
Haa…aaa…aaa….
Pakkarai visithiramani porkalanai itta nadai
Patchi enum ukkurathuragamum neepa
Pakkarai visithiramani porkalanai itta nadai
Patchi enum ukkurathuragamum neepa
Pakkuva malar thodaiyum akkuvadu pattozhiya
Patturuva vittu arul kai vadivelum
Thikku adhu madhikka varu
Kukkudamum ratchai tharum
Sittru adiyum muttriya panniru thozhum
Thikku adhu madhikka varu
Kukkudamum ratchai tharum
Sittru adiyum muttriya panniru thozhum
Seipadhiyum vaithu uyar thirupugazh viruppamodu
Seppena enakku arul sei maravenae
Ikku avarai narkanigal
Sarkkarai paruppudan nei
Ell pori aval thuvarai ilaneer
Ikku avarai narkanigal
Sarkkarai paruppudan nei
Ell pori aval thuvarai ilaneer
Vandu echil payiru appa vagai pacharisipittu
Vellaripazham idipalvagai thani moolam
Mikka adisil kadalai
Patchanam enakkol oru
Vikkinasamarththan enum arul aazhi
Mikka adisil kadalai
Patchanam enakkol oru
Vikkinasamarththan enum arul aazhi
Verppa kudila sadila vil paramar appar arul
Vithaga maruppu udaiya perumaalae
டி. எம். சொந்தர்ராஜன்
டி . ஆர். பாப்பா
ஹா.....ஆஅ.....ஆஅ......
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப்
பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப்
பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே
இக்கு, அவரை, நற்கனிகள்,
சர்க்கரை, பருப்புடன் நெய்
எள், பொரி, அவல், துவரை இளநீர்
இக்கு, அவரை, நற்கனிகள்,
சர்க்கரை, பருப்புடன் நெய்
எள், பொரி, அவல், துவரை இளநீர்
வண்டு எச்சில், பயறு, அப்ப வகை, பச்சரிசி பிட்டு
வெள்ளரிப் பழம், இடிப் பல்வகை, தனிமூலம்
மிக்க அடிசில், கடலை,
பட்சணம் எனக்கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி
மிக்க அடிசில், கடலை,
பட்சணம் எனக்கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி
வெற்ப! குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்
வித்தக! மருப்பு உடைய பெருமாளே!
Movie Summary A biographical film on the life of the 15th-century Tamil saint-poet Arunagirinathar, his early life of excess, his redemption, and his composition of the Thiruppugazh hymns.
Song Credits - Song: Pakkarai Visithiramani - Film: Arunagirinathar (1964) - Lyricist: Arunagirinathar (traditional Thiruppugazh verse)
Scene Context The song appears in the film as one of the Thiruppugazh hymns rendered in praise of Lord Murugan, picturized on the saint-poet Arunagirinathar.