
Vaada kannae vellaadu
Vaayirundhaal solli vidu
Vaada kannae vellaadu
Vaayirundhaal solli vidu
En oorai paarappa
Nee yaarai polappa
Vaada kannae vellaadu
Vaayirundhaal solli vidu
Munangal…..
Dhinam dhorum pesi kondu
Silai pola ullam kondu
Madhu undu mangai kondu
Vaazhkindra manidhar undu
Avan melae bakthi kollum
Adiyaargal migavum undu
Avan melae bakthi kollum
Adiyaargal migavum undu
Aadendrum mandhai endrum
Avanaithaan sollvadhundu
Oorai paarappa
Nee yaarai polappa
Vaada kannae vellaadu
Vaayirundhaal solli vidu
Munangal…..
Velgindra katchi kandu
Selkkindra manidhar undu
Selvargal pakkam sendru
Jae podum koodam undu
Solgindra vaarthai ellaam
Sonnavudan marappor undu
Aadendrum mandhai endrum
Avanaithaan sollvadhundu
Oorai paarappa
Nee yaarai polappa
Munangal…..
Ulalthil nanjai veithu
Udhatilae thaenai vaithu
Unmaithaan vellum endru
Ubanyaasam seivaar undu
Avan pesum nyaayam ketkka
Aathmaakkal selvadhundu
Aadendrum mandhai endrum
Avanaithaan sollvadhundu
Oorai paarappa
Nee yaarai polappa
Vaada kannae vellaadu
Vaayirundhaal solli vidu
Munangal…..
Nattukku thalaivanendru
Naalu kodi thookki kondu
Veetukku sothu serkum
Veeraadhi veerar undu
Koottathil avarai kandu
Koshangal seivaar undu
Aadendrum mandhai endrum
Avanaithaan sollvadhundu
Oorai paarappa
Nee yaarai polappa
Vaada kannae vellaadu
Vaayirundhaal solli vidu
Vaada kannae vellaadu
Vaayirundhaal solli vidu
எல். ஆர். ஈஸ்வரி
எம். எஸ். விஸ்வநாதன்
கண்ணதாசன்
வாடா கண்ணே வெள்ளாடு
வாயிருந்தால் சொல்லி விடு
வாடா கண்ணே வெள்ளாடு
வாயிருந்தால் சொல்லி விடு
என் ஊரைப் பாரப்பா
நீ யாரைப் போலப்பா
வாடா கண்ணே வெள்ளாடு
வாயிருந்தால் சொல்லி விடு
முனங்கல்.......
தினம் தோறும் பேசி கொண்டு
சிலை போல உள்ளம் கொண்டு
மது உண்டு மங்கை கொண்டு
வாழ்கின்ற மனிதர் உண்டு
அவன் மேலே பக்தி கொள்ளும்
அடியார்கள் மிகவும் உண்டு
அவன் மேலே பக்தி கொள்ளும்
அடியார்கள் மிகவும் உண்டு
ஆடென்றும் மந்தை என்றும்
அவனைத்தான் சொல்வதுண்டு
ஊரைப் பாரப்பா
நீ யாரைப் போலப்பா
வாடா கண்ணே வெள்ளாடு
வாயிருந்தால் சொல்லி விடு
முனங்கல் .............
வெல்கின்ற கட்சி கண்டு
செல்கின்ற மனிதர் உண்டு
செல்வர்கள் பக்கம் சென்று
ஜே போடும் கூடம் உண்டு
சொல்கின்ற வார்த்தை எல்லாம்
சொன்னவுடன் மறப்போர் உண்டு
ஆடென்றும் மந்தை என்றும்
அவனைத்தான் சொல்வதுண்டு
ஊரைப் பாரப்பா
நீ யாரைப் போலப்பா
முனங்கல் .............
உள்ளத்தில் நஞ்சை வைத்து
உதட்டிலே தேனை வைத்து
உண்மைதான் வெல்லும் என்று
உபன்யாசம் செய்வார் உண்டு
அவன் பேசும் நியாயம் கேட்க
ஆத்மாக்கள் செல்வதுண்டு
ஆடென்றும் மந்தை என்றும்
அவனைத்தான் சொல்வதுண்டு
ஊரைப் பாரப்பா
நீ யாரைப் போலப்பா
வாடா கண்ணே வெள்ளாடு
வாயிருந்தால் சொல்லி விடு
முனங்கல் .............
நாட்டுக்குத் தலைவனென்று
நாலு கொடி தூக்கிக் கொண்டு
வீட்டுக்கு சொத்து சேர்க்கும்
வீராதி வீரர் உண்டு
கூட்டத்தில் அவரைக் கண்டு
கோஷங்கள் செய்வார் உண்டு
ஆடென்றும் மந்தை என்றும்
அவனைத்தான் சொல்வதுண்டு
ஊரைப் பாரப்பா
நீ யாரைப் போலப்பா
வாடா கண்ணே வெள்ளாடு
வாயிருந்தால் சொல்லி விடு
வாடா கண்ணே வெள்ளாடு
வாயிருந்தால் சொல்லி விடு
Movie Summary Thanga Durai is a 1972 Tamil film starring M. G. Ramachandran in the lead role, revolving around themes of bravery, loyalty, and social justice.
Song Credits - Song: Vaada Kanne Velladu - Film: Thanga Durai (1972) - Language: Tamil
Musical Style The song follows a folk-inspired Tamil film music style typical of early 1970s cinema, featuring rustic rhythms and colloquial lyrics.
Key Artists Involved - Actor: M. G. Ramachandran (appears in the song)
Scene Context The song appears in a light-hearted or playful sequence featuring the lead actor, consistent with the film's rural setting and MGR's popular on-screen persona.