Nadiganin Kadhal

1979
Lyrics
Language: English

Male : Kannae naan paada karsilaiyum ezhunthaadum
Kadhal ilavarasan kalaithiranai nee ariyaai
Unnai paattaalae uruga vaikkum ilainganadi
Ennidam naadagamaa naanae nadiganadi

Male : Nadiganin kadhali naadagam yaenadi
Aadalil paadalil vallavan naanadi
Nadiganin kadhali naadagam yaenadi
Aadalil paadalil vallavan naanadi
Singaara paingili senthoora poongodi
Sangeetham keladi sathiraattam podadi

Male : Nadiganin kadhali naadagam yaenadi
Aadalil paadalil vallavan naanadi

Male : Oru kaniyai kandaalae
Kili koththi sellaathi
Kozhu kompai kandaalae
Kodi suttri kollaatho

Male : Oru kaniyai kandaalae
Kili koththi sellaathi
Kozhu kompai kandaalae
Kodi suttri kollaatho

Male : Haehae…..manmathan manthiram
Ennidam ullathu
Sonnathu un manam
En sontham aagaatho….

Male : Haehae…..manmathan manthiram
Ennidam ullathu
Sonnathu un manam
En sontham aagaatho….
Oru mayakkam varavazhaikkum
Ilam kumaran naanammaa

Male : Nadiganin kadhali naadagam yaenadi
Aadalil paadalil vallavan naanadi
Singaara paingili senthoora poongodi
Sangeetham keladi sathiraattam podadi

Male : Nadiganin kadhali naadagam yaenadi
Aadalil paadalil vallavan naanadi

Male : Pani idhazhin muthangal
Tharum inimai saththangal
Nadu iravin raagangal
Adhu ilamai thaagangal

Male : Pani idhazhin muthangal
Tharum inimai saththangal
Nadu iravin raagangal
Adhu ilamai thaagangal

Male : Palliyil thullidum
Pullimaan unnai naan
Alluvaen killuvaen
En aasai theeraatho
Udal muzhukka sugam pirakka
Idhu velaithaanammaa

Male : Nadiganin kadhali naadagam yaenadi
Aadalil paadalil vallavan naanadi
Singaara paingili senthoora poongodi
Sangeetham keladi sathiraattam podadi

Male : Nadiganin kadhali naadagam yaenadi
Aadalil paadalil vallavan naanadi


Language: Tamil

ஆண் : கண்ணே நான் பாட கற்சிலையும் எழுந்தாடும்
காதல் இளவரசன் கலைத்திறனை நீ அறியாய்
உன்னை பாட்டாலே உருக வைக்கும் இளைஞனடி
என்னிடம் நாடகமா…நானே நடிகனடி

ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி

ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி

ஆண் : ஒரு கனியைக் கண்டாலே
கிளி கொத்திச் செல்லாதோ
கொழு கொம்பை கண்டாலே
கொடி சுற்றிக் கொள்ளாதோ

ஆண் : ஒரு கனியைக் கண்டாலே
கிளி கொத்திச் செல்லாதோ
கொழு கொம்பை கண்டாலே
கொடி சுற்றிக் கொள்ளாதோ

ஆண் : ஹேஹே…மன்மதன் மந்திரம்
என்னிடம் உள்ளது
சொன்னதும் உன் மனம்
என் சொந்தம் ஆகாதோ

ஆண் : ஹேஹே…மன்மதன் மந்திரம்
என்னிடம் உள்ளது
சொன்னதும் உன் மனம்
என் சொந்தம் ஆகாதோ
ஒரு மயக்கம் வரவழைக்கும்
இளம் குமரன் நானம்மா

ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி

ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி

ஆண் : பனி இதழின் முத்தங்கள்
தரும் இனிமை சத்தங்கள்
நடு இரவின் ராகங்கள்
அது இளமை தாகங்கள்

ஆண் : பனி இதழின் முத்தங்கள்
தரும் இனிமை சத்தங்கள்
நடு இரவின் ராகங்கள்
அது இளமை தாகங்கள்

ஆண் : பள்ளியில் துள்ளிடும்
புள்ளிமான் உன்னை நான்
அள்ளுவேன் கிள்ளுவேன்
என் ஆசை தீராதோ
உடல் முழுக்க சுகம் பிறக்க
இது வேளைதானம்மா

ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி

ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி


Movie/Album name: Thaayillamal Naan Illai

Movie Summary A wealthy, carefree man falls in love with a woman, but their romance is threatened by his scheming relatives and a case of mistaken identity involving an illegitimate child, ultimately leading to a courtroom climax that reveals the truth.

Song Credits - Film: Thaayillamal Naan Illai (1979) - Song: Nadiganin Kadhal - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam

Musical Style A melodic, light-hearted romantic duet typical of late-1970s Tamil film music, blending Carnatic-inflected melody with orchestral arrangements featuring strings, flute, and soft percussion.

Key Artists Involved - Actor(s): Kamal Haasan, Sridevi - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan

Scene Context The song is picturized on Kamal Haasan's character, a theatre artist, expressing his love for the heroine (Sridevi) in a playful, romantic setting, reflecting the "actor's love" referenced in the title.


Artists