Sepparum Kalviyum

1987
Lyrics
Language: English

Sepparum kalviyum selvamum veeramum
Mupperum deviyar arulvadhendroo
Pugazh maevida vaazhvadhum maenmakkal aavadhum
Deviyar moovarin karunaiyandroo…ooo….

Saraswathi latchumi paarvathi
Saraswathi latchumi paarvathi
Indha moovarin vasam thaan manidharin thalaividhi
Indha moovarin vasam thaan manidharin thalaividhi
Saraswathi latchumi paarvathi

Vattil sumandhu vandhaal cholan magal
Aaa ..haaa..aa..aaa
Itta adi noga edutha adi koppalikka
Vattil sumandhu vandhaal cholan magal
Aval vadivazhagai isaithaan kamban magan
Avan kuttram kalaivadharkku koodaiyilae
Kotti kizhangu vittraal engal kalaimagalae

ஒOttrakoothan kavidhai solla
Aval kattupattadhai ezhudhi veithaal
Sandha paadal vadivam kolla
Aval vanna sendhamizh ulavi nindraal
Pootha kamalam thannil vilangiduvaal
Adi pottrum yaarkkum kalvi vizhangiduvaal
Aa aa aa
Saraswathi latchumi paarvathi

Deiva perum pulavan poiyaamozhi
Avan thaaram arasan pettra vannakkili
Deiva perum pulavan poiyaamozhi
Avan thaaram arasan pettra vannakkili

Aval selvam peridhu endru virumbhi nindraal
Konda thalaivanai adharkaaga vasai pozhindhaal
Sivakaviyin maanam andru kaathathu yaar
Porul kanaga mazhai pola vaarthathu yaar
Aazhi thannil pirandha alaimagalae
Nee vaazhi vaazhi engal thirumagalae…ye ye ye ye..
Saraswathi latchumi paarvathi

Mukkann mudhalvan avan nenjanaithaval
Dhikku dhisai adhira sanjarithaval
Gnyaana roobini madurai valar meenalotchani

Dhagadhimiyena silamboli ezha nadamidum padham
Adiyavar thozha aadum soozhini
Kadhamba malar soodum maalini

Kuzhandhai azhumbodhu paal koduthaal
Thirukumaran vilaiyaada vel koduthaal
Veeram vilaivadhingu evaraale
Engal durgai annaiyaval arulaale..ye ye ye ye..

Saraswathi latchumi paarvathi
Indha moovarin vasam thaan manidharin thalaividhi
Indha moovarin vasam thaan manidharin thalaividhi
Saraswathi latchumi paarvathi


Language: Tamil

: டி. எம். சௌந்தராஜன்

எம். எஸ். விஸ்வநாதன்

கே. பி. அறிவானந்தம்

செப்பரும் கல்வியும் செல்வமும் வீரமும்
முப்பெரும் தேவியர் அருள்வதன்றோ
புகழ் மேவிட வாழ்வதும் மேன்மக்கள் ஆவதும்
தேவியர் மூவரின் கருணையன்றோ..ஓஓஒ....

சரஸ்வதி லட்சுமி பார்வதி
சரஸ்வதி லட்சுமி பார்வதி
இந்த மூவரின் வசம் தான் மனிதரின் தலைவிதி
இந்த மூவரின் வசம் தான் மனிதரின் தலைவிதி
சரஸ்வதி லட்சுமி பார்வதி

வட்டில் சுமந்து வந்தாள் சோழன் மகள்..
ஆஆஆ....ஹா ஆஅ ஆஅ
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து வந்தாள் சோழன் மகள்
அவள் வடிவழகை இசைத்தான் கம்பன் மகன்
அவன் குற்றம் களைவதற்கு கூடையிலே
கொட்டிக் கிழங்கு விற்றாள் எங்கள் கலைமகளே

ஒற்றக்கூத்தன் கவிதை சொல்ல
அவள் கட்டுப்பட்டதை எழுதி வைத்தாள்
சந்தப் பாடல் வடிவம் கொள்ள
அவள் வண்ண செந்தமிழ் உலவி நின்றாள்
பூத்த கமலம் தன்னில் விளங்கிடுவாள்
அடி போற்றும் யார்க்கும் கல்வி வழங்கிடுவாள்...
ஆஆஆ....
சரஸ்வதி லட்சுமி பார்வதி.....

தெய்வப் பெரும் புலவன் பொய்யாமொழி
அவன் தாரம் அரசன் பெற்ற வண்ணக்கிளி
தெய்வப் பெரும் புலவன் பொய்யாமொழி
அவன் தாரம் அரசன் பெற்ற வண்ணக்கிளி

அவள் செல்வம் பெரிது என்று விரும்பி நின்றாள்
கொண்ட தலைவனை அதற்காக வசை பொழிந்தாள்
சிவகவியின் மானம் அன்று காத்தது யார்
பொருள் கனக மழைப் போல வார்த்தது யார்
ஆழி தன்னில் பிறந்த அலைமகளே
நீ வாழி வாழி எங்கள் திருமகளே...ஏ..ஏ..ஏ...ஏ..
சரஸ்வதி லட்சுமி பார்வதி.....

முக்கண் முதல்வன் அவன் நெஞ்சணைத்தவள்
திக்கு திசை அதிர சஞ்சரித்தவள்
ஞான ரூபிணி மதுரை வளர் மீனலோசனி

தகதிமியென சிலம்பொலி எழ நடமிடும் பதம்
அடியவர் தொழ ஆடும் சூலினி
கதம்ப மலர் சூடும் மாலினி

குழந்தை அழும்போது பால் கொடுத்தாள்
திருக்குமரன் விளையாட வேல் கொடுத்தாள்
வீரம் விளைவதிங்கு எவராலே
எங்கள் துர்க்கை அன்னையவள் அருளாலே...ஏ..ஏ..ஏ...ஏ..

சரஸ்வதி லட்சுமி பார்வதி
இந்த மூவரின் வசம் தான் மனிதரின் தலைவிதி
இந்த மூவரின் வசம் தான் மனிதரின் தலைவிதி
சரஸ்வதி லட்சுமி பார்வதி


Movie/Album name: Mupperum Deviyar

Movie Summary Mupperum Deviyar is a 1987 Tamil devotional film that narrates the stories of three great goddesses—Durga, Lakshmi, and Saraswati—highlighting their divine power and benevolence.

Song Credits - Song: Sepparum Kalviyum - Film: Mupperum Deviyar - Year: 1987

Musical Style Devotional Tamil film song with a classical Carnatic influence.

Raga Details Not available.

Key Artists Involved Not available.

Scene Context Not available.


Artists