Nizhal Pol Kuzhal Mudithu

1966
Lyrics
Language: English

Nizhal pol kuzhal mudithu
Neraaga vagideduthu
Kuyil pola kural koduthu vandhavalae
Thaenai kungumapoo kannthilae thandhavalae
Thaenai kungumapoo kannthilae thandhavalae

Poovattam naan irukka punnagaiyil thaen irukka
Vandattam vattam pottu vandhavanae
Enakku yedhyedho ennam ellam thandhavane
Enakku yedhyedho ennam ellam thandhavane

Mundhanaithan kaattril aadi munnadi varumae
Sendhamarai pola mugam pinnadi varumae
Mundhanaithan kaattril aadi munnadi varumae
Sendhamarai pola mugam pinnadi varumae
Female : Paruvakaala nenappu vandhu pirakkumae
Paruvakaala nenappu vandhu pirakkumae
Manasu iravu pagal siragillamal parakkumae
Vennilavil kann irandum pongidumae

Nizhal pol kuzhal mudithu
Neraaga vagideduthu
Kuyil pola kural koduthu vandhavalae
Female : Enakku yedhyedho ennam ellam thandhavane

Velaku veikkira velai vandhaal thookkam varaadhu
Vidiya vidiya neeyirundhaaal yekkam varaadhu
Velaku veikkira velai vandhaal thookkam varaadhu
Vidiya vidiya neeyirundhaaal yekkam varaadhu
Female : Idhaya vaasal kadhavai thedi varugiren
Idhaya vaasal kadhavai thedi varugiren
Naan analil itta mezhugu pola urugugiren
Male : Vennilavil kannirandum pongidumae

Poovattam naan irukka punnagaiyil thaen irukka
Vandattam vattam pottu vandhavanae
Male : Thaenai kungumapoo kannthilae thandhavalae

Anbu vaitha paarvai ingae adipadaiyaagum
Aasai vaitha vaaarthai angae aruvadaiaagum
Anbu vaitha paarvai ingae adipadaiyaagum
Aasai vaitha vaaarthai angae aruvadaiaagum
Female : Mudivilladha payanam vaithu vandhenae
Mudivilladha payanam vaithu vandhenae
Ennai mudhal mudhalaai unnidathil thandhenae
Both : Vennilavil kannirandum pongidavae

Nizhal pol kuzhal mudithu
Neraaga vagideduthu
Kuyil pola kural koduthu vandhavalae
Thaenai kungumapoo kannthilae thandhavalae

Enakku yedhyedho ennam ellam thandhavane

Language: Tamil

கே. வி. மஹாதேவன்

கண்ணதாசன்

நிழல் போல் குழல் முடித்து
நேராக வகிடெடுத்து
குயில் போல் குரல் கொடுத்து வந்தவளே
தேனை குங்குமப்பூ கன்னத்திலே தந்தவளே
தேனை குங்குமப்பூ கன்னத்திலே தந்தவளே

பூவாட்டம் நானிருக்க புன்னகையில் தேனிருக்க
வண்டாட்டம் வட்டம் போட்டு வந்தவனே
எனக்கு ஏதேதோ எண்ணமெல்லாம் தந்தவனே
எனக்கு ஏதேதோ எண்ணமெல்லாம் தந்தவனே

முந்தானைதான் காற்றில் ஆடி முன்னாடி வருமே
செந்தாமரை போல முகம் பின்னாடி வருமே
முந்தானைதான் காற்றில் ஆடி முன்னாடி வருமே
செந்தாமரை போல முகம் பின்னாடி வருமே

பருவக்கால நெனப்பு வந்து பிறக்குமே
பருவக்கால நெனப்பு வந்து பிறக்குமே
மனசு இரவு பகல் சிறகில்லாமல் பறக்குமே
வெண்ணிலவில் கண்ணிரெண்டும் பொங்கிடுமே

நிழல் போல் குழல் முடித்து
நேராக வகிடெடுத்து
குயில் போல் குரல் கொடுத்து வந்தவளே
பெண் : எனக்கு ஏதேதோ எண்ணமெல்லாம் தந்தவனே

வெளக்கு வைக்கிற வேளை வந்தால் தூக்கம் வராது
விடிய விடிய நீயிருந்தால் ஏக்கம் வராது
வெளக்கு வைக்கிற வேளை வந்தால் தூக்கம் வராது
விடிய விடிய நீயிருந்தால் ஏக்கம் வராது
பெண் : இதயவாசல் கதவை தேடி வருகிறேன்
இதயவாசல் கதவை தேடி வருகிறேன்
நான் அனலில் இட்ட மெழுகு போல உருகுறேன்
ஆண் : வெண்ணிலவில் கண்ணிரெண்டும் பொங்கிடுமே..

பூவாட்டம் நானிருக்க புன்னகையில் தேனிருக்க
வண்டாட்டம் வட்டம் போட்டு வந்தவனே
ஆண் : தேனை குங்குமப்பூ கன்னத்திலே தந்தவளே

அன்பு வைத்த பார்வை இங்கே அடிப்படையாகும்
ஆசை வைத்த வார்த்தை அங்கே அறுவடையாகும்
அன்பு வைத்த பார்வை இங்கே அடிப்படையாகும்
ஆசை வைத்த வார்த்தை அங்கே அறுவடையாகும்
பெண் : முடிவில்லாத பயணம் வைத்து வந்தேனே
முடிவில்லாத பயணம் வைத்து வந்தேனே
என்னை முதல்முதலாய் உன்னிடத்தில் தந்தேனே
இருவர் : வெண்ணிலவில் கண்ணிரெண்டும் பொங்கிடவே

நிழல் போல் குழல் முடித்து
நேராக வகிடெடுத்து
குயில் போல் குரல் கொடுத்து வந்தவளே
தேனை குங்குமப்பூ கன்னத்திலே தந்தவளே

எனக்கு ஏதேதோ எண்ணமெல்லாம் தந்தவனே

Movie/Album name: Thedi Vantha Thirumagal

Artists