Kanden Kalyana Pe

1976
Lyrics
Language: English

Male : Kandaen kalyaan pen pondra megam
Kandaen kalyaan pen pondra megam
Angae ullaasa orvala odam
Manamagan manamagal manavarai kolamae

Female : Kandaen kalyaan pen pondra megam
Angae ullaasa orvala odam

Female : Sempon meenaatchi nadaththum rajangam
Sirikkum poonthottamo
Idhu selai munthaanai virikkum poomaadhu
Aadum kondaattamo

Male : Alaigal neerottam amman thaerottam
Paruvam pennaattamo
Pani malaigal thaalaattum malargal paaraattum
Kalaigal vellottamo

Female : Siru aththaani muththaaramo
Intha aththaanin achchaaramo
Siru aththaani muththaaramo
Intha aththaanin achchaaramo

Male : Rajavin vattaaramo
Intha rajaththi viththaaramo

Female : Kandaen kalyaan pen pondra megam
Male : Angae ullaasa orvala odam
Female : Manamagan
Male : Manamagal
Both : Manavarai kolamae

Male : Idaiyin meedhaaga valaiyum vannangal
Ilamai poopanthalo
Ilaiyum moodaamal thalaiyum vaaraamal
Asaiyum pon pookkalo

Female : Nadaiyil annangal adaiyum illangal
Idaiyil vaiththaargalo
Nalina ponmaeni suvaiyai paarendru
Unakke thanthaargalo

Male : Sugam ondraaga vaiththaargalo
Nammai ondraakka vaiththargalo
Female : Kann paarkka vaiththaargalo
Unnai pen paarkka vaiththaargalo

Male : Kandaen kalyaan pen pondra megam
Female : Angae ullaasa orvala odam

Male : Varisai palmuththu azhagu poongoththu
Nagaiyil naan aadavaa
Vadhana sevvalli sariyum vannaththil
Medhuvaai naan paadavaa

Female : Adimai pennenum udamai unnodu
Adhigam naan sollavaa
Anaikkum kayundu rasikkum pennundu
Paruvam thaenallavaa

Male : Naan kannaadi paarththaalenna
Female : Adhai kannaththil paarththaalenna
Male : Nenjaththai paarththaalenna
Female : Adhai manjaththil paarththaalenna

Female : Kandaen kalyaan pen pondra megam
Male : Angae ullaasa orvala odam
Female : Manamagan
Male : Manamagal
Both : Manavarai kolamae


Language: Tamil

ஆண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறைக் கோலமே

பெண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்

பெண் : செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம்
சிரிக்கும் பூந்தோட்டமோ
இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது
ஆடும் கொண்டாட்டமோ

ஆண் : அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவப் பெண்ணாட்டமோ
பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ

பெண் : சிறு அத்தாணி முத்தாரமோ
இந்த அத்தானின் அச்சாரமோ
சிறு அத்தாணி முத்தாரமோ
இந்த அத்தானின் அச்சாரமோ

ஆண் : ராஜாவின் வட்டாரமோ
இந்த ராஜாத்தி வித்தாரமோ

பெண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
ஆண் : அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
பெண் : மணமகன்
ஆண் : மணமகள்
இருவர் : மணவறைக் கோலமே

ஆண் : இடையின் மீதாக வளையும் வண்ணங்கள்
இளமைப் பூப்பந்தலோ
இலையும் மூடாமல் தலையும் வாராமல்
அசையும் பொன் பூக்களோ

பெண் : நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள்
இடையில் வைத்தார்களோ
நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று
உனக்கே தந்தார்களோ

ஆண் : சுகம் ஒன்றாக வைத்தார்களோ
நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ
பெண் : கண் பார்க்க வைத்தார்களோ
உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ

ஆண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
பெண் : அங்கே உல்லாச ஊர்வல ஓடம்

ஆண் : வரிசைப் பல்முத்து அழகுப் பூங்கொத்து
நகையில் நான் ஆடவா
வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில்
மெதுவாய் நான் பாடவா

பெண் : அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு
அதிகம் நான் சொல்லவா
அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு
பருவம் தேனல்லவா

ஆண் : நான் கண்ணாடி பார்த்தாலென்ன
பெண் : அதைக் கன்னத்தில் பார்த்தாலென்ன
ஆண் : நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன
பெண் : அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன

பெண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
ஆண் : அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
பெண் : மணமகன்
ஆண் : மணமகள்
இருவர் : மணவறைக் கோலமே…


Movie/Album name: Mayor Meenakshi

Movie Summary Mayor Meenakshi is a 1976 Tamil film centered on a woman who becomes the mayor of a city and navigates the challenges of public office, family expectations, and political rivalry.

Song Credits - Song: Kanden Kalyana Pen - Film: Mayor Meenakshi - Year: 1976 - Music: V. Kumar - Lyrics: Kannadasan - Singers: P. Susheela, Vani Jairam

Musical Style The song is a melodic Tamil film duet/light classical piece typical of 1970s cinema, blending Carnatic-influenced phrases with orchestral arrangements.

Raga Details No confirmed raga information is available for this song.

Key Artists Involved - Music Director: V. Kumar - Lyricist: Kannadasan - Singers: P. Susheela, Vani Jairam

Awards & Recognition No major awards are recorded specifically for this song.

Scene Context The song appears in a celebratory or festive sequence, likely picturized on the female lead and supporting characters as part of the film’s social/marriage-related narrative.


Artists