Ennadi Ennadi

1985
Lyrics
Language: English

Ennadi ennadi mariamma
Ingu ellaam unadhu kariyama
Sollaadi solladi sathiyama
Ne solliya saatchi sathiyama

Ennadi ennadi mariamma
Ingu ellaam unadhu kariyama
Sollaadi solladi sathiyama
Ne solliya saatchi sathiyama
Ennadi ennadi mariamma

Naana sonnen theerppu inghu
Nanmaikkum theemaikkum needhaanae kappu
Naana sonnen theerppu inghu
Nanmaikkum theemaikkum needhaanae kappu
Nakkil vandhadhu vaakku
En nakkil vandhadhu vaakku
Adhu sariyoo thavaroo nee thelivakku
Ennadi ennadi mariamma

Oorar vaazhkai theerhu vaippen
Adhil naanthaan needhipadhi
Indru enakkor vazhakku unnidathil
Idhil needhaan needhipadhi

Oorar vaazhkai theerhu vaippen
Adhil naanthaan needhipadhi
Indru enakkor vazhakku unnidathil
Idhil needhaan needhipadhi

Un peyaraal naan thandanai thandhen
Thandhadhu saridhaana illai
Kannagi vazhakkil theerppu varaindha
Kaavalan nilaithaana
Innoru kovalan kadhai thaana

Uttravar endrum mattravar endrum
Kuttram izhaithaal vidalaama
Innaar iniyaar enbadhu ellaam
Needhiyin kannil padalaama

Kondavan ennai yesidavum
Kandavar soozhchi pesidavum
Veen pazhi en mel vizhalaama
Naan vaasalil vandhu azhalaama

Nadanthathu ennadi thaayae
Naalum arindhaval neeyae
Nadanthathu ennadi thaayae
Naalum arindhaval neeyae
Needhiyai udanae nilai nattu
Podhum podhum vilaiyattu

Samayapurathaalae saranam un thaalae
Samayapurathaalae saranam un thaalae
Saranam saranam saranam saranam
Saranam saranam saranam saranam
Ennadi maariyamma


Language: Tamil

: பி. சுஷீலா

கே. வி. மஹாதேவன்

வாலி

என்னடி என்னடி மாரியம்மா
இங்கு எல்லாம் உனது காரியமா
சொல்லடி சொல்லடி சத்தியமா
நீ சொல்லிய சாட்சி சத்தியமா....

என்னடி என்னடி மாரியம்மா
இங்கு எல்லாம் உனது காரியமா
சொல்லடி சொல்லடி சத்தியமா
நீ சொல்லிய சாட்சி சத்தியமா....
என்னடி என்னடி மாரியம்மா....

நானா சொன்னேன் தீர்ப்பு இங்கு
நன்மைக்கும் தீமைக்கும் நீதானே காப்பு
நானா சொன்னேன் தீர்ப்பு இங்கு
நன்மைக்கும் தீமைக்கும் நீதானே காப்பு
நாக்கில் வந்தது வாக்கு
என் நாக்கில் வந்தது வாக்கு
அது சரியோ தவறோ நீ தெளிவாக்கு
என்னடி என்னடி மாரியம்மா....

ஊரார் வழக்கை தீர்த்து வைப்பேன்
அதில் நான்தான் நீதிபதி
இன்று எனக்கோர் வழக்கு உன்னிடத்தில்
இதில் நீதான் நீதிபதி

ஊரார் வழக்கை தீர்த்து வைப்பேன்
அதில் நான்தான் நீதிபதி
இன்று எனக்கோர் வழக்கு உன்னிடத்தில்
இதில் நீதான் நீதிபதி

உன் பெயரால் நான் தண்டனை தந்தேன்
தந்தது சரிதானா இல்லை
கண்ணகி வழக்கில் தீர்ப்பு வரைந்த
காவலன் நிலைதானா
இன்னொரு கோவலன் கதை தானா

உற்றவரென்றும் மற்றவரென்றும்
குற்றம் இழைத்தால் விடலாமா
இன்னார் இனியார் என்பது எல்லாம்
நீதியின் கண்ணில் படலாமா

கொண்டவன் என்னை ஏசிடவும்
கண்டவர் சூழ்ச்சி பேசிடவும்
வீண் பழி என் மேல் விழலாமா
நான் வாசலில் வந்து அழலாமா

நடந்தது என்னடி தாயே
நாலும் அறிந்தவள் நீயே
நடந்தது என்னடி தாயே
நாலும் அறிந்தவள் நீயே
நீதியை உடனே நிலை நாட்டு
போதும் போதும் விளையாட்டு

சமயபுரத்தாளே சரணம் உன் தாளே
சமயபுரத்தாளே சரணம் உன் தாளே
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
என்னடி மாரியம்மா......


Movie/Album name: Samayapurathale Satchi

Movie Summary Samayapurathale Satchi is a 1985 Tamil devotional film centered on a woman's steadfast faith in the goddess Samayapurathale and the divine intervention that vindicates her devotion and innocence.

Song Credits - Song: Ennadi Ennadi - Film: Samayapurathale Satchi - Year: 1985 - Language: Tamil

Musical Style Devotional Tamil film song with a folk-influenced melody.

Scene Context The song occurs as a devotional/emotional piece within the film, sung in the context of the heroine's faith and her appeals to the goddess.


Artists