Retakili Rekkai

1997
Lyrics
Language: English

……………..

Rettakili rekkai virikkum
Intha vetta veli alakka
Chorus : Sam sam sam sam
Male : Ettu thisai etti parakkum
Manam kattavizhnthu kidakka
Chorus : Sam sam sam sam

Ninaiththaal pothum neelam pooththa
Neduvaanam nam kaikettum
Male : Niraiveraathu kadhal endru
Pirar pesum sol poikkattum
Female : Ammaadiyo neeyindri naan ennaavatho

Rettakili rekkai virikkum
Intha vetta veli alakka
Chorus : Sam sam sam sam

……………….

Chinna chinna thooralgalai
Thenpothigai megam
Sintha sintha silendruthaan sillittathu thegam
Pinni pinni nee anaiththaal pullariththu pogum
Innum innum enna sugamo

Vandu vanthu vaayai vaiththu
Oothukindra poovae
Vinnai vittu mannai thotta
Vatta vennilavae
Unnai vittu naanirunthaal vaazhkkai oru theevae

Piravi varum yaezhu tharam
Nee thoda naan varuvaen
Male : Aa…..iniyum oru thanimaiyillai
Vaazhnthidum naal varaithaan
Female : Pookkolam raakkolam podaamal viduvenaa

Rettakili rekkai virikkum
Intha vetta veli alakka
Chorus : Sam sam sam sam

……………….

Vanna mani chiththiramae
Unnidaththil kettu
Vaangi konda muththangalai
Vattigalai pottu
Thanthuvida vanthiruken kannangalai kaattu
Ovonnaaga enni tharavaa

Muththamittu muththamittu
Patta kaayam pothum
Manjalaiththaan naan araiththu
Poosinaalthaan pogum
Meal udhadum keezh udhadum
Maelum maelum nogum
Indru sendru naalai varavaa

Othunguvathaen padhunguvathaen
Kooradi maanguyilae
Female : Haa….unarchiyilae narambugalae
Oduthu maalaiyilae
Male : Yaenendru naanindru sollaamal puriyaathaa

Rettakili rekkai virikkum
Intha vetta veli alakka
Chorus : Sam sam sam sam
Male : Ettu thisai etti parakkum
Manam kattavizhnthu kidakka
Chorus : Sam sam sam sam

Ninaiththaal pothum neelam pooththa
Neduvaanam nam kaikettum
Male : Niraiveraathu kadhal endru
Pirar pesum sol poikkattum
Female : Ammaadiyo neeyindri naan ennaavatho


Language: Tamil

ரெட்டகிளி ரெக்கை விரிக்கும்
இந்த வெட்டவெளி அளக்க
குழு : சம் சம் சம் சம்
ஆண் : எட்டு திசை எட்டி பறக்கும்
மணம் கட்டவிழ்ந்து கிடக்க
குழு : சம் சம் சம் சம்

நினைத்தால் போதும் நீலம் பூத்த
நெடுவானம் நம் கைக்கெட்டும்
ஆண் : நிறைவேறாது காதல் என்று
பிறர் பேசும் சொல் பொய்க்கட்டும்
பெண் : அம்மாடியோ நீயின்றி நான் என்னாவதோ

ரெட்டகிளி ரெக்கை விரிக்கும்
இந்த வெட்டவெளி அளக்க
குழு : சம் சம் சம் சம்

சின்ன சின்ன தூறல்களை
தென்பொதிகை மேகம்
சிந்த சிந்த சில்லென்றுதான் சில்லிட்டது தேகம்
பின்னி பின்னி நீ அணைத்தால் புல்லரித்து போகும்
இன்னும் இன்னும் என்ன சுகமோ

வண்டு வந்து வாயை வைத்து
ஊதுகின்ற பூவே
விண்ணை விட்டு மண்ணை தொட்ட
வட்ட வெண்ணிலாவே
உன்னை விட்டு நானிருந்தால் வாழ்க்கை ஒரு தீவே
ஒட்டி ஒட்டி வந்த உறவோ

பிறவி வரும் ஏழு தரம்
நீ தொட நான் வருவேன்
ஆண் : ஆ.....இனியும் ஒரு தனிமையில்லை
வாழ்ந்திடும் நாள் வரைதான்
பெண் : பூக்கோலம் ராக்கோலம் போடாமல் விடுவேனா

ரெட்டகிளி ரெக்கை விரிக்கும்
இந்த வெட்டவெளி அளக்க
குழு : சம் சம் சம் சம்

வண்ண மணி சித்திரமே
உன்னிடத்தில் கேட்டு
வாங்கிக் கொண்ட முத்தங்களை
வட்டிகளை போட்டு
தந்துவிட வந்திருக்கேன் கன்னங்களை காட்டு
ஒவ்வொன்னாக எண்ணி தரவா

முத்தமிட்டு முத்தமிட்டு
பட்ட காயம் போதும்
மஞ்சளைத்தான் நான் அரைத்து
பூசினால்தான் போகும்
மேல் உதடும் கீழ் உதடும்
மேலும் மேலும் நோகும்
இன்று சென்று நாளை வரவா

ஒதுங்குவதேன் பதுங்குவதேன்
கூறடி மாங்குயிலே
பெண் : ஹா.. உணர்ச்சியிலே நரம்புகளே
ஓடுது மாலையிலே
ஆண் : ஏனென்று நானின்று சொல்லாமல் புரியாதா

ரெட்டகிளி ரெக்கை விரிக்கும்
இந்த வெட்டவெளி அளக்க
குழு : சம் சம் சம் சம்
ஆண் : எட்டு திசை எட்டி பறக்கும்
மணம் கட்டவிழ்ந்து கிடக்க
குழு : சம் சம் சம் சம்

நினைத்தால் போதும் நீலம் பூத்த
நெடுவானம் நம் கைக்கெட்டும்
ஆண் : நிறைவேறாது காதல் என்று
பிறர் பேசும் சொல் பொய்க்கட்டும்
பெண் : அம்மாடியோ நீயின்றி நான் என்னாவதோ


Movie/Album name: Bharathi Kannamma

Movie Summary: Bharathi Kannamma is a 1997 Tamil drama about a kind-hearted man, Bharathi, and his love for a village girl, Kannamma, exploring themes of love, sacrifice, and social barriers.

Song Credits: - Movie: Bharathi Kannamma (1997) - Song: Retakili Rekkai - Singer: P. Unnikrishnan - Music Director: Ilaiyaraaja - Lyricist: Pazhani Bharathi

Musical Style: Melodic film song with folk influences, typical of Ilaiyaraaja's orchestration using acoustic instruments, flute, and strings.

Key Artists Involved: - Lyricist: Pazhani Bharathi - Music Director: Ilaiyaraaja - Singer: P. Unnikrishnan


Artists