Aathadi Manasudhan (Male)

2012
Lyrics
Language: English

Male : Aathadi manasudhaan
Rekkakatti parakuthae
Aanalum vayasudhaan
Kitta vara thayanguthae

Male : Akkam pakkam
Paarthu paarthu
Aasaiyaaga veesum kaathu
Nenjukulla yedho pesuthae…ae…

Male : Adada indha manasudhan
Suthi suthi unna theduthae
Azhaga indha kolusudhan
Ada thathi thathi un peyar solludhae

Male : Aathadi manasudhaan
Rekkakatti parakuthae
Aanalum vayasudhaan
Kitta vara thayanguthae

Male : Kitta vandhu neeyum
Pesum podhu
Kitta thatta kannu verthu pogum
Moochae kaaichalaa maarum

Male : Vittu vittu unna
Paarkum podhu
Vetti vetti minnal onnu modhum
Manasae maargazhi maasam

Male : Arugil undhan vaasam
Intha kaathil veesuthu
Vizhi theruvil pogum undhan
Uruvam theduthu

Male : Paavi nenja enna senja
Undhan pera solli konja
Avala konnaalum appodhum
Un pera solvaaladaa

Male : Onna renda enna
Naanum solla
Oraayiram aasa vachen ulla
Pesa dhairiyam illa

Male : Ohoo..ulla oru vartha
Vandhu thulla
Ullam avala mutti mutti thalla
Irundhum vetkathil sella

Male : Kaalam ellam avala
Nee paarthae vazhanum
Uyir pogum neram avalin
Madiyil saaindhae saaganaum

Male : Unna thavira enna venum
Vera enna ketka thonum
Nenjam avaloda vazhaama
Mannodu saayaadhada …aaa….

 


Language: Tamil

ஆண் : ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே

ஆண் : அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே

ஆண் : அடடா இந்த மனசுதான்
சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான்
அட தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே

ஆண் : ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே

ஆண் : கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே…. காய்ச்சலா மாறும்..

ஆண் : விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
மனசே… மார்கழி மாசம்..

ஆண் : அருகில் உந்தன் வாசம்
இந்த காத்தில் வீசுது
விழி தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது

ஆண் : பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
அவள கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வாளடா

ஆண் : ஒன்ன ரெண்டா என்ன
நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச… தைரியம் இல்ல…

ஆண் : ஓஹோ உள்ள ஒரு வார்த்த
வந்து துள்ள
உள்ளம் அவள முட்டி முட்டி தள்ள
இருந்தும்… வெட்கத்தில் செல்ல…

ஆண் : காலம் எல்லாம் அவள
நீ பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் அவளின்
மடியில் சாய்ந்தே சாகனும்

ஆண் : உன்ன தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் அவளோட வாழாம
மண்ணோடு சாயாதடா…

 


Movie/Album name: Kazhugu

Movie Summary A thriller about a man who recovers and cremates unclaimed bodies, and how his life changes when he finds a woman among the dead who is still alive.

Song Credits - Movie: Kazhugu (2012) - Song: Aathadi Manasudhan (Male) - Singer: Yuvan Shankar Raja - Music Director: Yuvan Shankar Raja - Lyricist: Na. Muthukumar

Musical Style Melodic folk-infused film song with a soft, reflective romantic tone; acoustic-led arrangement with light percussion and a poignant vocal delivery.

Raga Details Not applicable.

Key Artists Involved - Composer/Singer: Yuvan Shankar Raja - Lyricist: Na. Muthukumar - Film Director: Sathyasiva - Producer: K. E. Gnanavel Raja - Cast: Krishna, Bindhu Madhavi, Thambi Ramaiah

Scene Context The male version expresses the protagonist's inner emotional turmoil and longing as he grapples with his growing feelings and the difficult circumstances surrounding his life and the woman he has saved.


Artists