Oru Pizhaiyum

1952
Lyrics
Language: English

Oru pizhaiyum seidhariyaen
Anbu ondrae ullamadhil kondu
Naam vaazhndhu vandhen
Perum pazhigal paesi
Ennai varuthukindraar
Padhari udal thudikkumindha velaiyilum
Ariyamai niraindha indha makkalukkae
Arivu varum naalai enni yenghugiren
Thirundhaadha makkal kulam thirundhudharkkae
Jeevan thandha periyorgal kodi kodi kodi

Arasanendra nilai thurandhu aandiyaaghi
Avathiyurum makkalukkae buthappiraan paadupattaar
Perumbaara siluvai thannai thookka solli
Pirambhu kondu adithittaar yesu thannai

Orumaiyudan vaazhvadharkkae maargam sonna
Uthamaramaam mohamadu kallaal adippattar
Param porulae theeyaal ennai erikkindraarae
Paavam seiyum ivargalai nee mannippayae

Eesaa mann meedhilae
Eesaa mann meedhilae
Theemaigal maaindhaega seivaai neeyae
Eesaa mann meedhilae
Theemaigal maaindhaega seivaai neeyae
Meelaadha paavangal seivorum vaazhvil
Meelaadha paavangal seivorum vaazhvil
Seeriya maanidae aagidavae
Seeriya maanidae aagidavae
Eesaa mann meedhilae
Theemaigal maaindhaega seivaai neeyae
Eesaa….


Language: Tamil

எம். கே. தியாகராஜ பாகவதர்

ஜி. ராமநாதன்

கா. மா. ஷெரிப்

ஒரு பிழையும் செய்தறியேன்
அன்பு ஒன்றே உள்ளமதில் கொண்டு
நான் வாழ்ந்து வந்தேன்
பெரும் பழிகள் பேசி
என்னை வருத்துகின்றார்
பதறி உடல் துடிக்குமிந்த வேளையிலும்.....
அறியாமை நிறைந்த இந்த மக்களுக்கே
அறிவு வரும் நாளை எண்ணி ஏங்குகிறேன்
திருந்தாத மக்கள் குலம் திருந்துதற்கே
ஜீவன் தந்த பெரியோர்கள் கோடி கோடி கோடி

அரசனென்ற நிலை துறந்து ஆண்டியாகி
அவதியுறும் மக்களுக்கே புத்தபிரான் பாடுபட்டார்
பெரும்பாரச் சிலுவை தன்னை தூக்கச் சொல்லி
பிரம்பு கொண்டு அடித்திட்டார் இயேசு தன்னை

ஒருமையுடன் வாழ்வதற்கே மார்க்கம் சொன்ன
உத்தமராம் முகம்மது கல்லால் அடிபட்டார்
பரம்பொருளே தீயால் என்னை எரிக்கின்றாரே
பாவம் செய்யும் இவர்களை நீ மன்னிப்பாயே

ஈசா மண்மீதிலே
ஈசா மண்மீதிலே
தீமைகள் மாய்ந்தேகச் செய்வாய் நீயே
ஈசா மண்மீதிலே
தீமைகள் மாய்ந்தேகச் செய்வாய் நீயே
மீளாத பாவங்கள் செய்வோரும் வாழ்வில்
மீளாத பாவங்கள் செய்வோரும் வாழ்வில்
சீரிய மானிடர் ஆகிடவே.....
சீரிய மானிடர் ஆகிடவே.....
ஈசா மண்மீதிலே
தீமைகள் மாய்ந்தேகச் செய்வாய் நீயே
ஈசா ......


Movie/Album name: Amarakavi

Movie Summary Amarakavi (1952) is a Tamil film based on the life of the legendary poet Kambar, portraying his struggles, devotion, and literary triumphs.

Song Credits - Song: Oru Pizhaiyum - Film: Amarakavi (1952) - Music Director: G. Ramanathan - Lyricist: Kambadasan - Singers: M. K. Thyagaraja Bhagavathar

Musical Style Classical Carnatic-based film music typical of early 1950s Tamil cinema, with emphasis on melodic devotion and dramatic expression.

Raga Details Not available.

Key Artists Involved - M. K. Thyagaraja Bhagavathar (singer-actor) - G. Ramanathan (composer) - Kambadasan (lyricist)

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists