Nee Vanthaal Naan

1967
Lyrics
Language: English

Nee vandhaal naan kandaal
Nenjilae orae idhu
Yedhyedho aasaigalaal
Inbathaale orae idhu

Nee endraal en nenjil
Naal ellaam orae idhu
Thaenaaru paaivadhanaal
Angum ingum orae idhu

Kanna maedaiyil pandhaadalamaa
Kaadhal vaaram kondada laama
Female : Ennam polae sollaadalaama
Idhaym mayangi thallaadalaama

Unnum podhum urangum podhum
Oivillaadha orae idhu
Male : Orae idhu…orae idhu
Female : Idhae adhu idhae adhu

Nee vandhaal naan kandaal
Nenjilae irae idhu
Female : Thaenaaru paaivadhanaal
Angum ingum orae idhu

Azhagu odaiyil nera aadalaama
Anbu oonjalil ilaipaaralaama
Male : Ilamai thaeril parandhodalaam
Irandil ondrai naam kaanalaama

Ninaikkum bodhum anaikkum bodhum
Nerukkamaana orae dhu
Female : Orae idhu…orae idhu
Male : Idhae adhu idhae adhu

Nee vandhaal naan kandaal
Nenjilae irae idhu
Female : Thaenaaru paaivadhanaal
Angum ingum orae idhu
Angum ingum orae idhu


Language: Tamil

டி. கே. ராமமூர்த்தி

கண்ணதாசன்

நீ வந்தால் நான் கண்டால்
நெஞ்சிலே ஒரே இது
ஏதேதோ ஆசைகளால்
இன்பத்தாலே ஒரே இது...

நீ என்றால் என் நெஞ்சில்
நாளெல்லாம் ஒரே இது
தேனாறு பாய்வதனால்
அங்கும் இங்கும் ஒரே இது..

கன்ன மேடையில் பந்தாடலாமா
காதல் வாரம் கொண்டாடலாமா
பெண் : எண்ணம் போலே சொல்லாடலாமா
இதயம் மயங்கி தள்ளாடலாமா

உண்ணும் போதும் உறங்கும் போதும்
ஓய்வில்லாத ஒரே இது
ஆண் : ஒரே இது.......ஒரே இது.....
பெண் : இதே அது........அதே இது......

நீ வந்தால் நான் கண்டால்
நெஞ்சிலே ஒரே இது
பெண் : தேனாறு பாய்வதனால்
அங்கும் இங்கும் ஒரே இது..

அழகு ஓடையில் நீராடலாமா
அன்பு ஊஞ்சலில் இளைப்பாறலாமா
ஆண் : இளமை தேரில் பறந்தோடலாமா
இரண்டில் ஒன்றை நாம் காணலாமா

நினைக்கும் போதும் அணைக்கும் போதும்
நெருக்கமான ஒரே இது
பெண் : ஒரே இது.......ஒரே இது.....
ஆண் : இதே அது........அதே இது......

நீ வந்தால் நான் கண்டால்
நெஞ்சிலே ஒரே இது
பெண் : தேனாறு பாய்வதனால்
அங்கும் இங்கும் ஒரே இது..
அங்கும் இங்கும் ஒரே இது..

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம் ம்ம்ம்


Movie/Album name: Pattathu Rani

Artists