Thalaattum Kaatre

2001
Lyrics
Language: English

Male : ……………………….

Male : Thalaatum kaatrae vaa
Thalaikodhum viralae vaa
Tholai dhoora nilavae vaa
Thoda vendum vaanae vaa

Male : Un chinna idhazh mutham thinaamal
En jenmam veenendru poveno
Un vanna thiru meni seraamal
En vayathu paalendru aaveno
Un azhagu rajaangam aalaamal
En aavi sirithagi poveno

Male : { Ennuyire neethaano } (2)

Male : Thalaatum kaatrae vaa
Thalaikodhum viralae vaa
Tholai dhoora nilavae vaa
Thoda vendum vaanae vaa

Male : Kannukul kan vaithu
Kan imaiyaal kan thadavi
Chinnathoru singaram
Seiyaamal poveno

Male : Pechilantha velaiyilae
Pen azhagu en maarbil
Muchu vidum rasanaiyai
Mugaraamal poveno

Male : Un kattu koondhal kaatil
Nulaiyaamal poveno
Athil kalla thaenai konjam
Varugamal poveno

Male : { Nee paadhi thookathil pulambuvathai
Oli padhivu naan seiya maateno } (2)
Nee oodal kondaadum pozhuthugalil
Athai unaku oli parapa maateno
Ennuyire neethaano
Ennuyire- aeae neethaano

Male : Thalaatum kaatrae vaa
Thalaikodhum viralae vaa

Male : Oru naal oru pozhudhu
Un madiyil naan irunthu
Thirunaal kaanamal
Setholindhu poveno

Male : Thalai ellam pookal poothu
Thallaadum marameri
Ilai ellaam un perai
Eluthaamal poveno

Male : Un paadham vaangi nenjil
Padhiyaamal poveno
Un kanneer echil rusiyai
Ariyaamal poveno

Male : { Un udalai uyir vittu ponaalum
En uyirai unnodu paaicheno } (2)
Un angam engengum uyiraagi
Nee vaazhum varai naanum vaazhveno
{ En urimai neethaano } (2)

Male : Thalaatum kaatrae vaa
Thalaikodhum viralae vaa
Tholai dhoora nilavae vaa
Thoda vendum vaanae vaa

Male : Un chinna idhazh mutham thinaamal
En jenmam veenendru poveno
Un vanna thiru meni seraamal
En vayathu paalendra aaveno
Un azhagu rajaangam aalaamal
En aavi sirithagi poveno

Male : { Ennuyire neethaano } (2)
Neethaano ………..


Language: Tamil

பாடகா் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : ……………………………..

ஆண் : தாலாட்டும் காற்றே
வா தலை கோதும் விரலே
வா தொலை தூர நிலவே
வா தொட வேண்டும் வானே
வா

ஆண் : உன் சின்ன இதழ்
முத்தம் தின்னாமல் என்
ஜென்மம் வீணென்று
போவேனோ உன் வண்ண
திருமேனி சேராமல் என்
வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ

ஆண் : என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ

ஆண் : தாலாட்டும் காற்றே
வா தலை கோதும் விரலே
வா தொலை தூர நிலவே
வா தொட வேண்டும் வானே
வா

ஆண் : கண்ணுக்குள்
கண் வைத்து கண்
இமையால் கண் தடவி
சின்னதொரு சிங்காரம்
செய்யாமல் போவேனோ

ஆண் : பேச்சிழந்த
வேளையிலே பெண்
அழகு என் மார்பில்
மூச்சு விடும் ரசனையை
முகராமால் போவேனோ

ஆண் : உன் கட்டு
கூந்தல் காட்டில்
நுழையாமல் போவேனோ
அதில் கள்ள தேனை
கொஞ்சம் வருகாமல்
போவேனோ

ஆண் : { நீ பாதி தூக்கத்தில்
புலம்புவதை ஒலிப்பதிவு
நான் செய்ய மாட்டேனோ } (2)
நீ ஊடல் கொண்டாடும்
பொழுதுகளில் அதை உனக்கு
ஒளி பரப்ப மாட்டேனோ
என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ

ஆண் : தாலாட்டும் காற்றே
வா தலை கோதும் விரலே
வா

ஆண் : ஒரு நாள் ஒரு
பொழுது உன் மடியில்
நான் இருந்து திருநாள்
காணாமல் செத்தொளிந்து
போவேனோ

ஆண் : தலையெல்லாம்
பூக்கள் பூத்து தள்ளாடும்
மரமேறி இலையெல்லாம்
உன் பேரை எழுதாமல்
போவேனோ

ஆண் : உன் பாதம்
வாங்கி நெஞ்சில்
பதியாமல் போவேனோ
உன் கண்ணீர் எச்சில்
ருசியை அறியாமல்
போவேனோ

ஆண் : { உன் உடலை
உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு
பாய்ச்சேனோ } (2)
உன் அங்கம் எங்கெங்கும்
உயிராகி நீ வாழும் வரை
நானும் வாழ்வேனோ
என் உரிமை நீ தானோ
என் உரிமை நீ தானோ

ஆண் : தாலாட்டும் காற்றே
வா தலை கோதும் விரலே
வா தொலை தூர நிலவே
வா தொட வேண்டும் வானே
வா

ஆண் : உன் சின்ன இதழ்
முத்தம் தின்னாமல் என்
ஜென்மம் வீணென்று
போவேனோ உன் வண்ண
திருமேனி சேராமல் என்
வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ

ஆண் : என்னுயிரே நீ தானோ
என்னுயிரே நீ தானோ நீ தானோ

 


Movie/Album name: Poovellam Un Vasam

Movie Summary Poovellam Un Vasam is a 2001 Tamil romantic drama about two neighbouring families, the Chinnadurai and Rajasekhar households, whose long-standing friendship is tested when the son and daughter of the two families fall in love, leading to emotional conflict before eventual reconciliation.

Song Credits - Song: Thalaattum Kaatre - Movie: Poovellam Un Vasam - Year: 2001 - Composer: Vidyasagar - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style Melodic Tamil film duet with a gentle, lullaby-like quality, soft orchestration, and prominent use of flute and strings.

Raga Details Not available.

Key Artists Involved - Vidyasagar (Composer) - Vairamuthu (Lyricist) - S. P. Balasubrahmanyam, K. S. Chithra (Singers) - Ajith Kumar, Jyothika (On-screen performers)

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists