Enna Dhavam Seidhaen

2011
Lyrics
Language: English

Enna thavam seidhen
Ennaippeththa maganae
Kallukkullae eeram
Kaanacheidha maganae

Haa..aaa haa..haaa aaa haa..(4)

Enna thavam seidhen
Ennaippeththa maganae
Kallukkullae eeram
Kaanacheidha maganae
Thaththivandha pillai nee….. eee…eee…
Thaththivandha pillai nee…..
Petra thandhai naanae
Thandhaiyaana pinbu thaan
Meendum pillayaanen

Enna thavam seidhen
Ennaippeththa maganae
Kallukkullae eeram
Kaanacheidha maganae

…………………………

…………………………..

Buththikkul vanmurai
Valarthirundhen
Raththathil velaanmai
Nadathivandhen
Vaalodu velgal rendum
Pidiththa kaiyil
Vannaththu poochiyai pidiththukkonden

Paasathinaalae paaviyin vaazhvil
Iththanai rusigalaa
Naaththiganaaga vaazhndhavan arugae
Iththanai kadavulaa
Moovar mattum aalgira dhesam
Naangal vaazhvadhu
Paasam ondrae dhesiya geedham
Endrae aanadhu

En viral naduvae idaiveli edharkku
Un viral korththu uravaadathaan
Thuyarangal marandhu vilaiyaadathaan

…………………………….

Sonthangal poi endru
Ninaiththirundhen
Sorkkathin nagal endru
Therindhukkonden..aen….
Bandhangal baaramendru
Veruththirundhen …
Baarangal parisendru purindhukkonden

Mutrum thurandhaal
Motcham enbadhu
Munivargal sonnadhu
Pattrum anbum pagirvadhu thaanae
Motcham enbadhu

Aanavamellaam anbil karaindhaal
Aanandha vellamae
Aayiram aandugal boomiyil vaazhum
Maathirai vendumae

Aaradi kuraindhu arai adiyaagi
Aanmagam madiyil maganaanen
Aazhkadal migundha malaiyaanen

Enna thavam seidhen
Ennaippeththa maganae
Kallukkullae eeram
Kaanacheidha maganae
Thaththivandha pillai nee….. eee…eee…
Thaththivandha pillai nee…..
Petra thandhai naanae
Thandhaiyaana pinbu thaan
Meendum pillayaanen

Haa..aaa haa..haaa aaa haa..(4)
Haa…aaa.haa…aaa…haaa….


Language: Tamil

கே. ஜே. யேசுதாஸ்

என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே

ஹா....ஆ....ஹா....ஹா....ஆ...ஹா....(4)

என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே
தத்தி வந்த பிள்ளை நீ.....ஈ...,ஈ.....
தத்தி வந்த பிள்ளை நீ......
பெற்ற தந்தை நானே
தந்தையான பின்புதான்
மீண்டும் பிள்ளை ஆனேன்

என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

புத்திக்குள் வன்முறை
வளர்த்திருந்தேன்
ரத்தத்தில் வேளாண்மை
நடத்தி வந்தேன்
வாளோடு வேல்கள்
இரண்டும் பிடித்த கையில்
வண்ணத்து பூச்சியை பிடித்து கொண்டேன்

பாசத்தினாலே பாவியின் வாழ்வில்
இத்தனை ருசிகளா
நாத்திகனாக வாழ்ந்தவன் அருகே
இத்தனை கடவுளா
மூவர் மட்டும் ஆள்கிற தேசம்
நாங்கள் வாழ்வது
பாசம் ஒன்றே தேசியகீதம்
என்றே ஆனது

என் விரல் நடுவே இடைவெளி எதற்கு
உன் விரல் கோர்த்து உறவாடத்தான்
துயரங்கள் மறந்து விளையாடத்தான்

சொந்தங்கள் பொய் என்று
நினைத்திருந்தேன்
சொர்க்கத்தின் நகல் என்று
தெரிந்து கொண்டேன்...ஏன்.....
பந்தங்கள் பாரமென்று
வெறுத்திருந்தேன்
பாரங்கள் பரிசென்று
புரிந்து கொண்டேன்

முற்றும் துறந்தால்
மோட்சம் என்பது
முனிவர்கள் சொன்னது
பற்றும் அன்பும் பகிர்வதுதானே
மோட்சம் என்பது

ஆணவம் எல்லாம்
அன்பில் கரைந்தால்
ஆனந்த வெள்ளமே
ஆயிரம் ஆண்டுகள்
பூமியில் வாழும்
மாத்திரை வேண்டுமே

ஆறடி குறைந்து அரையடி ஆகி
ஆண்மகன் மடியில் மகனானேன்
ஆழ்கடல் மிகுந்த மழையானேன்

என்ன தவம் செய்தேன்
என்ன பெத்த மகனே
கல்லுக்குள்ளே ஈரம்
காணச் செய்த மகனே
தத்தி வந்த பிள்ளை நீ.....ஈ...ஈ.....
தத்தி வந்த பிள்ளை நீ......
பெற்ற தந்தை நானே
தந்தையான பின்புதான்
மீண்டும் பிள்ளை ஆனேன்

ஹா....ஆ....ஹா....ஹா....ஆ...ஹா....(4)
ஹா....ஆ....ஹா....ஹா....ஆ...ஹா....


Movie/Album name: Aayiram Vilakku

Movie Summary Aayiram Vilakku is a 2011 Tamil drama about a man who, after a difficult past, finds purpose helping troubled youth, while facing personal and social challenges.

Song Credits - Song: Enna Dhavam Seidhaen - Movie: Aayiram Vilakku (2011) - Singer: Vijay Yesudas - Lyricist: Vaali - Music Director: Srikanth Deva

Musical Style Melodic devotional-style emotional song with a classical Carnatic influence, using traditional orchestration.

Raga Details No confirmed raga details are available.

Key Artists Involved - Composer: Srikanth Deva - Singer: Vijay Yesudas - Lyricist: Vaali

Scene Context The song appears as an emotional devotional plea sequence in the film, expressing a character’s anguish and surrender.


Artists