Amma Appa Sandai

1973
Lyrics
Language: English

Amma appa sandaiyilae
Anaathai aanom pillaigalae
Amma appa sandaiyilae
Anaathai aanom pillaigalae

Summaayirukka mudiyallae
Male : Saerththu vaikkavum vazhiyillae
Male : Summaayirukka mudiyallae
Male : Saerththu vaikkavum vazhiyillae
Female : Amma
Male : Appa

Amma appa sandaiyilae
Anaathai aanom pillaigalae
Male : Summaayirukka mudiyallae
Male : Saerththu vaikkavum vazhiyillae
Female : Vazhiyillae
Male : Vazhiyillae
Female : Vazhiyillae

Amma…pasi appa pasi pasiyo pasi….

Pozhuthu vidinjaa coffee kodukka
Amma vendaama
Naama azhuthu vadinjaa kaasu kodukka
Appa vendaama

Appa sutta idlythanilae
Uppae irukaathu
Appa sutta idlythanilae
Uppae irukaathu

Ada amma namakku marunthu tharaatti
Udambae irukkaathu
Chorus : Udambae irukkaathu
Amma pasi appa pasi pasiyo pasi….

Oorukkullae sandai
Nadanthaa appa vakkeelu
Male : Udambukkullae sandai
Nadanthaa amma vakkeelu

Amma appa sandai pidiththaa
Yaarthaan vakkeelu
Female : Adhai theerththu vaikkavum
Saerththu vaikkavum naamthaan vakkeelu
Chorus : Naamthaan vakkeelu
Amma pasi appa pasi pasiyo pasi….

Mookku nuniyilae kobam
Mulaichchu mookkae rendaachchu
Naakku nuniyil vaarththai
Thadichchu pechae ninnaachchu

Bat-kkum panthu-kkum virotham
Vanthaa panthayam ennaagum
Vettikkum podavaikkum
Potti irunthaa veedae kaadaagum

Perukku munnae intial poda
Appaa vendaamo
Perukku munnae intial poda
Appaa vendaamo

Namma peththava yaarunnu
Maththava kettaa amma vendaamo
Chorus : Solla amma vendaamo
Amma pasi appa pasi pasiyo pasi….


Language: Tamil

அம்மா அப்பா சண்டையிலே
அனாதை ஆனோம் பிள்ளைகளே
அம்மா அப்பா சண்டையிலே
அனாதை ஆனோம் பிள்ளைகளே

சும்மாயிருக்க முடியல்லே
ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே
ஆண் : சும்மாயிருக்கவும் முடியல்லே
ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே
பெண் : அம்மா....
ஆண் : அப்பா

அம்மா அப்பா சண்டையிலே
அனாதை ஆனோம் பிள்ளைகளே
ஆண் : சும்மாயிருக்க முடியல்லே
ஆண் : சேர்த்து வைக்கவும் வழியில்லே
பெண் : வழியில்லே
ஆண் : வழியில்லே
பெண் : வழியில்லே.....

அம்மா....பசி அப்பா....பசி பசியோ பசி....

பொழுது விடிஞ்சா காபி கொடுக்க
அம்மா வேண்டாமா
நாம அழுது வடிஞ்சா காசு கொடுக்க
அப்பா வேண்டாமா

அப்பா சுட்ட இட்லிதனிலே
உப்பே இருக்காது
அப்பா சுட்ட இட்லிதனிலே
உப்பே இருக்காது

அட அம்மா நமக்கு மருந்து தராட்டி
உடம்பே இருக்காது
குழு : உடம்பே இருக்காது
அம்மா....பசி அப்பா....பசி பசியோ பசி..

ஊருக்குள்ளே சண்டை
நடந்தா அப்பா வக்கீலு
ஆண் : உடம்புக்குள்ளே சண்டை
நடந்தா அம்மா வக்கீலு

அம்மா அப்பா சண்டை பிடித்தா
யார் தான் வக்கீலு
பெண் : அதை தீர்த்து வைக்கவும்
சேர்த்து வைக்கவும் நாம்தான் வக்கீலு
குழு : நாம்தான் வக்கீலு
அம்மா....பசி அப்பா....பசி பசியோ பசி.....

மூக்கு நுனியிலே கோபம்
முளைச்சு மூக்கே ரெண்டாச்சு
நாக்கு நுனியில் வார்த்தை
தடிச்சு பேச்சே நின்னாச்சு

பேட்டுக்கும் பந்துக்கும் விரோதம்
வந்தா பந்தயம் என்னாகும்
வேட்டிக்கும் பொடவைக்கும்
போட்டி இருந்தா வீடே காடாகும்

பேருக்கு முன்னே இனிஷியல் போட
அப்பா வேண்டாமோ
பேருக்கு முன்னே இனிஷியல் போட
அப்பா வேண்டாமோ

நம்ம பெத்தவ யாருன்னு
மத்தவ கேட்டா அம்மா வேண்டாமோ
குழு : சொல்ல அம்மா வேண்டாமோ
அம்மா....பசி அப்பா....பசி பசியோ பசி......


Movie/Album name: Kattila Thottila

Movie Summary Kattila Thottila is a 1973 Tamil film starring Jaishankar and Jayalalithaa, revolving around a family-oriented storyline typical of the era.

Song Credits - Song: Amma Appa Sandai - Film: Kattila Thottila - Year: 1973 - Language: Tamil

Musical Style A light-hearted, conversational Tamil film song with a folk-tinged melody, structured as a playful back-and-forth depicting a domestic quarrel.


Artists