Vanthaanga Mappillai

1961
Lyrics
Language: English

Ettadha kani melae kottavi vittaanaam
Haaa …aaa aaa
Mudavan kittadha thaen melae
Vattaram pottaanaam
Aa..aa..aa..aa..haaa aa

Adhai polae

Vandhaanga maappillainga vaanaram pola
Kurathi vanji pennayae mayakki maalaiya poda
Female and Chorus : Vandhaanga maappillainga vaanaram pola
Kurathi vanji pennayae mayakki maalaiya poda
Vandhaanga maappillainga

Vaayadi veeran valainji odavae
Chorus : Haa..aaa..aaa…
Female : Vayadhu sendra kizham thallattam podavae
Varattu pavalan vaayaiyum moodavae
Chorus : Thananae thannaanae Thananae thannaanae
Female : Mariyaadhai izhandhaarae veen madhiyaale

Kannae illadhavan kaatchiyai paakkuraan
Chorus : Aamam pakkuraan
Female : Kaadhae illadhavan kanathai ketkkuraan
Chorus : Aamam ketkkuraan
Female : Onnumae illadhavan ooraiyae yeikkuraan
Udhavaadha aan ellaam yen valai veesuraan
Chorus : Yen valai veesuraan
Female : Pennalae veeram pongum naatilae
Puriyamal ariyaamal aasaiyinaalae


Language: Tamil

ஜி. ராமநாதன்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

எட்டாத கனி மேலே கொட்டாவி விட்டானாம்
ஹா ..ஆ..ஆ..ஆ
முடவன் கிட்டாத தேன் மேலே
வட்டாரம் போட்டானாம்
ஆ....ஆ.....ஆ.....ஆ.....

அதைப் போலே

வந்தாங்க மாப்பிள்ளைங்க வானரம் போல
குறத்தி வஞ்சி பெண்ணையே மயக்கி மாலை போட....
பெண் மற்றும் குழு : வந்தாங்க மாப்பிள்ளைங்க வானரம் போல
குறத்தி வஞ்சி பெண்ணையே மயக்கி மாலை போட...
வந்தாங்க மாப்பிள்ளைங்க

வாயாடி வீரன் வளைஞ்சி ஓடவே
குழு : ஹா ..ஆ..ஆ..
பெண் : வயது சென்ற கிழம் தள்ளாட்டம் போடவே
வரட்டுப் பாவலன் வாயையும் மூடவே
குழு : தானனே தன்னானே தானனே தன்னானே
பெண் : மரியாதை இழந்தாரே வீண் மதியாலே..

வந்தாங்க மாப்பிள்ளைங்க வானரம் போல
குறத்தி வஞ்சி பெண்ணையே மயக்கி மாலை போட...
வந்தாங்க மாப்பிள்ளைங்க

கண்ணே இல்லாதவன் காட்சியை பாக்குறான்
குழு : ஆமாம் பாக்குறான்
பெண் : காதே இல்லாதவன் கானத்தை கேக்குறான்
குழு : ஆமாம் கேக்குறான்
பெண் : ஒண்ணுமே இல்லாதவன் ஊரையே ஏய்க்கிறான்
உதவாத ஆணெல்லாம் ஏன் வலை வீசுறான்
குழு : ஏன் வலை வீசுறான்
பெண் : பெண்ணாலே வீரம் பொங்கும் நாட்டிலே
புரியாமல் அறியாமல் ஆசையினாலே...

வந்தாங்க மாப்பிள்ளைங்க வானரம் போல
குறத்தி வஞ்சி பெண்ணையே மயக்கி மாலை போட...
வந்தாங்க மாப்பிள்ளைங்க


Movie/Album name: Srivalli

Movie Summary Srivalli (1961) is a Tamil film starring Sivaji Ganesan and Padmini, revolving around family bonds, devotion, and the triumph of virtue over adversity.

Song Credits - Song: Vanthaanga Mappillai - Movie: Srivalli (1961) - Music Director: G. Ramanathan - Lyricist: Not reliably documented - Singers: Not reliably documented

Musical Style A festive, celebratory Tamil film song in a light classical style, typically orchestrated with nadaswaram, tavil, and lively percussion suited to a wedding or welcome sequence.

Raga Details Not reliably documented.

Key Artists Involved - G. Ramanathan (Composer) - Sivaji Ganesan and Padmini (Lead actors)

Awards & Recognition Not applicable / Not documented.

Scene Context The song is a celebratory welcome number, traditionally picturized as the groom (mappillai) arrives, fitting a wedding or festive gathering sequence in the film.


Artists