Vizhuthe Thalavizhuthe

2025
Lyrics
Language: English

Vizhuthae thala vizhuthae
Thadam pirinja adhu paavam
Maramae veragaagidum
Thavippae en thavippae
Anal analaa adhu kaayum
Uravae marundhaa varum

Yaarodu naan pesuven
Kural indriyae
Nadakkindra nadhi aagiren
Nee indriyae

Yaaru vecha kannu idhu
Sikkal aagi poyiduchu
Indha vali thaangalaiye
Seekirama seruvoma

Sondha bandha kootathula
Unna mattum kaanavilla
Suthi sanam noor irundhum
Nee illanaa yaarum illa

Thala vizhuthae thani vazhi
Thadam pirinja adhu paavam
Maramae veragaagidum

Yaaru vitta saabam idhu
Vaanam vaththi poyiduchu
Koyillila saami illa
Devamaa nee vanthidamma

Sollu patta kaayathukku
Thalli nikka theva illa
Nenjukulla moochillaiyae
Thedi vandhu kaathidamma


Language: Tamil

விழுதே தலை விழுதே
தடம் பிரிஞ்சா அது பாவம்
மரமே வெறகாகிடும்
தவிப்பே என் தவிப்பா
அனல் அனலா அது காயும்
உறவே மருந்தா வரும்

யாரோடு நான் பேசுவேன்
குரல் இன்றியே
நடக்கின்ற நதி ஆகின்றேன்
நீ இன்றியே

தாயே என் தாயே
தனியே நான் இங்கே
வா இங்கே எதிர் பார்க்கிறேன்
அரும்பே என் அக்கா
எங்கே நீ எங்கே
வா இங்கே எதிர் பார்க்கிறேன்

யாரு வச்ச கண்ணு இது
சிக்கல் ஆகி போயிடுச்சு
இந்த வழி தாங்கலையே
சீக்கிரமா சேருவோமா

சொந்த பந்த கூட்டத்துல
உன்ன மட்டும் காணவில்லை
சுத்தி சனம் நூறு இருந்தும்
நீ இல்லன்னா யாரும் இல்ல

தலை விழுதே தனி வழி
தடம் பிரிஞ்சா அது பாவம்
மரமே வெறகாகிடும்

யாரு விட்ட சாபம் இது
வானம் வத்தி போயிடுச்சு
கோயிலில்ல சாமி இல்ல
தெய்வமா நீ வந்திடம்மா

சொல்லு பட்ட காயத்துக்கு
தள்ளி நிக்க தேவ இல்ல
நெஞ்சுக்குள்ள மூச்சில்லையே
தேடி வந்து காத்திடம்மா

தலை விழுதே தனி வழி
தடம் பிரிஞ்சா அது பாவம்
மரமே வெறகாகிடும்


Movie/Album name: Maaman

Artists