Velichandhaa

2023
Lyrics
Language: Tamil

பாடகர்கள் :  ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : திறந்திடுமா உறவெனும் தாழே
திறந்திடுமா திறந்திடுமா அன்பே அன்பே

ஆண் : வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
அமைதியால் விடியுமே
வழியெல்லாம் தெரியுமே
ஓ நெஞ்சே எல்லாமே
வா மாறுமே தன்னாலே
நீ சும்மா தேம்பாதே

ஆண் : வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே

ஆண் : யாரிடம் காயம் இல்லை
யாரிடம் சோகம் இல்லை
இன்பமே போகும் என்றால்
அது ஒரு வாழ்க்கை இல்லை

ஆண் : பூவிலே வாசம் உண்டு
கூர்மையாய் முள்ளும் உண்டு
முட்களும் சேர்ந்தால் தானே
பூக்களும் வாழும் இங்கு

ஆண் : காலம் மாறும் போதே
யாவும் மாறக் கூடும்
நாளும் மாறும் போதே
காலம் கூட மாறும்

ஆண் : உலகமே கலக்கமே
அமைதியே விளக்கமே
ஓ நெஞ்சே எல்லாமே
வா மாறுமே தன்னாலே
நீ சும்மா தேம்பாதே

ஆண் : வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே

பெண் : ஓ…..ஆஹா

ஆண் : மாபெரும் வானின் கீழே
யாவுமே பாதை தானே
பாதையில் போனால் போதும்
சேர்ந்திடும் ஞானம் தானே

ஆண் : பார்வைகள் மாறும் போதே
ஆழமாய் காணும் போதே
காரணம் புரியும் கண்ணே
யாவுமே மாறும் மண்ணே

ஆண் : ஊக்கமான காலம்
வானில் வந்து போகும்
ஊக்கம் தீரும் போதே
தூர காட்சி தோன்றும்

ஆண் : பனியெல்லாம் விலகுமே
ஒளி நிலா ஒளிருமே
நெஞ்சே எல்லாமே
வா மாறுமே தன்னாலே
நீ சும்மா தேம்பாதே

ஆண் குழு : வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே


Movie/Album name: Irugapatru

Summary of the Movie: Irugapatru explores the complexities of modern relationships, focusing on three couples dealing with love, misunderstandings, and emotional struggles in their marriages.

Song Credits:
- Music: Yuvan Shankar Raja
- Lyrics: Madhan Karky
- Singers: Yuvan Shankar Raja, Shweta Mohan

Musical Style: Romantic melody with contemporary arrangements.

Raga Details: Not explicitly mentioned.

Key Artists Involved: Yuvan Shankar Raja (composer, singer), Shweta Mohan (singer), Madhan Karky (lyricist).

Awards & Recognition: Not available.

Scene Context: The song plays during a tender, introspective moment, highlighting the emotional bond between a couple amidst their struggles.


Artists