Female : Azhagaana maaran yaaradi
Azhagaana maaran yaaradi
Manam alai mothum vinthai yaenadi
Female : Aaruyir thozhi paaraai
Intha azhagaana maran yaaro….
Aaruyir thozhi paaraai
Intha azhagaana maran yaaro….
Female : Azhiyaatha kanavaai
En vizhiyodu vilaiyaadi
Azhiyaatha kanavaai
En vizhiyodu vilaiyaadi
Sinthaiyai allum senthamizh veeran
Sinthaiyai allum senthamizh veeran
Sunthara punnagai sinthum selvan
Anbaal arivaal aavalai thoondum
Female : Azhagaana maaran yaaradi
Female : Aasai kanimozhi pesi thanimaiyil
Aadavum paadavum sontham varumaa
Kadhalin nidhiyae seethala madhiyae
Gaana kuyilae kannae maniyae
Female : Kaniyae suvaiyae enavae dhinamum
Kumutham malarum amutha nilavil
Avanudan konji kulaviyae
Nenjam magizhavae aasaikiniya
Female : Azhagaana maaran yaaro….
Aaruyir thozhi paaraai
Intha azhagaana maaran yaaradi….
Female : Paavalan ilangovanthaano
Paavalan ilangovanthaano
Nalla panpaana vendhan pandiyan ivano
Kaval meeri kannaalan meedhil
Kandathum naanae kadhal kondaenae
Female : Kaarmugil kaanum maamayil polae
Kanni en manamae aaduthal paaraai
Female : …………….
Female : Azhagaana maaran yaaro….
Aaruyir thozhi paaraai
Intha azhagaana maaran yaaradi….
பெண் : அழகான மாறன் யாரடி
அழகான மாறன் யாரடி
மனம் அலை மோதும் விந்தை ஏனடி
பெண் : ஆருயிர்த் தோழி பாராய்
இந்த அழகான மாறன் யாரோ…….
ஆருயிர்த் தோழி பாராய்
இந்த அழகான மாறன் யாரோ…….
பெண் : அழியாத கனவாய்
என் விழியோடு விளையாடி
அழியாத கனவாய்
என் விழியோடு விளையாடி
சிந்தையை அள்ளும் செந்தமிழ் வீரன்
சிந்தையை அள்ளும் செந்தமிழ் வீரன்
சுந்தரப் புன்னகை சிந்தும் செல்வன்
அன்பால் அறிவால் ஆவலைத் தூண்டும்
பெண் : அழகான மாறன் யாரடி
பெண் : ஆசைக் கனிமொழி பேசி தனிமையில்
ஆடவும் பாடவும் சொந்தம் வருமா
காதலின் நிதியே சீதள மதியே
கானக் குயிலே கண்ணே மணியே
பெண் : கனியே சுவையே எனவே தினமும்
குமுதம் மலரும் அமுத நிலவில்
அவனுடன் கொஞ்சிக் குலவியே
நெஞ்சம் மகிழவே ஆசைக்கினிய…..
பெண் : அழகான மாறன் யாரோ…….
ஆருயிர்த் தோழி பாராய்
இந்த அழகான மாறன் யாரடி
பெண் : பாவலன் இளங்கோவன்தானோ
பாவலன் இளங்கோவன்தானோ
நல்ல பண்பான வேந்தன் பாண்டியன் இவனோ
காவல் மீறி கண்ணாளன் மீதில்
கண்டதும் நானே காதல் கொண்டேனே
பெண் : கார்முகில் காணும் மாமயில் போலே
கன்னி என் மனமே ஆடுதல் பாராய்
பெண் : ………………………………..
பெண் : அழகான மாறன் யாரோ…….
ஆருயிர்த் தோழி பாராய்
இந்த அழகான மாறன் யாரடி
Nalla Theerppu (1959) is a classic Tamil drama film that explores themes of love, sacrifice, and redemption. The story follows the emotional journey of its protagonists as they navigate societal expectations and personal struggles.
The song Azhagana Maara is likely a romantic duet, expressing the blossoming love between the lead characters. It may feature a picturesque setting, enhancing the emotional depth of the scene.
(Note: Some details may be unavailable due to the song's age and limited documentation.)