Thirumal Azhaga

1987
Lyrics
Language: English

Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum

Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum

Paanjaalikaaga andru thugil thandha kannaa
Ival konda kolam naan peravendum manna
Paanjaalikaaga andru thugil thandha kannaa
Ival konda kolam naan peravendum manna

Andam yaavaiyum undhan kaalgalil
Alandhu nindravane
Andru undhan perinai sonna yaanaiyin
Thunbam theerthavane
Vaadum poongodikae megam pol varuga
Mangai vaazhvadharkkae anbu thaen tharuga

Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum

Kallaana ondru un kaal theenda kandu
Ponnanadhendru deiva kadhai ingu undu
kallai pennena
Mannai ponnena maattrum maayavane
Ival maalai soodida
Maargam thandharul seethai naayagane

Thandhai kattalaiyai thalaiyil yettravane
Endhan vaarthaigalai yerpaai raghavane

Nallorgal vaazha
Perum kodiyorai kondraai
Nallorgal vaazha
Perum kodiyorai kondraai
Narasimma moorthi ennum avadharamkondaai
Narasimma moorthi ennum avadharamkondaai

Annai boomiyai kombil
yettriya vadivam nee allavaa
Indha kanni poovaiyai
Vanna paavaiyai neeyum kaathidavaa
Neelam poothavane sogam theerthida vaa
Gnyalam kaathavanae sabam neekkidavaa

Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum


Language: Tamil

: பி. சுஷீலா

எம். எஸ். விஸ்வநாதன்

கே. பி. அறிவானந்தம்

திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்

திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்
நீ வரவேண்டும் அருள் தரவேண்டும்
என் அழகெல்லாம் இவள் பெறவேண்டும்..

பாஞ்சாலிக்காக அன்று துகில் தந்த கண்ணா
பாஞ்சாலிக்காக அன்று துகில் தந்த கண்ணா
இவள் கொண்ட கோலம் நான் பெறவேண்டும் மன்னா
இவள் கொண்ட கோலம் நான் பெறவேண்டும் மன்னா

அண்டம் யாவையும் உந்தன் கால்களில்
அளந்து நின்றவனே
அன்று உந்தன் பேரினை சொன்ன யானையின்
துன்பம் தீர்த்தவனே
வாடும் பூங்கொடிக்கே மேகம் போல் வருக
மங்கை வாழ்வதற்கே அன்பு தேன் தருக

திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்

கல்லான ஒன்று உன் கால் தீண்ட கண்டு
பெண்ணானதென்று தெய்வக் கதை இங்கு உண்டு
கல்லை பெண்ணென மண்ணை
பொன்னென மாற்றும் மாயவனே
இவள் மாலை சூடிட மார்க்கம்
தந்தருள் சீதை நாயகனே

தந்தை கட்டளையை தலயில் ஏற்றவனே
எந்தன் வார்த்தைகளை ஏற்பாய் ராகவனே

நல்லோர்கள் வாழ
பெரும் கொடியோரைக் கொன்றாய்
நல்லோர்கள் வாழ
பெரும் கொடியோரைக் கொன்றாய்
நரசிம்ம மூர்த்தி என்னும் அவதாரம் கொண்டாய்
நரசிம்ம மூர்த்தி என்னும் அவதாரம் கொண்டாய்

அன்னை பூமியை கொம்பில்
ஏற்றிய வடிவம் நீயல்லவா
இந்த கன்னிப் பூவையை
வண்ணப் பாவையை நீயும் காத்திடவா
நீலம் பூத்தவனே சோகம் தீர்த்திட வா
ஞாலம் காத்தவனே சாபம் நீக்கிடவா

திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்....


Movie/Album name: Mupperum Deviyar

Artists