
Lyrics by : Vaali
Female : Aa…..aaa…..aaa….aaa….aa….
Aa…..aaa…..aaa….aaa….aa….
Female : Enai nee paadaathae thalaivaa naan un paattalla
Enai nee thedaathae naan un paattin porulalla
Naan paadum paamaalai unai seralaam
Naan soodum poomaalai idam maaralaam
Female : Enai nee paadaathae thalaivaa naan un paattalla
Thalaivaa naan un paattalla
Female : Naanoru kaaviri kadal sera vanthaen
Naayagan nee endru nizal thedi nindraen
Aayinum vidhi ingu anai poda kandaen
Aandavan thiruvullam dhisai maari sendraen
Female : Yaar vasam yaar endru yaar solvatho
Oorvalam edhuvendru thaer solvatho
Oomai naanthaan
Sogamo raagamaai keerthanam aaga
Female : Enai nee paadaathae thalaivaa naan un paattalla
Enai nee thedaathae naan un paattin porulalla
Female : Kalyaana aasai kaikoodum endru
Poomaalai ondru thoduthaen
Paathai maaraatha payanamthaan endru
Kadhal sangeetham padiththaen
Female : Kalyaana aasai kaikoodum endru
Poomaalai ondru thoduthaen
Paathai maaraatha payanamthaan endru
Kadhal sangeetham padiththaen
Female : Naan konda ninaivu theigindra nilavu
Nee thantha uravu naan kanda kanavu
Anbil inainthathu aadi mudinthathu
Paadal piranthathu paadi mudinthathu ammammaa
Female : Aa….aaa….aaa….aaa….aa….
Aa….aa….aa….aa….aa….aaa….aa…..
Enai nee paadaathae…
பெண் : ஆ….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
ஆ…..ஆ….ஆ……ஆ….ஆ…..ஆ…..
பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல
எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல
நான் பாடும் பாமாலை உனைச் சேரலாம்
நான் சூடும் பூமாலை இடம் மாறலாம்
பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல
தலைவா நான் உன் பாட்டல்ல
பெண் : நானொரு காவேரி கடல் சேர வந்தேன்
நாயகன் நீ என்று நிழல் தேடி நின்றேன்
ஆயினும் விதி இங்கு அணை போட கண்டேன்
ஆண்டவன் திருவுள்ளம் திசை மாறிச் சென்றேன்
பெண் : யார் வசம் யார் என்று யார் சொல்வதோ
ஊர்வலம் எதுவென்று தேர் சொல்வதோ
ஊமை நான் தான்
சோகமே ராகமாய் கீர்த்தனம் ஆக
பெண் : எனை நீ பாடாதே தலைவா நான் உன் பாட்டல்ல
எனை நீ தேடாதே நான் உன் பாட்டின் பொருளல்ல
பெண் : கல்யாண ஆசை கைகூடும் என்று
பூமாலை ஒன்று தொடுத்தேன்
பாதை மாறாத பயணம்தான் என்று
காதல் சங்கீதம் படித்தேன்
பெண் : கல்யாண ஆசை கைகூடும் என்று
பூமாலை ஒன்று தொடுத்தேன்
பாதை மாறாத பயணம்தான் என்று
காதல் சங்கீதம் படித்தேன்
பெண் : நான் கொண்ட நினைவு தேய்கின்ற நிலவு
நீ தந்த உறவு நான் கண்ட கனவு
அன்பில் இணைந்தது ஆடி முடிந்தது
பாடல் பிறந்தது பாடி முடிந்தது அம்மம்மா
பெண் : ஆ….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
ஆ…..ஆ….ஆ……ஆ….ஆ…..ஆ…..ஆஅ….ஆ…..
எனை நீ பாடாதே…..
Movie Summary: Maragatha Veenai is a 1986 Tamil film directed by R. Sundarrajan, revolving around a talented veena player whose life and relationships are tested by tragedy and misunderstanding.
Song Credits: Singers: K. J. Yesudas, Vani Jairam; Lyricist: Vairamuthu; Music Director: Ilaiyaraaja.
Musical Style: Melancholic Carnatic-based film song with orchestral accompaniment.
Raga Details: Based on raga Charukesi.
Key Artists Involved: Ilaiyaraaja (composer), Vairamuthu (lyricist), K. J. Yesudas and Vani Jairam (singers), R. Sundarrajan (director).