Parakkum Pandhu Parakkum

1964
Lyrics
Language: English

Male : Parakkum pandhu parakkum
Adhu parandhodi varum thoodhu
Sirikkum azhagu sirikkum
Adhu sirithodi varum maadhu

Female : Parakkum pandhu parakkum
Adhu parandhodi varum thoodhu

Male : Sirikkum azhagu sirikkum
Adhu sirithodi varum maadhu

Female : Odum unai naadum
Enai un sondham endru koorum
Thirumbum enai nerungum
Undhan badhil kondu vandhu podum

Male : Parakkum

Both : Pandhu parakkum
Adhu parandhodi varum thoodhu
Sirikkum azhagu sirikkum
Adhu sirithodi varum maadhu

Male : Idhu thaan andha nilavo
Endru mugam paarkkum vanna pandhu
Illai idhu mullai
Endru poraadum kannil vandu

Female : Varuvaar indru varuvaar
Endru manadhodu sollum pandhu
Varattum avar varattum
Endru vazhi paarkkum kaadhal sendu

Male : Parakkum

Both : Pandhu parakkum
Adhu parandhodi varum thoodhu
Sirikkum azhagu sirikkum
Adhu sirithodi varum maadhu

Female : Mudhal naal iravil thaniyae
Ennai azhaithodi varum thendral
Ivar thaan konjam gavani
Endru izhuthodi varum kangal

Male : Arugil miga arugil
Kandu anai meeri varum vellam
Adangum andru adangum
Indru alai paaindhu varum ullam

Both : Parakkum pandhu parakkum
Adhu parandhodi varum thoodhu
Sirikkum azhagu sirikkum
Adhu sirithodi varum maadhu

Female : Ahahaa aaha hahahaa
Aaha hahahaaha haa… haa…
Ahahaa aaha hahahaa
Aaha hahahaaha haa… haa…


Language: Tamil

ஆண் : பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

பெண் : பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது

ஆண் : சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

பெண் : ஓடும் உனை நாடும்
எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும்
உந்தன் பதில் கொண்டு வந்து போடும்

ஆண் : பறக்கும்

இருவர் : பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

ஆண் : இதுதான் அந்த நிலவோ
என்று முகம் பார்க்கும் வண்ண பந்து
இல்லை இது முல்லை
என்று போராடும் கண்ணில் வண்டு

பெண் : வருவார் இன்று வருவார்
என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும்
என்று வழி பார்க்கும் காதல் செண்டு

ஆண் : பறக்கும்

இருவர் : பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

பெண் : முதல் நாள் இரவில் தனியே
என்னை அழைத்தோடி வரும் தென்றல்
இவர்தான் கொஞ்சம் கவனி
என்று இழுத்தோடி வரும் கண்கள்

ஆண் : அருகில் மிக அருகில்
கண்டு அணை மீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும்
இன்று அலை பாய்ந்து வரும் உள்ளம்

இருவர் : பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது

பெண் : அஹஹா ஆஹ ஹஹஹா
ஆஹ ஹஹஹாஹ ஹா… ஹா…
அஹஹா ஆஹ ஹஹஹா
ஆஹ ஹஹஹாஹ ஹா… ஹா…


Movie/Album name: Panakkara Kudumbam

Movie Summary Panakkara Kudumbam is a 1964 Tamil family drama about a wealthy but arrogant man who loses his fortune and learns the value of humility, hard work, and family through hardship and redemption.

Song Credits - Song: Parakkum Pandhu Parakkum - Movie: Panakkara Kudumbam (1964) - Lyrics: Kannadasan - Music: Viswanathan–Ramamoorthy - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A playful, upbeat duet with a folk-inflected film-music arrangement, featuring lively rhythms suited to a celebratory or sport/game-themed sequence.

Key Artists Involved - Composers: Viswanathan–Ramamoorthy - Lyricist: Kannadasan - Playback Singers: T. M. Soundararajan, P. Susheela

Scene Context The song is a light-hearted, playful number picturized on the lead pair, expressing romance and joy through the metaphor of a ball (pandhu) flying and bouncing, matching the film’s entertaining, festive mood.


Artists