Avaniyil Puthumurai

1959
Lyrics
Language: English

Butham saranam gachaami
Chorus : Butham saranam gachaami
Male : Butham saranam gachaami
Chorus : Butham saranam gachaami
Male : Sangam saranam gachaami
Chorus : Sangam saranam gachaami
Butham saranam gachaami

Aatchi peedam thurandha
Annalin naamam pottri
Chorus : Humming ….
Male : Kaatchikku eliyanana
Dhyaalan por paadham pottri

Naattirkku nanmai seidha
Naayagan thondu pottri
Chorus : Humming ….
Male : Thannalam illaadha manidha thanmai
Padaithavan karunai pottri


Language: Tamil

ஜி. ராமநாதன்

 ஏ .மருதகாசி

புத்தம் சரணம் கச்சாமி
குழு : புத்தம் சரணம் கச்சாமி
ஆண் : தர்மம் சரணம் கச்சாமி
குழு : தர்மம் சரணம் கச்சாமி
ஆண் : சங்கம் சரணம் கச்சாமி
குழு : சங்கம் சரணம் கச்சாமி
புத்தம் சரணம் கச்சாமி

அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி
அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி
ஐம்புலன் வென்றவன் சாந்தியைக் கண்டவன்
ஐம்புலன் வென்றவன் சாந்தியைக் கண்டவன்
அன்பின் வடிவான தேவன்......
அன்பின் வடிவான தேவன்......
அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி

ஆட்சி பீடம் துறந்த
அண்ணலின் நாமம் போற்றி
குழு : முனங்கல்
ஆண் : காட்சிக்கு எளியனான
தயாளன் பொற்பாதம் போற்றி

நாட்டிற்கு நன்மை செய்த
நாயகன் தொண்டு போற்றி
குழு : முனங்கல்
ஆண் : தன்னலமில்லா மனிதத்தன்மை
படைத்தவன் கருணை போற்றி

துன்பத்தின் காரணம் அதற்கு நிவாரணம்
துன்பத்தின் காரணம் அதற்கு நிவாரணம்
கண்டவன் அருளாளன் தவசீலன்
கண்டவன் அருளாளன் தவசீலன்
அவன் கழலடி மறவாமல் பணிவோமே.
கழலடி மறவாமல் பணிவோமே.....!

அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி
அவனியில் புதுமுறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி


Movie/Album name: Manimekalai

Artists