Nathaswara Oosaiyile

1968
Lyrics
Language: English

Nadhaswara oosaiyile
Devan vandhu paadugindraan
Saerndhu varum melathilae
Devi nadam aadugindraal
Nadhaswara oosaiyile

Ha haha ha ha haha ha
Ha haha ha ha ha haha ha
Kolamitta manavaraiyil
Kungumathin sangamathil
Kolamitta manavaraiyil
Kungumathin sangamathil
Maalaiyitta poonkazhuthil
Thaali kattum velaiyilum

Ooraargal vaazhthuraikka
Oorvalathil varum poluthum
Devan vandhu paadugindraan
Devi nadam aadugindraal

Nadhaswara oosaiyile
Devan vandhu paadugindraan
Saerndhu varum melathilae
Devi nadam aadugindraal
Nadhaswara oosaiyile

Mai vaditha kann irandum
Mann paarkkum paavanaiyil
Kai piditha naayaganin
Kattazhagu kandu vara

Mai vaditha kann irandum
Mann paarkkum paavanaiyil
Kai piditha naayaganin
Kattazhagu kandu vara

Mei silirthu mugam sivakkum
Mellidaiyaal koondhalilae
Devi nadam aadugindraal
Devan vandhu paadugindraan
Nadhaswara oosaiyile

Karppil oru kannagiyaai
Kaadhalukku jaanakiyaai
Sirppa magal vaazhkkai endru
Devan vandhu paadugindraan

Pathiniyai kaaval kondu
Paar pugazha vaazhga endru
Pathiniyai kaaval kondu
Paar pugazha vaazhga endru
Sathiyathin maedaiyilae
Devi nadam aadugindraal

Nadhaswara oosaiyile
Devan vandhu paadugindraan
Male : Saerndhu varum melathilae
Devi nadam aadugindraal
Both : Nadhaswara oosaiyile


Language: Tamil

ஆர். கோவர்தனம்

கண்ணதாசன்

நாதஸ்வர ஓசையிலே
தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே
தேவி நடம் ஆடுகின்றாள்
நாதஸ்வர ஓசையிலே......

ஹா ஹாஹா ஹா ஹா ஹாஹா ஹா
ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹா
கோலமிட்ட மணவறையில்
குங்குமத்தின் சங்கமத்தில்
கோலமிட்ட மணவறையில்
குங்குமத்தின் சங்கமத்தில்
மாலையிட்ட பூங்கழுத்தில்
தாலி கட்டும் வேளையிலும்

ஊரார்கள் வாழ்த்துரைக்க
ஊர்வலத்தில் வரும் பொழுதும்
தேவன் வந்து பாடுகின்றான்
தேவி நடம் ஆடுகின்றாள்

நாதஸ்வர ஓசையிலே
தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே
தேவி நடம் ஆடுகின்றாள்
நாதஸ்வர ஓசையிலே......

மை வடித்த கண்ணிரண்டும்
மண் பார்க்கும் பாவனையில்
கைப் பிடித்த நாயகனின்
கட்டழகு கண்டு வர..

மை வடித்த கண்ணிரண்டும்
மண் பார்க்கும் பாவனையில்
கைப் பிடித்த நாயகனின்
கட்டழகு கண்டு வர..

மெய் சிலிர்த்து முகம் சிவக்கும்
மெல்லிடையாள் கூந்தலிலே
தேவி நடம் ஆடுகின்றாள்
தேவன் வந்து பாடுகின்றான்
நாதஸ்வர ஓசையிலே.....

கற்பில் ஒரு கண்ணகியாய்
காதலுக்கு ஜானகியாய்
சிற்ப மகள் வாழ்க்கை என்று
தேவன் வந்து பாடுகின்றான்

பத்தினியைக் காவல் கொண்டு
பார் புகழ வாழ்க என்று
பத்தினியைக் காவல் கொண்டு
பார் புகழ வாழ்க என்று
சத்தியத்தின் மேடையிலே
தேவி நடம் ஆடுகின்றாள்

நாதஸ்வர ஓசையிலே
தேவன் வந்து பாடுகின்றான்
ஆண் : சேர்ந்து வரும் மேளத்திலே
தேவி நடம் ஆடுகின்றாள்
இருவர் : நாதஸ்வர ஓசையிலே......


Movie/Album name: Poovum Pottum

Movie Summary Poovum Pottum (1968) is a Tamil drama film directed by K. S. Gopalakrishnan, starring Jaishankar, Vijayakumari, and Nagesh in pivotal roles. The story revolves around themes of love, family, and sacrifice, with the protagonist navigating personal struggles against societal expectations.

Song Credits - Song: Nathaswara Oosaiyile - Film: Poovum Pottum (1968) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style The song is a melodic duet blending classical Carnatic influences with mainstream film music orchestration typical of late 1960s Tamil cinema. It features prominent use of the nadaswaram (nathaswaram) in its instrumentation, echoing the song's thematic title, with lush string sections and rhythmic percussion supporting the vocalists.

Raga Details The song is set in a raga reminiscent of Kalyani (also known as Yaman in Hindustani), characterized by its auspicious and serene mood, often used in Tamil film music to evoke celebration or devotional undertones.

Key Artists Involved - Director: K. S. Gopalakrishnan - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela - Cast: Jaishankar, Vijayakumari

Scene Context The song appears in a celebratory or romantic sequence within the film, where the nadaswaram's sound serves as a backdrop for a festive occasion or a moment of emotional connection between the lead characters, reflecting joy and cultural tradition.


Artists