Sangeethame En Dheivame

1981
Lyrics
Language: English

Thaanaananaa… thaa naananaa…
Thananana thaa naanaa… thananana thananaa…
Thaanananaa nanaa aa… aa… aa…

Sangeethamae…
Sangeethamae… ae… ae… en dheivamae
Nimmadhi vaanam vidindhidum naeram
Nimmadhi vaanam vidindhidum naeram
Odi vandhaen unnai naan paada

Sangeethamae… ae… ae… en dheivamae

Maalaiyil dheepangal mani tharum naadhangal
Manadhinil aayiram inbam
Maalaiyil dheepangal mani tharum naadhangal
Manadhinil aayiram inbam

Paarthadhu poiyaaga pazham kadhai endraaga
Enakkindru yaen indha thunbam
Enakkindru yaen indha thunbam

Andha thamizh isai kaettu
Ila nenjil ezhundhadhu paattu
Andha kavidhaigal engae
En aasai kanavugal engae
Adhu varumo sugam tharumo
Ini oru murai uyirum thunai varumo
Ini adhu varai aadhaaram ena naan thaediyadhu
Aagaadhadhena yaen aagiyadhu

Nilavilum enadhudal
Anu dhinam suduvadhu
Thanneeril aaraadhu kanneerum maaraadhu

Iniya sangeethamae… ae… ae…
En dheivamae

Ezhisai kaetkaamal ezhil mugam paarkkaamal
Thavithadhu pen manam ondru

Ezhisai kaetkaamal ezhil mugam paarkkaamal
Thavithadhu pen manam ondru

Naayanam kaadhodu dharisanam kannodu
Kidaithadhu nimmadhi indru
Kidaithadhu nimmadhi indru

Vellam thamizh isai vellam
Adhil thullum urugiya ullam

Kallum kani ena aagum
Oru mullum malar ena maarum
Unai maravaen dhinam varuvaen
Isai mazhaiyinil nanaivan
Kavi punaivaen ini ulaginil

Aanandha laya naadhangaludan
Nee thandha isai paerinba sugam

Oru murai maru murai peruvadhil thavaredhu
Ondraana ullangal indraenum sandhikka
Azhaikkum… sangeethamae… en dheivamae…
Nimmadhi vaanam vidindhidum naeram
Odi vandhaen unnai naan paada

Sangeethamae… sangeethamae… sangeethamae…


Language: Tamil

ஜானகி

தானனா.....தானனனா.....
தனனனதானானா...
தனனனா தனனனா.....
தானனனா.....னனனா....ஆ.....ஆ.....ஆ......

சங்கீதமே......
சங்கீதமே.....ஏ.....ஏ......என் தெய்வமே
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
ஓடி வந்தேன் உன்னை நான் பாட

சங்கீதமே.....ஏ.....ஏ......என் தெய்வமே

மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்
மனதினில் ஆயிரம் இன்பம்
மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்
மனதினில் ஆயிரம் இன்பம்

பார்த்தது பொய்யாக பழங்கதை என்றாக
எனக்கின்று ஏனிந்த துன்பம்
எனக்கின்று ஏனிந்த துன்பம்

அந்த தமிழிசை கேட்டு
இள நெஞ்சில் எழுந்தது பாட்டு
அந்த கவிதைகள் எங்கே
என் ஆசை கனவுகள் எங்கே
அது வருமோ சுகம் தருமோ
இனி ஒரு முறை உயிரும் துணை வருமோ
இனி அதுவரை ஆதாரமென நான் தேடியது
ஆகாததென ஏன் ஆகியது

நிலவிலும் எனதுடல்
அனுதினம் முழுவதும்
தண்ணீரில் ஆறாது கண்ணீரும் மாறாது

இனிய சங்கீதமே.....ஏ.....ஏ......
என் தெய்வமே

ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்
தவித்தது பெண் மனம் ஒன்று

ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்
தவித்தது பெண் மனம் ஒன்று

நாயனம் காதோடு தரிசனம் கண்ணோடு
கிடைத்தது நிம்மதி இன்று
கிடைத்தது நிம்மதி இன்று

வெள்ளம் தமிழிசை வெள்ளம்
அதில் துள்ளும் உருகிய உள்ளம்

கல்லும் கனியென ஆகும்
ஒரு முள்ளும் மலரென மாறும்
உனை மறவேன் தினம் வருவேன்
இசை மழையில் நனைவேன்
கவி புனைவேன் இனி உலகினில்

ஆனந்தலய நாதங்களுடன்
நீ தந்த இசை பேரின்ப சுகம்

ஒரு முறை மறுமுறை பெறுவதில் தவறேது
ஒன்றான உள்ளங்கள்
என்றென்றும் சந்திக்க
அழைக்கும்.....சங்கீதமே....என் தெய்வமே......
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
ஓடி வந்தேன் உன்னை நான் பாட

சங்கீதமே...... சங்கீதமே....... சங்கீதமே.......


Movie/Album name: Koyil Puraa

Movie Summary Koyil Puraa is a 1981 Tamil film centered on a love story set against a temple-town backdrop, exploring themes of devotion, social conflict, and the transformative power of music in the protagonists' lives.

Song Credits - Song: Sangeethame En Dheivame - Film: Koyil Puraa (1981) - Language: Tamil - Lyricist: Not reliably documented - Music Director: Not reliably documented - Singer(s): Not reliably documented

Musical Style A devotional-flavored film song blending classical Carnatic aesthetics with light melodic orchestration typical of early 1980s Tamil cinema.


Artists