Unnai Paarthu

1969
Lyrics
Language: Tamil

ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து
உன் நிழலும் வெறுக்கிறது
உன் செயலைப் பார்த்து
உன் நிழலும் வெறுக்கிறது

ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது

ஆண் : பாடும் பறவை
பாயும் மிருகம்
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே
சூழ்ச்சிகள் இல்லை

ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது

ஆண் : சேவல் கூட தூங்கும் உலகை
கூவி எழுப்பும் குரலாலே

ஆண் : ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே

ஆண் : இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே

ஆண் : இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே
ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஹாஹா……

ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது

ஆண் : வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ

ஆண் : வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ

ஆண் : அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ

ஆண் : அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ
அவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ
ஆ….ஆ….ஆ….ஆஹாஹா……

ஆண் : உன்னைப் பார்த்து
இந்த உலகம் சிரிக்கிறது

ஆண் : நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
ஆ….ஆ….ஆ….ஆஹாஹா……

ஆண் : தோன்றத்தான் போகிறது
சம உரிமை சமுதாயம்

ஆண் : மறையத்தான் போகிறது
தலை வணங்கும் அநியாயம்…..
மலரத்தான் போகிறது
எங்களது புது வாழ்வு….
மாறத்தான் போகிறது
மனிதா உன் விளையாட்டு….


Language: English

Male : Unnai paarthu
Indha ulagam sirikkiradhu
Unnai paarthu
Indha ulagam sirikkiradhu
Un seyalai paarthu
Un nizhalum verukkiradhu
Un seyalai paarthu
Un nizhalum verukkiradhu

Male : Unnai paarthu
Indha ulagam sirikkiradhu

Male : Paadum paravai
Paayum mirugam
Paadum paravai paayum mirugam
Ivaigalukkellaam paguttharivillai
Aanaal avaigalukkullae soozhchighal illai

Male : Unnai paarthu
Indha ulagam sirikkiradhu

Male : Saeval kooda thoongum ulagai
Koovi ezhuppum kuralaalae

Male : Yeval seiyum kaaval kaakkum
Naaigalum thanghal gunathaalae

Male : Irai kidaithaalum illai endraalum
Uravai valarkkum kaakkaigalae

Male : Irai kidaithaalum illai endraalum
Uravai valarkkum kaakkaigalae
Inathai inamae pagaippadhellaam
Manidhan vagutha vaazhkkaiyilae…
Aaa… aaa… aaa… aaahhahaa…

Male : Unnai paarthu
Indha ulagam sirikkiradhu

Male : Vaanil neendhum megam kandaal
Vanna mayilgal aadaadho

Male : Vaazhai polae thogai viriya
Valar pirai aayiram thondraadho

Male : Azhagum kalaiyum vaazhum naadu
Aandavan veedaai thigazhaadho

Male : Azhagum kalaiyum vaazhum naadu
Aandavan veedaai thigazhaadho
Avaigalai ellaam azhikka ninaithaal
Sarithiram unnai igazhaadho…
Aa… aa…aa… aaahhahaa…

Male : Unnai paarthu
Indha ulagam sirikkiradhu

Male : Nee kadavulai paarthadhu kidaiyaadhu
Avan karuppaa sigappaa theriyaadhu
Nee kadavulai paarthadhu kidaiyaadhu
Avan karuppaa sigappaa theriyaadhu
Iraivan oruvan irukkindraan
Indha ezhaighal uzhaippil sirikkindraan
Iraivan oruvan irukkindraan
Indha ezhaighal uzhaippil sirikkindraan…
Aa…aaa… aaa… aahhahaa…

Male : Thondra thaan pogiradhu
Sama urimai samudhaayam…

Male : Maraiya thaan pogiradhu
Thani manidhan aniyaayam…
Malara thaan pogiradhu
Engaladhu pudhu vaazhvu…
Maara thaan pogiradhu
Manidhaa un vilaiyaattu…


Movie/Album name: Adimai Penn

Unnai Paarthu (1969) - Adimai Penn

Summary of the Movie:
Adimai Penn is a 1969 Tamil drama film directed by K. Shankar, starring M.G. Ramachandran (MGR) and Jayalalithaa in lead roles. The film revolves around themes of social justice, love, and sacrifice, with MGR playing a righteous man fighting against oppression.

Song Credits:
- Lyrics: Kannadasan
- Music: K.V. Mahadevan

Musical Style & Raga Details:
- Musical Style: Classic Tamil film song with a blend of Carnatic and light music influences.
- Raga: Likely based on Kalyani or Shankarabharanam, given the melodic structure (exact raga details may vary).

Key Artists Involved:
- Singers: T.M. Soundararajan (for MGR) & P. Susheela (for Jayalalithaa)
- Cast (On-Screen Performers): M.G. Ramachandran, Jayalalithaa

Awards & Recognition:
- No specific awards recorded for this song, but the film was a commercial success and well-received.

Scene Context:
The song "Unnai Paarthu" is a romantic duet between MGR and Jayalalithaa’s characters, expressing their love and admiration for each other. It is likely set in a picturesque outdoor location, typical of romantic sequences in MGR films.

(Note: Some details, such as the exact raga, may not be officially documented.)


Artists