En Ullam Enkindra Vanathile

1980
Lyrics
Language: English

Male : En ullam engindra vaanathilae
Pon megam thavazhgindrathu
Or unmai ippodhu therigindrathu
Pudhu uravum varugindrathu

Male : Oru poomarathil iru thaen kanigal
Paasamkondaaduthu paadhai ondraanathu

Male : En ullam engindra vaanathilae
Pon megam thavazhgindrathu
Or unmai ippodhu therigindrathu
Pudhu uravum varugindrathu

Female : Anbu ennaalum thaayaagaalaam
Pillai illamalae
Anbu ennaalum thaayaagaalaam
Pillai illamalae
Thangai ullathai naan kollalaam
Annan sollaamalae

Female : Kangal thaalaatinaal
Yaaaarum uravaagalaam
Kaigal uravaaadinaal
Kallum silai aagalaaam

Female : En ullam engindra vaanathilae
Pon megam thavazhgindrathu
Or unmai ippodhu therigindrathu
Pudhu uravum varugindrathu

Male : Manjal kondaadum maanikkamae
Mazhalai nee kandathu
Manjal kondaadum maanikkamae
Mazhalai nee kandathu
Mazhalai nee kaanum nerathilae
Maaman naan vandhathu

Male : Aaru rendaagalaam
Meendum ondragalaam
Kaalam vilaiyaadalaam
Meendum dhisai maaralaam

Male : En ullam engindra vaanathilae
Pon megam thavazhgindrathu
Or unmai ippodhu therigindrathu
Pudhu uravum varugindrathu

Female : Melai vaanathu megangalae
Paalam podungalen
Male : Kadalin keezh ulla muthukalae
Karaiyil vaarungalen

Female : Yaarum idam maaralaam
Thaaimai inam maarumoo
Male : Thaaimai inam maarinaal
Anbu manam maarumoo

Both : En ullam engindra vaanathilae
Pon megam thavazhgindrathu
Or unmai ippodhu therigindrathu
Pudhu uravum varugindrathu


Language: Tamil

ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது

ஆண் : ஒரு பூ மரத்தில் இரு தேன் கனிகள்
பாசம் கொண்டாடுது பாதை ஒன்றானது

ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது

பெண் : அன்பு எந்நாளும் தாயாகலாம்
பிள்ளை இல்லாமலே
அன்பு எந்நாளும் தாயாகலாம்
பிள்ளை இல்லாமலே
தங்கை உள்ளத்தை நான் கொள்ளலாம்
அண்ணன் சொல்லாமலே

பெண் : கண்கள் தாலாட்டினால்
யாரும் உறவாகலாம்
கைகள் உறவாடினால்
கல்லும் சிலையாகலாம்

பெண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது

ஆண் : மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே
மழலை நீ கண்டது
மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே
மழலை நீ கண்டது
மழலை நீ காணும் நேரத்திலே
மாமன் நான் வந்தது

ஆண் : ஆறு ரெண்டாகலாம்
மீண்டும் ஒன்றாகலாம்
காலம் விளையாடலாம்
மீண்டும் திசை மாறலாம்

ஆண் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது

பெண் : மேலை வானத்து மேகங்களே
பாலம் போடுங்களேன்
ஆண் : கடலின் கீழ் உள்ள முத்துக்களே
கரையில் வாருங்களே………..

பெண் : யாரும் இடம் மாறலாம்
தாய்மை இனம் மாறுமோ
ஆண் : தாய்மை இனம் மாறினால்
அன்பு மனம் மாறுமோ

இருவர் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
ஓர் உண்மை இப்போது தெரிகின்றது
புது உறவும் வருகின்றது


Movie/Album name: Rathapasam

Artists