Sugam Thanaa

1976
Lyrics
Language: English

Sugam thaanaa sollu kannae
Anniyan pol naan ketkiren

Sugam thaanaa pengal ellaam
Vandhaval pol naan ketkiren

Sugam thaanaa sollu kannae
Anniyan pol naan ketkiren

Sugam thaanaa pengal ellaam
Vandhaval pol naan ketkiren

Naan thaedinaal
Kodi kodi penn illaiyaa
Naan thaedinaal
Kodi kodi penn illaiyaa
Oodalaada naanillaiyaa
Oorilenna veedillaiyaa
Endha pennum neeyaagumaa….

Penn enbaval
Ondrai mattum thaan kaangiraal
Penn enbaval
Ondrai mattum thaan kaangiraal
Ondrai enni thaan vaazhgiraal
Oruvan thannai thaan sergiraal
Aanmaikkenna karpillaiyaa
Vandhaval pol naan ketkiren
Vandhaval pol naan ketkiren

Manamaanadhu
Endhan ullam thaayaanadhu
Manamaanadhu
Endhan ullam thaayaanadhu
Ungal nenjam peiyaanadhu
Kaniyum munbu kaayaanadhu
Konji paarkka seiyillaiyae
Konji paarkka seiyillaiyae

Nee sonnadhu
Enna enna nilai maarudhu
Pillai ondrai manam naadudhu
Kollai inbam udal thaedudhu
Ondru saera thadai illaiyae…ae….

Sugam thaanaa pengal ellaam
Vandhaval pol naan ketkiren

Sugam thaanaa sollu kannae
Anniyan pol naan ketkiren

Naal vandhadhu
Deivam vandhu enai kandadhu
Thoodhu solli thunai nindradhu
Mangai unnai thoda chonnadhu
Indha neram pagai illaiyae…ae…

Edhai solvadhu
Sondham thaanae sugam ketpadhu
Vetkam enna idhil vandhadhu
Akkam pakkam yaar paarthadhu…
Penmaikkindru balamillaiyae

Sugam thaanaa sollu kannae
Anniyan pol naan ketkiren

Sugam thaanaa pengal ellaam
Vandhaval pol naan ketkiren


Language: Tamil

சுகம்தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

நான் தேடினால்
கோடி கோடி பெண் இல்லையா
நான் தேடினால்
கோடி கோடி பெண் இல்லையா
ஊடலாட நானில்லையா
ஊரில் என்ன வீடில்லையா
எந்த பெண்ணும் நீயாகுமா

பெண் என்பவள்
ஒன்றை மட்டும்தான் காண்கிறாள்
பெண் என்பவள்
ஒன்றை மட்டும்தான் காண்கிறாள்
ஒன்றை எண்ணித்தான் வாழ்கிறாள்
ஒருவன் தன்னைத்தான் சேர்க்கிறாள்
ஆண்மைக்கென்ன கற்பில்லையா
வந்தவள் போல் நான் கேட்கிறேன்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

மணமானது
எந்தன் உள்ளம் தாயானது
மணமானது
எந்தன் உள்ளம் தாயானது
உங்கள் நெஞ்சம் பேயானது
கனியும் முன்பு காயானது
கொஞ்சிப் பார்க்க சேயில்லையே
கொஞ்சிப் பார்க்க சேயில்லையே

நீ சொன்னது
எண்ண எண்ண நிலை மாறுது
பிள்ளை ஒன்றை மனம் நாடுது
கொள்ளை இன்பம் உடல் தேடுது
ஒன்று சேர தடையில்லையே.....ஏஏ...

சுகம்தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்

நாள் வந்தது
தெய்வம் வந்து என்னைக் கண்டது
தூது சொல்லி துணை நின்றது
மங்கை உன்னை தொடச்சொன்னது
இந்த நேரம் தடை இல்லையே....ஏஏ....

எதை சொல்வது
சொந்தம்தானே சுகம் கேட்பது
வெட்கம் என்ன இதில் வந்தது
அக்கம் பக்கம் யார் பார்த்தது
பெண்மைக்கின்று பயமில்லையே......

சுகம்தானா சொல்லு கண்ணே
அந்நியன் போல் நான் கேட்கிறேன்

சுகம்தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்


Movie/Album name: Manmadha Leelai

Movie Summary Manmadha Leelai is a 1976 Tamil romantic drama about a womanizing playboy whose compulsive pursuit of women leads him through a series of affairs that ultimately leave him emotionally hollow and alone.

Song Credits - Film: Manmadha Leelai (1976) - Song: Sugam Thanaa - Lyricist: Kannadasan - Composer: M. S. Viswanathan - Singers: K. J. Yesudas, P. Susheela

Musical Style A melodious romantic duet in the classic 1970s Tamil film style, blending light classical melodic phrasing with orchestral film arrangements.

Raga Details The song is set in the raga Kalyani (also known as Yaman in Hindustani music).

Key Artists Involved - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: K. J. Yesudas, P. Susheela - Director: K. Balachander

Scene Context The song appears in a romantic sequence depicting the protagonist's courtship and intimate moments with a woman, reflecting the film's theme of sensual attraction and pleasure-seeking.


Artists