
Male : Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Female : Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Male : {Vanatthukku azhagu
Female : Pasumai
Male : Vaarthaikku azhagu
Female : Inimai
Male : Kulathukku azhagu
Female : Thaamarai
Nam mugatthukku azhagu punnagai} (2)
Both : Sirikka therindhaal podhum
Male : Iravum pagalum undu
Vaazhvil ilamaiyum mudhumaiyum undu
Iravum pagalum undu
Vaazhvil ilamaiyum mudhumaiyum undu
Female : Uravum pagaiyum undu
Enum unmaiyiai nenjil kondu
Uravum pagaiyum undu
Enum unmaiyiai nenjil kondu
Both : Sirikka therindhaal podhum
Female : Thuyar nerungaadhu
Nammai orupodhum
Both : Sirikka therindhaal podhum
Female : {Uravai valarppadhu
Male : Anbu
Female : Mana niraivai tharuvadhu
Male : Panbu
Female : Porumaiyai alippadhu
Male : Sirippu
Idhai purindhavar adaivadhu kalippu} (2)
Both : Sirikka therindhaal podhum
Female : Manidhan maaruvadhillai
Avan maaridil manidhanae illai
Manidhan maaruvadhillai
Avan maaridil manidhanae illai
Male : Vandhidum avanaal thollai
Nee sindhithu paar en sollai
Vandhidum avanaal thollai
Nee sindhithu paar en sollai
Male : Sirikka therindhaal podhum
Female : Thuyar nerungaadhu
Nammai orupodhum
ஆண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
ஆண் : {வனத்துக்கு அழகு
பெண் : பசுமை
ஆண் : வார்த்தைக்கு அழகு
பெண் : இனிமை
ஆண் : குளத்துக்கு அழகு
பெண் : தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை} (2)
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
ஆண் : இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
பெண் : உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : {உறவை வளர்ப்பது
ஆண் : அன்பு
பெண் : மன நிறைவைத் தருவது
ஆண் : பண்பு
பெண் : பொறுமையை அளிப்பது
ஆண் : சிரிப்பு
இதை புரிந்தவர் அடைவது களிப்பு} (2)
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
ஆண் : வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
பெண் : துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
Movie Summary: Madappura (1962) is a Tamil film centered on family dynamics and social themes, featuring a narrative built around relationships, duty, and emotional conflict.
Song Credits: Song: Kka Therindhaal Podhum; Movie: Madappura; Year: 1962; Language: Tamil.
Musical Style: Tamil film song from the early 1960s, blending melodic film music with light classical and folk-influenced phrasing typical of the era.
Key Artists Involved: Information not available.
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.