Uravugal Oru Sirukadhai

1987
Lyrics
Language: English

Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae
Nadanthathai nee maranthu vidu
Mana kadhavai thiranthu vidu
Yammammaa….aaa….yamma

Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Naanum manithan devan alla theerppu solla
Nilavil kooda kalangamillaiyo
Aanaal idhu en kuttramalla kuraigal solla
Paalum kallum venmai illaiyo

Idhu yaar thavaro adiyon ariyaen
Panivaai malare unai naan piriyaen
Moondru naatkal mounamaaga enna sinthanai
Pothum pothum nee koduththa intha thandanai
Yammammaa….aaa….yamma

Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae
Nadanthathai nee maranthu vidu
Mana kadhavai thiranthu vidu
Yammammaa….aaa….yamma

Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Neettum viral mel kobam kondu thaabam kondu
Vilagi sellum veenai illaiyae
Vaazhum varaiyil naanum neeyae neeyum naanae
Imaiyum kannum pagaivarillaiayae

Idhuthaan namakku nedunaal uravu
Idithaan idiththu vizhumaa nilavu
Dhooram vaiththa thaazhampoovil vaasam pogumaa
Thaaram thalli nindrapothum paasaam pogumaa
Yammammaa….aaaa….yamma

Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae
Nadanthathai nee maranthu vidu
Mana kadhavai thiranthu vidu
Yammammaa….aaa….yamma

Uravugal oru sirukathaiyalla maanae
Pudavaiyil vantha thalaividhi idhuthaanae


Language: Tamil

எஸ். பி. பாலசுப்பிரமணியம்

உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நடந்ததை நீ மறந்து விடு
மனக் கதவை திறந்து விடு
யம்மம்மா...ஆஆ....யம்மா

உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே..

நானும் மனிதன் தேவன் அல்ல தீர்ப்பு சொல்ல
நிலவில் கூட கலங்கமில்லையோ
ஆனால் இது என் குற்றமல்ல குறைகள் சொல்ல
பாலும் கள்ளும் வெண்மை இல்லையோ

இது யார் தவறோ அடியேன் அறியேன்
பனிவாய் மலரே உனை நான் பிரியேன்
மூன்று நாட்கள் மெளனமாக என்ன சிந்தனை
போதும் போதும் நீ கொடுத்த இந்த தண்டனை
யம்மம்மா...ஆஆ....யம்மா

உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நடந்ததை நீ மறந்து விடு
மனக் கதவை திறந்து விடு
யம்மம்மா...ஆஆ....யம்மா

உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே..

நீட்டும் விரல் மேல் கோபம் கொண்டு தாபம் கொண்டு
விலகி செல்லும் வீணை இல்லையே
வாழும் வரையில் நானும் நீயே நீயும் நானே
இமையும் கண்ணும் பகைவரில்லையே

இதுதான் நமக்கு நெடுநாள் உறவு
இடிதான் இடித்து விழுமா நிலவு
தூரம் வைத்த தாழம்பூவில் வாசம் போகுமா
தாரம் தள்ளி நின்றபோதும் பாசம் போகுமா
யம்மம்மா......ஆஆஆ....யம்மமம்மமா

உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே
நடந்ததை நீ மறந்து விடு
மனக் கதவை திறந்து விடு
யம்மம்மா...ஆஆ....யம்மா

உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே
புடவையில் வந்த தலைவிதி இதுதானே..


Movie/Album name: Kavalan Avan Kovalan

Artists