதலோ
தாமதம் இல்லா தகவலை தேட

வாகை மழையே கேளடி
உன் காதல் நண்பன் நானடி
தடம் மாற்றிடு கொஞ்சம்
கேட்குதே நெஞ்சம்
இன்றே இனிதாக

ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே
உன் கூடவே இருக்கணும் கண்ணே
நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்
மிட்டாய் குயில் நீயடி மானே
சாரல் மழை வீசிடும் தேனே
நான் பிறந்தது உன்னிடம்
சேர்ந்திடதான்

நெஞ்சம் எல்லாம் நீயே நிறைந்தாயே
உயிரே உயிரே
மௌனம் இல்லா மலராய் மலர்ந்தேனே

வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன்
முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்
கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்
புது வானவில் வர்ணம் தீட்டவா

மனதில் மாயங்கள் செய்தாயே
காணும் யாவும் அழகாக
காணா உலகில் கால் பதித்தேன்
மஞ்சம் தொட்டு தென்றல் வீச


Movie/Album name: Kaalangalil Aval Vasantham

Movie Summary: Kaalangalil Aval Vasantham is a 2022 Tamil romantic drama about a young woman navigating love, self-discovery, and the changing seasons of her life.

Song Credits: - Song: Lottery Penne - Movie: Kaalangalil Aval Vasantham - Year: 2022

Musical Style: Melodic romantic number with contemporary Tamil film music sensibilities.

Scene Context: The song appears as a romantic expression within the film's narrative, celebrating the female lead's presence in the protagonist's life.


Artists