Sangam Valartha

1977
Lyrics
Language: English

Evan magan endro naan
Edhirthu nindren
Haa…aa…
Evan magan endro naan edhirthu nindren
Ingae sivan maganai kandu thigaithu nindren
Evan magan endro naan edhirthu nindren
Ingae sivan maganai kandu thigaithu nindren
Unnidamae andru adam pidithen
Unnidamae andru adam pidithen
Indru un thiru nenjinilae idam pidithen

Sangam valartha thamizh neeyallava
Endhan thalamai kavingan indha kugan allava
Swami maganallava gyaana guruvallava
Sangam valartha thamizh neeyallava

Muttaiyil kunjondru veli vandhadhu
Indha moorthi thirumugathil oli vandhadhu
Muttaiyil kunjondru veli vandhadhu
Indha moorthi thirumugathil oli vandhadhu
Pettaiyai sevalaiyum idhu vendrathu
Pettaiyai sevalaiyum idhu vendrathu
En paedhamaiyai indrenakku purigindrathu

Sangam valartha thamizh neeyallava
Endhan thalamai kavingan indha kugan allava
Swami maganallava gyaana guruvallava
Sangam valartha thamizh neeyallava

Paruvathil siriya velava
En pagutharivae neeyallava
Uruvathai kandu igazhvadha
En ullathai kandu pugalvadha

Aadhara moorthi en appanae
Nee ariyaadha pillaiyaa subbanae
Naadha endrae aadinen
En naa thaangum varai paadinen
Paadinen paadinen paadinen…

Sangam valartha thamizh neeyallava
Endhan thalamai kavingan indha kugan allava
Swami maganallava gyaana guruvallava
Sangam valartha thamizh neeyallava


Language: Tamil

டி. எம் . சௌந்தர்ராஜன்

கே. வி. மஹாதேவன்

கண்ணதாசன்

எவன் மகன் என்றோ நான்
எதிர்த்து நின்றேன்..ஹா..ஆ...
எவன் மகன் என்றோ நான் எதிர்த்து நின்றேன்
இங்கே சிவன் மகனைக் கண்டு திகைத்து நின்றேன்
எவன் மகன் என்றோ நான் எதிர்த்து நின்றேன்
இங்கே சிவன் மகனைக் கண்டு திகைத்து நின்றேன்
உன்னிடமே அன்று அடம் பிடித்தேன்
உன்னிடமே அன்று அடம் பிடித்தேன்
இன்று உன் திரு நெஞ்சினிலே இடம் பிடித்தேன்

சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா
எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா
சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா
சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா.....

முட்டையில் குஞ்சொன்று வெளிவந்தது
இந்த மூர்த்தி திருமுகத்தில் ஒளி வந்தது
முட்டையில் குஞ்சொன்று வெளிவந்தது
இந்த மூர்த்தி திருமுகத்தில் ஒளி வந்தது
பெட்டையைச் சேவலையும் இது வென்றது
பெட்டையைச் சேவலையும் இது வென்றது
என் பேதைமை இன்றெனக்குப் புரிகின்றது....

சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா
எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா
சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா
சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா.....

பருவத்தில் சிறிய வேலவா என்
பகுத்தறிவே நீயல்லவா
உருவத்தைக் கண்டு இகழ்வதா
என் உள்ளத்தைக் கண்டு புகழ்வதா

ஆதார மூர்த்தி என் அப்பனே
நீ அறியாத பிள்ளையா சுப்பனே
நாதா என்றே ஆடினேன் என்
நா தாங்கும் வரை பாடினேன்
பாடினேன் பாடினேன் பாடினேன்
சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா........

சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா
எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா
சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா
சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா.....


Movie/Album name: Murugan Adimai

Movie Summary Murugan Adimai is a 1977 Tamil devotional film centered on Lord Murugan, focusing on themes of faith, devotion, and the transformative power of belief in the deity.

Song Credits - Film: Murugan Adimai (1977) - Song: Sangam Valartha - Language: Tamil - Genre: Devotional (Bhakti)

Musical Style Devotional Tamil film song in the Bhakti tradition, typically featuring classical Carnatic-influenced melodies with orchestral accompaniment.


Artists