Gopalan Enge Undo

1969
Lyrics
Language: English

Gopalan enge undo gogulam ange undu
Krishna hari rama hari hare
Krishna ari rama ari

Gopalan enge undo gogulam ange undu
Krishna hari rama hari hare
Krishna ari ramahari

Konjum killai kuyirpedu
Manjal vaanam manithodu
Konjum killai kuyirpedu
Manjal vaanam manithodu
Kopi pengal kodi undu
Krishna ari rama ari
Chorus : Hare
Krishna ari rama ari

Gangai karaiyil mangal pottu kannan vilaiyadal
Kannan arugil chinna chinna kanniyar uraiyadal
Male : Thanga silaigal nenjin idaiye pongi varum oodal
Katti thaluvi katti kanigal thannai maranthadal
Female : Kaal thottu kai thottu kontadum kadhal
Female : Kannam thottu mutham thanthu panpaadum padal
Female : Ammama adhu inge varumo
Krishna ari rama ari
Chorus : Hare
Krishna ari rama ari

Santhanam manakuthadi meni
Kannanai ninaikuthadi aavi
Gangaiyil mulugivara vaadi
Female : Netri pottu idam maara
Female : Pinni kollum asai undu
Krishna ari rama ari
Chorus : Hare
Krishna ari rama ari

Pullangulalil mella ponal sugam undu
Poovum kulalum sari sariya kadhal suvai undu
Male : Sollum mozhiyil amma entru thullum kadhai undu
Thodarum uravul vidiyum pozuthu malarum piriventru
Female : Then sithum poovizhiyal venmai nirankondu
Kaalai neram keli seiyum kannadi munbu
Female : Ammama adhu inge varumo
Krishna ari rama ari
Chorus : Hare
Krishna ari rama ari

Thulli varum inbamennum aaru
Alli vaitha sengarumbu chaaru
Solli varum karpanaigal nooru
Female : Panthalita medai pattu vanna ponnaadai
Female : Katti kolla kaalam undu
Krishna ari rama ari
Chorus : Hare
Krishna ari rama ari


Language: Tamil

எம். எஸ். விஸ்வநாதன்

கண்ணதாசன்

கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

கொஞ்சும் கிள்ளை குயிற்பேடு மஞ்சள் வானம் மணித்தோடு
கொஞ்சும் கிள்ளை குயிற்பேடு மஞ்சள் வானம் மணித்தோடு
கோபிப் பெண்கள் கோடி உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி
இருவர் : கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

கங்கைக்கரையில் மஞ்சள் போட்டு கண்ணன் விளையாடல்
கண்ணன் அருகில் சின்னச் சின்னத் கன்னியர் உரையாடல்
ஆண் : தங்க சிலைகள் நெஞ்சின் இடையே பொங்கி வரும் ஊாடல்
கட்டித் தழுவி கட்டிக் கனிகள் தன்னை மறந்தாடல்
பெண் : கால் தொட்டு கைத்தொட்டு கொண்டாடும் காதல்
பெண் : கன்னம் தொட்டு முத்தம் தந்து பண்பாடும் பாடல்
பெண் : அம்மம்மா அது இங்கே வருமோ
கிருஷ்ணா அரி ராமா அரி
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

சந்தனம் மணக்குதடி மேனி கண்ணனை நினைக்குதடி ஆவி
கங்கையில் முழுகிவர வாடி
பெண் : நெற்றிப் பொட்டு இடம் மாற நெஞ்சில் பட்டு படம்போடப்
பெண் : பின்னிக் கொள்ளும் ஆசை உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

முல்லை மொட்டு மல்லிகைப்பூ முத்துச் சரம் ரத்தினங்கள்
அள்ளி வைக்கும் ஆசை உண்டடி
ஆண்கள் : வெள்ளி வட்டம் மின்ன மின்ன வெள்ளம் வந்து துள்ளத் துள்ளக்
கொள்ளை இன்பம் கோடி உண்டடி
பெண்கள் : சங்கு வண்ணம் கிள்ளிக்கிள்ளி மந்திரத்தை சொல்லிச்சொல்லிப்
பங்கு வைக்கும் ஆசை உண்டடி
ஆண்கள் : சித்திரத்தை முத்தமிட்டு நித்திரையில் சத்தமிட்டு
தேன் எடுக்கும் ஆசை உண்டடி

புல்லாங்குழலில் மெல்ல போனால் சுகம் உண்டு
பூவும் குழலும் சரிச் சரியக் காதல் சுவை உண்டு
ஆண் : சொல்லும் மொழியில் அம்மா என்று துள்ளும் கதை உண்டு
தொடரும் உறவில் விடியும் பொழுது மலரும் பிரிவென்று
பெண் : தேன் சிந்தும் பூவிதழ் வெண்மை நிறங்கொண்டு
பெண் : காலை நேரம் கேலி செய்யும் கண்ணாடி முன்பு
பெண் : அம்மம்மா அது இங்கே வருமோ
கிருஷ்ணா அரி ராமா அரி
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

துள்ளி வரும் இன்பமெனும் ஆறு
அள்ளி வைத்த செங்கரும்புச் சாறு
சொல்லி வரும் கற்பனைகள் நூறு
பெண் : பந்தலிட்ட மண மேடை பட்டு வண்ணப் பொன்னாடை
பெண் : கட்டிக் கொள்ள காலம் உண்டு
கிருஷ்ணா அரி ராமா
குழு : ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி


Movie/Album name: Anbalippu

Movie Summary Anbalippu (1969) is a Tamil film starring Jaishankar and Bharathi, revolving around themes of love, sacrifice, and family bonds.

Song Credits - Song: Gopalan Enge Undo - Film: Anbalippu (1969) - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A devotional-style duet with a folk-inflected melody, blending bhakti bhava with a conversational structure between the singers.

Key Artists Involved - M. S. Viswanathan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Playback Singer) - P. Susheela (Playback Singer)

Scene Context The song is picturized on Jaishankar and Bharathi, expressing devotion and longing toward Lord Krishna (Gopalan), with the characters seeking his divine presence and guidance.


Artists