
Male : Vaazhvae vaa vaazhvom vaa
Female : Nee engae naan angae
Male : Dhevan dhevi vilaiyaattu
Thevai endraal thalaiyaattu
Female : Naan thaan aadum ilang keetru
Nee thaan modhum pani kaattru
Male : Vaazhvae vaa vaazhvom vaa
Female : Nee engae naan angae
Male : Paalil neer pola ennodu serndha
Paavai neeyallavo
Female : Dhegam neengaadha melaadai pola
Thevai neeyallavo
Male : Kaanaadhadhai naan kaanavae
Kaalangal kai koodumo
Female : Aa… ilai maraivaaga kani irundhaalum
Male : Manam varum podhu anil vara koodum
Female : Kaai pazhuthaal kaiyil vizhum
Male : Vaazhvae vaa
Female : Vaazhvom vaa
Female : Veenai naanaaga nee meettta vendum
Maalai pozhudhallavaa
Male : Raagam thaalanghal naan kaattum podhu
Dhaagam varumallavaa
Female : Dhaagangalai theerthaalenna
Neerodai neeyallavaa
Male : Aa… thani idam paatthu thalirudal serthu
Female : Thazhuvida neeyum nazhuvida naanum
Male : Naanam enna oodal enna
Female : Vaazhvae vaa
Male : Vaazhvom vaa
Nee engae
Female : Naan angae
Male : Dhevan dhevi vilaiyaattu
Thevai endraal thalaiyaattu
Female : Naan thaan aadum ilang keetru
Nee thaan modhum pani kaattru
Male : Vaazhvae vaa vaazhvom vaa…vaa vaa
Female : Nee engae naan angae
ஆண் : வாழ்வே வா வாழ்வோம் வா
பெண் : நீ எங்கே நான் அங்கே
ஆண் : தேவன் தேவி விளையாட்டு
தேவை என்றால் தலையாட்டு
பெண் : நான்தான் ஆடும் இளங்கீற்று
நீ தான் மோதும் பனிக் காற்று
ஆண் : வாழ்வே வா வாழ்வோம் வா
பெண் : நீ எங்கே நான் அங்கே
ஆண் : பாலில் நீர் போல என்னோடு சேர்ந்த
பாவை நீயல்லவோ
பெண் : தேகம் நீங்காத மேலாடை போல
தேவை நீயல்லவோ
ஆண் : காணாததை நான் காணவே
காலங்கள் கை கூடுமோ
பெண் : ஆ… இலை மறைவாக கனி இருந்தாலும்
ஆண் : மணம் வரும் போது அணில் வரக் கூடும்
பெண் : காய் பழுத்தால் கையில் விழும்
ஆண் : வாழ்வே வா
பெண் : வாழ்வோம் வா
பெண் : வீணை நானாக நீ மீட்ட வேண்டும்
மாலை பொழுதல்லவா
ஆண் : ராகம் தாளங்கள் நான் காட்டும் போது
தாகம் வருமல்லவா
பெண் : தாகங்களை தீர்த்தாலென்ன
நீரோடை நீயல்லவா
ஆண் : ஆ… தனி இடம் பார்த்து தளிருடல் சேர்த்து
பெண் : தழுவிட நீயும் நழுவிட நானும்
ஆண் : நாணம் என்ன ஊடல் என்ன
பெண் : வாழ்வே வா
ஆண் : வாழ்வோம் வா
நீ எங்கே
பெண் : நான் அங்கே
ஆண் : தேவன் தேவி விளையாட்டு
தேவை என்றால் தலையாட்டு
பெண் : நான்தான் ஆடும் இளங்கீற்று
நீ தான் மோதும் பனிக் காற்று
ஆண் : வாழ்வே வா வாழ்வோம் வா வா வா
பெண் : நீ எங்கே நான் அங்கே…
Movie Summary: Saadhanai (1986) is a Tamil drama centered on the struggles and aspirations of its protagonists as they confront life's challenges and pursue their goals.
Song Credits: - Song: Vaazhvae Vaa - Movie: Saadhanai (1986) - Language: Tamil
Musical Style: Melodious Tamil film song of the 1980s, blending classical-inflected melody with orchestral arrangements typical of the era.
Key Artists Involved: Information not available.