Aadi Pizhaithaalum Paadi Pizhaithaalum

1960
Lyrics
Language: English

Female : Aadi pizhaithaalum paadi pizhaithaalum
Anbum panbum ellaiyadi
Aadi pizhaithaalum paadi pizhaithaalum
Anbum panbum ellaiyadi
Pagutharivai kedikkaadha perumai alikkaadha
Edhilum kevalam illaiyadi
Pagutharivai kedikkaadha perumai alikkaadha
Edhilum kevalam illaiyadi

Female : Aadi pizhaithaalum paadi pizhaithaalum
Anbum panbum ellaiyadi

Female : Pachai kodi pondra pennai manam kolla
Kanakkaiyum ketkkudhadi
Pachai kodi pondra pennai manam kolla
Kanakkaiyum ketkkudhadi
Puvi ichai mozhi pesi enna varum endru
Iruppaiyum paarkkudhadi
Puvi ichai mozhi pesi enna varum endru
Iruppaiyum paarkkudhadi

Female : Aadi pizhaithaalum paadi pizhaithaalum
Anbum panbum ellaiyadi

Female : Vaazhvu varum podhu sondha murai paesi
Varubavar kodiyadi
Vaazhvu varum podhu sondha murai paesi
Varubavar kodiyadi
Nilai thaazhndhu varum podhu
Petra magan kooda thanguvadhillaiyadi
Nilai thaazhndhu varum podhu
Petra magan kooda thanguvadhillaiyadi

Female : Pasikku virundhaaga noikku marundhaaga
Iruppavar dheivamadi
Pasikku virundhaaga noikku marundhaaga
Iruppavar dheivamadi
Than pasiyai karudhaamal pirarukku kodupporgal
Dheivathin dheivamadi
Than pasiyai karudhaamal pirarukku kodupporgal
Dheivathin dheivamadi

Female : Aadi pizhaithaalum paadi pizhaithaalum
Anbum panbum ellaiyadi
Pagutharivai kedikkaadha perumai alikkaadha
Edhilum kevalam illaiyadi

Female : Aadi pizhaithaalum paadi pizhaithaalum
Anbum panbum ellaiyadi


Language: Tamil

பெண் : ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி
ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி
பகுத்தறிவைக் கெடுக்காத பெருமை அழிக்காத
எதிலும் கேவலம் இல்லையடி
பகுத்தறிவைக் கெடுக்காத பெருமை அழிக்காத
எதிலும் கேவலம் இல்லையடி

பெண் : ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி

பெண் : பச்சைக்கொடி போன்ற பெண்ணை மணம் கொள்ளப்
பணத்தையும் கேட்குதடி
பச்சைக்கொடி போன்ற பெண்ணை மணம் கொள்ளப்
பணத்தையும் கேட்குதடி
புவி இச்சைமொழி பேசி என்ன வருமென்று
இருப்பையும் பார்க்குதடி
புவி இச்சைமொழி பேசி என்ன வருமென்று
இருப்பையும் பார்க்குதடி

பெண் : ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி

பெண் : வாழ்வு வரும்பொழுது சொந்தமுறை பேசி
வருபவர் கோடியடி
வாழ்வு வரும்பொழுது சொந்தமுறை பேசி
வருபவர் கோடியடி
நிலை தாழ்ந்து வரும்போது
பெற்ற மகன் கூட தங்குவதில்லையடி
நிலை தாழ்ந்து வரும்போது
பெற்ற மகன் கூட தங்குவதில்லையடி

பெண் : பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக
இருப்பவர் தெய்வமடி
பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக
இருப்பவர் தெய்வமடி
தன் பசியைக் கருதாமல் பிறர்க்குக் கொடுப்போர்கள்
தெய்வத்தின் தெய்வமடி
தன் பசியைக் கருதாமல் பிறர்க்குக் கொடுப்போர்கள்
தெய்வத்தின் தெய்வமடி

பெண் : ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி
பகுத்தறிவைக் கெடுக்காத பெருமை அழிக்காத
எதிலும் கேவலம் இல்லையடி

பெண் : ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி


Movie/Album name: Padikkadha Medhai

Movie Summary A wealthy man loses his memory and is presumed dead; his greedy relatives mistreat his loyal son, but the truth is eventually revealed and justice prevails.

Song Credits - Film: Padikkadha Medhai (1960) - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style - Traditional Tamil film song with a devotional-philosophical tone - Set in a conversational, dramatic style typical of 1960s Tamil cinema - Orchestration features veena, flute, and light percussion

Raga Details - Based on Kalyani (also known as Yaman in Hindustani) - The melodic structure emphasizes the ascending and descending scales characteristic of Kalyani

Key Artists Involved - Director: Krishnan–Panju - Starring: Sivaji Ganesan, Sowcar Janaki - Producer: Sivaji Films

Awards & Recognition - The song remains a classic in Tamil film music - T. M. Soundararajan’s rendition is considered one of his notable devotional-philosophical songs

Scene Context - The song appears as a philosophical reflection on fate and virtue - Sung by the protagonist (Sivaji Ganesan) in a moment of introspection and hardship - The lyrics convey that whether one succeeds by effort or by chance, ultimately destiny prevails


Artists