Vaazhnthal Ungalai

1973
Lyrics
Language: English

Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae

Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae

Azhagazhagaa thilagam adhu appa thantha idhayam
Anbu malaril vaasam ponguthae
Azhagazhagaa thilagam adhu appa thantha idhayam
Anbu malaril vaasam ponguthae
Veettu kadhaigal pesi thaai vizhi irandum sivanthu
Kamalam pol katchiyalikkuthae

Thaai konda mangalam poo vanna kungumam
Naan kolla vendiyae deviyai venduvaen
Thulluthu thulluthu punnagai kannangalae
Ullam ennuthu ennuthu aayiram ennangalae

Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae

Seval kumaran manathu than deivayaanai kandu
Sinthu paadum inbam ennavo
Kadhal naduvil vanthu intha kumari seiyyum kurumbum
Poojai neram karadiyaanatho

Naan ennum ennangal naalaiya mappillai
Peranbu thanthaiyin saayalil vendumae
Nallaram enbathu valluvan sonnathuthaan
Illaram enbathu ippadi ullathuthaan

Vaazhnthaal ungalai pol vaazha vendum
Vayasaana kaalaththilum nesam vendum
Konjuthu konjuthu kadhalum kangalilae
Innum kottuthu kottuthu melamum nenjinilae


Language: Tamil

: எஸ். ஜானகி

வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே

வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே

அழகழகா திலகம் அது அப்பா தந்த இதயம்
அன்பு மலரில் வாசம் பொங்குதே
அழகழகா திலகம் அது அப்பா தந்த இதயம்
அன்பு மலரில் வாசம் பொங்குதே
வீட்டு கதைகள் பேசி தாய் விழி இரண்டும் சிவந்து
கமலம் போல் காட்சியளிக்குதே

தாய் கொண்ட மங்கலம் பூ வண்ணக் குங்குமம்
நான் கொள்ள வேண்டியே தேவியை வேண்டுவேன்
துள்ளுது துள்ளுது புன்னைகைக் கன்னங்களே
உள்ளம் எண்ணுது எண்ணுது ஆயிரம் எண்ணங்களே

வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே

சேவல் குமரன் மனது தன் தெய்வயானை கண்டு
சிந்து பாடும் இன்பம் என்னவோ
காதல் நடுவில் வந்து இந்தக் குமரி செய்யும் குறும்பு
பூஜை நேரம் கரடியானதோ

நான் எண்ணும் எண்ணங்கள் நாளைய மாப்பிள்ளை
பேரன்புத் தந்தையின் சாயலில் வேண்டுமே
நல்லறம் என்பது வள்ளுவன் சொன்னதுதான்
இல்லறம் என்பது இப்படி உள்ளதுதான்

வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் நேசம் வேண்டும்
கொஞ்சுது கொஞ்சுது காதலும் கண்களிலே
இன்னும் கொட்டுது கொட்டுது மேளமும் நெஞ்சினிலே


Movie/Album name: Sontham (1973)

Movie Summary Sontham (1973) is a Tamil drama centered on family relationships, duty, and sacrifice, revolving around a hardworking man who strives to support and protect his loved ones while navigating personal and domestic conflicts.

Song Credits - Song: Vaazhnthal Ungalai - Movie: Sontham (1973) - Language: Tamil - Year: 1973

Musical Style - Film song (Tamil cinematic music) - Melody-oriented, emotional playback style typical of early 1970s Tamil cinema

Key Artists Involved - Playback Singer: T. M. Soundararajan


Artists