Kaatrin Mozhi (Female)

2007
Lyrics
Language: English

Female : Kaatrin mozhi oliyaa isaiyaa
Poovin mozhi niramaa manamaa
Kadalin mozhi alaiyaa nuraiyaa
Kaadhal mozhi vizhiyaa idhazhaa

Female : Iyarkaiyin mozhigal purinthuvidil
Manitharin mozhigal thevai illai
Idhayathin mozhigal purinthuvidil
Manitharku mozhiyae thevai illai….

Female : Kaatrin mozhi oliyaa isaiyaa
Poovin mozhi niramaa manamaa

Female : Kaatru veesum bothu
Thisaigal kidayaathu
Kaadhal pesum bothu
Mozhigal kidaiyaathu

Female : Pesum vaarthai pola
Mounam puriyaathu
Kangal pesum vaarthai
Kadavul ariyaathu

Female : Ulavi thiriyum kaatruku
Uruvam theeta mudiyaathu
Kaadhal pesum mozhiyellam
Sabthakootil adangaathu

Female : Iyarkaiyin mozhigal purinthuvidil
Manitharin mozhigal thevai illai
Idhayathin mozhigal purinthuvidil
Manitharku mozhiyae thevai illai….

Female : Kaatrin mozhi…..

Female : Vaanam pesum pechu
Thuliyaai veliyaagum
Vaanavillin pechu
Niramaai veliyaagum

Female : Unmai oomai aanal
Kaneer mozhi aagam
Pennmai oomai aanal
Naanam mozhi aagum

Female : Osai thoongum jaamathil
Uchchi meengal mozhiyaagum
Aasai thoongum idhayathil
Asaivu kooda mozhiyaagum

Female : Iyarkaiyin mozhigal purinthuvidil
Manitharin mozhigal thevai illai
Idhayathin mozhigal purinthuvidil
Manitharku mozhiyae thevai illai….

Female : Kaatrin mozhi oliyaa isaiyaa
Poovin mozhi niramaa manamaa
Kadalin mozhi alaiyaa nuraiyaa
Kaadhal mozhi vizhiyaa idhazhaa

Female : Iyarkaiyin mozhigal purinthuvidil
Manitharin mozhigal thevai illai
Idhayathin mozhigal purinthuvidil
Manitharku mozhiyae thevai illai….

Female : Kaatrin mozhi…..

 


Language: Tamil

பெண் : காற்றின் மொழி
ஒலியா இசையா பூவின்
மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா
நுரையா காதல் மொழி
விழியா இதழா

பெண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை

பெண் : காற்றின் மொழி
ஒலியா இசையா பூவின்
மொழி நிறமா மணமா

பெண் : காற்று வீசும் போது
திசைகள் கிடையாது காதல்
பேசும் போது மொழிகள்
கிடையாது

பெண் : பேசும் வார்த்தை
போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை
கடவுள் அறியாது

பெண் : உலவித்திரியும்
காற்றுக்கு உருவம் தீட்ட
முடியாது காதல் பேசும்
மொழியெல்லாம்
சப்தக்கூட்டில் அடங்காது

பெண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை

பெண் : காற்றின் மொழி

பெண் : வானம் பேசும்
பேச்சு துளியாய்
வெளியாகும் வான
வில்லின் பேச்சு நிறமாய்
வெளியாகும்

பெண் : உண்மை
ஊமையானால் கண்ணீர்
மொழியாகும் பெண்மை
ஊமையானால் நாணம்
மொழியாகும்

பெண் : ஓசைதூங்கும்
ஜாமத்தில் உச்சி மீன்கள்
மொழியாகும் ஆசைதூங்கும்
இதயத்தில் அசைவுகூட
மொழியாகும்

பெண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை

பெண் : காற்றின் மொழி
ஒலியா இசையா பூவின்
மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா
நுரையா காதல் மொழி
விழியா இதழா

பெண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை

பெண் : காற்றின் மொழி


Movie/Album name: Mozhi

Movie Summary Mozhi is a 2007 Tamil romantic drama about a musician, Karthik, who falls in love with a deaf-mute woman, Archana, and must learn to communicate with her through sign language and understanding rather than speech.

Song Credits - Song: Kaatrin Mozhi (Female) - Film: Mozhi (2007) - Singer: Sujatha Mohan - Composer: Vidyasagar - Lyricist: Vairamuthu

Musical Style Melodic, soft, melodious Tamil film song with a gentle, semi-classical and acoustic-pop flavour.

Raga Details The song is primarily based on the Carnatic raga Charukesi.

Key Artists Involved - Composer: Vidyasagar - Lyricist: Vairamuthu - Female Singer: Sujatha Mohan - Director: Radha Mohan - Actors: Jyothika, Prithviraj Sukumaran, Prakash Raj

Awards & Recognition - Vairamuthu won the Tamil Nadu State Film Award for Best Lyricist for the songs of Mozhi. - The film's music, including this song, was widely acclaimed and won several awards.

Scene Context The female version is picturised on Jyothika’s character, Archana, expressing her inner feelings and emotional world as a deaf-mute woman who experiences love and longing through silence, sign, and sensation rather than sound.


Artists