Samayapurathu Nayagiye

1985
Lyrics
Language: English

Samayapurathu nayagiye
Samayathil kakkum naaraniyae
Samayapurathu nayagiye
Samayathil kakkum naaraniyae

Kaaraniyae bavatharaniyae
Annapooraniyae
Samayapurathu nayagiye
Samayathil kakkum naaraniyae

Veppanjelai uduthiya perkku
Kaappaai nirkkum thayavallavoo
Uriyavargarulum periypaalaiya
Thirukkar vaazhum thaayallavoo

Veppanjelai uduthiya perkku
Kaappaai nirkkum thayavallavoo
Uriyavargarulum periypaalaiya
Thirukkar vaazhum thaayallavoo

Kaettai kalaiyum kottai maariyaai
Saelathil valarum sudarallavoo
Paarkudam Pongal padaipavarkku udhavum
Kolavizhi amman aval allavoo
Samayapurathu nayagiye
Samayathil kakkum naaraniyae

Aadi thaer kondu azhagaai valam varum
Verkaadamarndha arul allavoo
Thiruverkaadamarndha arul allavoo
Aalayamman eyar vilanga
Arulmurai paadum porul allavoo

Dharumathai kaappal thuyargalai theerppaal
Durgai bavani aval allavoo
Karumathai neekki kavalaiyae pokki
Kaikkodukkum kulir nizhal allavoo

Simmavaahini
Chorus : Simmavaahini
Male : Jeganmohini
Chorus : Jeganmohini
Male : Dharmaroopini Kalyani
Chorus : Dharmaroopini Kalyani
Male : Kamalavasini
Chorus : Kamalavasini
Male : Mandhahaasini
Chorus : Mandhahaasini

Kaalabayangara kaamatchi
Chorus : Kaalabayangara kaamatchi

Maalini soolini janani Janani
Sankari eeswari meenatchi
Chorus : Meenatchi

Om shakthi om shakthi
Om shakthi om shakthi
Sarvathirkkum ingu nee saatchi
Chorus : Nee saatchi
Male : Samayapurathaalae saatchi
Om ..om ..om..


Language: Tamil

 : சீர்காழி கோவிந்தராஜன்

கே. வி. மஹாதேவன்

வாலி

சமயபுரத்து நாயகியே
சமயத்தில் காக்கும் நாரணியே
சமயபுரத்து நாயகியே
சமயத்தில் காக்கும் நாரணியே

காரணியே பவதாரணியே
அன்னப்பூரணியே
சமயபுரத்து நாயகியே
சமயத்தில் காக்கும் நாரணியே....

வேப்பஞ் சேலை உடுத்திய பேர்க்கு
காப்பாய் நிற்கும் தயவல்லவோ
உரியவர்க்கருளும் பெரியபாளையத்
திருகர் வாழும் தாயல்லவோ

வேப்பஞ் சேலை உடுத்திய பேர்க்கு
காப்பாய் நிற்கும் தயவல்லவோ
உரியவர்க்கருளும் பெரியபாளையத்
திருகர் வாழும் தாயல்லவோ

கேட்டை களையும் கோட்டை மாரியாய்
சேலத்தில் வளரும் சுடரல்லவோ
பாற்குடம் பொங்கல் படைப்பவர்க்குதவும்
கோலவிழியம்மன் அவளல்லவோ
சமயபுரத்து நாயகியே
சமயத்தில் காக்கும் நாரணியே..

ஆடித் தேர் கொண்டு அழகாய் வலம் வரும்
வேற்காடமர்ந்த அருளல்லவோ
திருவேற்காடமர்ந்த அருளல்லவோ
ஆலயம்மன் திருப்பெயர் விளங்க
அருள்மறை பாடும் பொருளல்லவோ

தருமத்தை காப்பாள் துயர்களை தீர்ப்பாள்
துர்க்கை பவானி அவளல்லவோ
கருமத்தை நீக்கி கவலையை போக்கி
கைக்கொடுக்கும் குளிர் நிழலல்லவோ

சிம்மவாஹினி
குழு : சிம்மவாஹினி
ஆண் : ஜெகன்மோகினி
குழு : ஜெகன்மோகினி
ஆண் : தர்மரூபிணி கல்யாணி
குழு : தர்மரூபிணி கல்யாணி
ஆண் : கமலவாஸினி
குழு : கமலவாஸினி
ஆண் : மந்தஹாசினி
குழு : மந்தஹாசினி
ஆண் : காலபயங்கரி காமாட்சி
குழு : காலபயங்கரி காமாட்சி
ஆண் : மாலினி சூலினி ஜனனி ஜனனி
சங்கரி ஈஸ்வரி மீனாட்சி..
குழு : மீனாட்சி...
ஆண் : ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
சர்வத்திற்க்கும் இங்கு நீ சாட்சி
குழு : நீ சாட்சி
ஆண் : சமயபுரத்தாளே சாட்சி ஓம்... ஓம்... ஓம்


Movie/Album name: Samayapurathale Satchi

Movie Summary A devotional film centered on the power and grace of the goddess Samayapurathu Nayagi, exploring themes of faith, justice, and divine intervention in the lives of her devotees.

Song Credits - Film: Samayapurathale Satchi - Year: 1985 - Song: Samayapurathu Nayagiye - Genre: Devotional (Bhakti)

Musical Style Traditional Tamil devotional music with Carnatic classical influences, typically rendered in a soulful, prayerful manner.

Raga Details Information not available.

Key Artists Involved Information not available.

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists