Yei Ilaiya Nilave

1999
Lyrics
Language: English

Male : Yaei ilaiya nilave sogam verung kanvae
Yaei ilaiya nilave sogam verung kanvae

Male : Moondraam piraiyae moondraam piraiyae
Naalaiya nilavum neethaan
Maarum ulagil vaazhum vaazhvil
Sogam ellaam veenthaan

Male : Sollaamal ennai kollathae
Yaei nilave sorkkaththai thallippodaathae
Yaei kannaalae ennai kilaathae
Yaei nilavae kanneeril ennai thallaathae

Male : Yaei ilaiya nilave sogam verung kanvae

Male : Kaathoram ketkum reengaaram ellaam
Kadhali un suvaasa saththam
Neengaamal ennai thoongaamal seiyyum
Neethaanae en kadhal sorkkam

Male : Un vizhiyin sparisham ellaam
Uyir varaiyil urasuthadi
En uyirin suvaasamellaam
Un vazhiyae veesuthadi

Male : Intha paruvam paranthu povatharkkul
Intha kanavu kalainthu povatharkkul
Naan pirantha kaaranaththai sollividu

Male : Sollaamal ennai kollathae
Yaei nilave sorkkaththai thallippodaathae
Kannaalae ennai kilaathae
Yaei nilavae kanneeril ennai thallaathae

Male : Yaei ilaiya nilave sogam verung kanvae

Male : …………………..

Male : Kanmani unthan punnaai ellaam
Kannukkul padam pidiththu vaithen
Un idhazh sinthum oosaial ellaam
Uyirukkul olippathivu seithen

Male : Unnaamal urangaamal
Uyirththirakkum vazhi kanden
Un nizhalaai naan maari
Unnodu vaazhkindren

Male : Unnai thedi ennai kandu konden
Rekkaiyindri vinnai thottuvitten
Siththamenggum sirpamaaga unai vadipen

Male : Sollaamal ennai kollathae
Yaei nilave sorkkaththai thallippodaathae
Aang….kannaalae ennai kilaathae
Yaei nilavae kanneeril ennai thallaathae

Male : Yaei ilaiya nilave sogam verung kanvae
Yaei yaei ilaiya nilave sogam verung kanvae

Male : Moondraam piraiyae moondraam piraiyae
Naalaiya nilavum neethaan
Maarum ulagil vaazhum vaazhvil
Sogam ellaam veenthaan

Male : Kanneeril Kaalam thallaathae yaei nilavae
Kaalangal ponaal varaathe
Hoi megangal vaanam aagaathae
Ennaalum sogangal vaazhkkai aagaathe…..


Language: Tamil

ஆண் : ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே
ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

ஆண் : மூன்றாம் பிறையே மூன்றாம் பிறையே
நாளைய நிலவும் நீதான்
மாறும் உலகில் வாழும் வாழ்வில்
சோகம் எல்லாம் வீண் தான்

ஆண் : சொல்லாமல் என்னைக் கொல்லாதே
ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே
ஏய் கண்ணாலே என்னை கிள்ளாதே
ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே

ஆண் : ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

ஆண் : காதோரம் கேட்கும் ரீங்காரம் எல்லாம்
காதலி உன் சுவாச சத்தம்
நீங்காமல் என்னை தூங்காமல் செய்யும்
நீதானே என் காதல் சொர்க்கம்

ஆண் : உன் விழியின் ஸ்பரிசம் எல்லாம்
உயிர் வரையில் உரசுதடி
என் உயிரின் சுவாசமெல்லாம்
உன் வழியே வீசுதடி

ஆண் : இந்த பருவம் பறந்து போவதற்குள்
இந்தக் கனவு கலைந்து போவதற்குள்
நான் பிறந்த காரணத்தை சொல்லிவிடு

ஆண் : சொல்லாமல் என்னைக் கொல்லாதே
ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே
கண்ணாலே என்னை கிள்ளாதே
ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே

ஆண் : ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

ஆண் : …………………………

ஆண் : கண்மணி உந்தன் புன்னகை எல்லாம்
கண்ணுக்குள் படம் பிடித்து வைத்தேன்
உன் இதழ் சிந்தும் ஓசைகள் எல்லாம்
உயிருக்குள் ஒலிப்பதிவு செய்தேன்

ஆண் : உண்ணாமல் உறங்காமல்
உயிர்த்திருக்கும் வழிக் கண்டேன்
உன் நிழலாய் நான் மாறி
உன்னோடு வாழ்கின்றேன்

ஆண் : உன்னைத் தேடி என்னைக் கண்டுக் கொண்டேன்
ரெக்கையின்றி விண்ணை தொட்டுவிட்டேன்
சித்தமெங்கும் சிற்பமாக உனை வடிப்பேன்

ஆண் : சொல்லாமல் என்னைக் கொல்லாதே
ஏய் நிலவே சொர்க்கத்தை தள்ளிப் போடாதே
ஆங்….கண்ணாலே என்னை கிள்ளாதே
ஏய் நிலவே கண்ணீரில் என்னைத் தள்ளாதே

ஆண் : ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே
ஏய் ஏய் இளைய நிலவே சோகம் வெறுங் கனவே

ஆண் : மூன்றாம் பிறையே மூன்றாம் பிறையே
நாளைய நிலவும் நீதான்
மாறும் உலகில் வாழும் வாழ்வில்
சோகம் எல்லாம் வீண்தான்

ஆண் : கண்ணீரில் காலம் தள்ளாதே ஏய் நிலவே
காலங்கள் போனால் வராதே
ஹோய் மேகங்கள் வானம் ஆகாதே
எந்நாளும் சோகங்கள் வாழ்க்கை ஆகாதே…..


Movie/Album name: Anbulla Kadhalukku

Summary of the Movie (Anbulla Kadhalukku):
Anbulla Kadhalukku is a Tamil romantic drama film that explores themes of love, longing, and emotional struggles. The narrative follows the journey of a young couple whose love faces societal and personal challenges, testing their commitment to each other.

Song Credits:
- Song: Yei Ilaiya Nilave
- Movie: Anbulla Kadhalukku (1999)
- Music Composer: Deva
- Lyricist: Vairamuthu
- Singers: Hariharan, Sujatha

Musical Style & Raga Details:
- Genre: Romantic melody with a semi-classical touch
- Raga: Likely based on Kalyani or Shankarabharanam, given its soothing and melancholic tone
- Rhythm: Moderate-paced, with a gentle flow

Key Artists Involved:
- Music Director: Deva
- Singers: Hariharan (male), Sujatha (female)
- Lyricist: Vairamuthu

Awards & Recognition:
(Information not widely available; the song was well-received but specific awards are not documented.)

Scene Context in the Movie:
The song Yei Ilaiya Nilave is a soulful romantic number, likely picturized as a duet between the lead pair, expressing their love and yearning. It may feature dreamy visuals, possibly set against moonlit backdrops, enhancing the emotional depth of their relationship.

(Note: Some details may be approximate due to limited archival information on the film.)


Artists