Vaazhvin Sugam

1959
Lyrics
Language: English

Oo….maathaa…
Thanjamendraen nenjamirangathaa
Unai kenjukindrean seviyum kelaathaa

Vaazhvin sugamithuthaanaa
Ammaa vaazhvin sugamithuthaanaa
Oozhvinai payano ondrum ariyaen

Vaazhvin sugamithuthaanaa
Ammaa vaazhvin sugamithuthaanaa

……………….

Unmaiyai endru nee unarnthiduvaayo
Ullamae kaninthu nee thunai purivaayo
Unmaiyai endru nee unarnthiduvaayo
Ullamae kaninthu nee thunai purivaayo

Penmaiyin thanmaiyai nee arivaayo
Penmaiyin thanmaiyai nee arivaayo
Bedhaiyai sodhanai seivathum muraiyo
Female : Vaazhvin sugamithuthaanaa
Ammaa vaazhvin sugamithuthaanaa

……………….

Kondavar kuname Maariyathae yaeno

……………….

Gunavathi sothari mael veen pazhi yaeno
Kuzhanthaigalaal annai kumaruvathaeno
Kuzhanthaigalaal annai kumaruvathaeno
Kudumba gowravamae kurainthathum yaeno

Kaala sooravaliyil kannagi pennaal
Karpin sigaramaai saaviththiri munnaal
Kadamaiyai thavaraathu anusooyaa annaal
Kankanda anupavam pola
Kaarirul neengum thannaalae
Kalankaathae mayangaathae thayangaathae…

Vaazhvin sugamithuthaanaa
Ammaa vaazhvin sugamithuthaanaa


Language: Tamil

: பி. சுசீலா

ஓ....மாதா
தஞ்சமென்றேன் நெஞ்சமிரங்காதா
உனை கெஞ்சுகின்றேன் செவியும் கேளாதா...

வாழ்வின் சுகமிதுதானா
அம்மா வாழ்வின் சுகமிது தானா
ஊழ்வினைப் பயனோ ஒன்றும் அறியேன்

வாழ்வின் சுகமிதுதானா
அம்மா.....வாழ்வின் சுகமிது தானா

உண்மையை என்று நீ உணர்ந்திடுவாயோ
உள்ளமே கனிந்து நீ துணை புரிவாயோ
உண்மையை என்று நீ உணர்ந்திடுவாயோ
உள்ளமே கனிந்து நீ துணை புரிவாயோ

பெண்மையின் தன்மையை நீ அறிவாயோ
பெண்மையின் தன்மையை நீ அறிவாயோ
பேதையை சோதனை செய்வதும் முறையோ
பெண் : வாழ்வின் சுகமிதுதானா
அம்மா.....வாழ்வின் சுகமிது தானா

கொண்டவர் குணமே மாறியதே ஏனோ

குணவதி சோதரி மேல் வீண் பழி ஏனோ
குழந்தைகளால் அன்னை குமுறுவதேனோ
குழந்தைகளால் அன்னை குமுறுவதேனோ
குடும்ப கௌரவமே குறைந்ததும் ஏனோ

காலச் சூறாவளியில் கண்ணகிப் பெண்ணாள்
கற்பின் சிகரமாய் சாவித்ரி முன்னாள்
கடமையைத் தவறாது அனுசூயா அன்னாள்
கண்கண்ட அனுபவம் போல
காரிருள் நீங்கும் தன்னாலே
கலங்காதே மயங்காதே தயங்காதே.....

வாழ்வின் சுகமிதுதானா
அம்மா.....வாழ்வின் சுகமிது தானா


Movie/Album name: Bhagya Devathai

Artists