
Kungumathai azhikkavaa
Koondhal vazham kalaikkavaa
Manjalaiyum izhakkavaa
Mangala naan kazhattravaa
Kungumathai azhikkavaa
Koondhal vazham kalaikkavaa
Manjalaiyum izhakkavaa
Mangala naan kazhattravaa
Kungumathai azhikkavaa
Naalum kazhindhadhendraar
Nadantha kadhai mudithathendraar
Naalum kazhindhadhendraar
Nadantha kadhai mudithathendraar
Vaazha veitha aiyaa neer
Maraindhu vitteer engindraar
Vaazha veitha aiyaa neer
Maraindhu vitteer engindraar
Edhai enni kungumam veippen
Naan enna solli poovai mudippen
Kungumathai azhikkavaa
Koondhal vazham kalaikkavaa
Manjalaiyum izhakkavaa
Mangala naan kazhattravaa
Kungumathai azhikkavaa
Petravarai naan izhandhu
Paedhalithu nirrkayilae
Petravarai naan izhandhu
Paedhalithu nirrkayilae
Uttravarum ooraarum
Udhavaadha sagunamendraar
Uttravarum ooraarum
Udhavaadha sagunamendraar
Paavam endru mana muditheerae
Naan paavam endru mana muditheerae
Andha paavathinaal maraindhu vitteeroo
Hooo hoooo ooo
Kungumathai azhikkavaa
Naanarindhu seidhathillai
Naan purintha kuttramillai
Naanarindhu seidhathillai
Naan purintha kuttramillai
Penn pirandha velaiyilae
Pirandhu vantha paavamendraar
Penn pirandha velaiyilae
Pirandhu vantha paavamendraar
Padaithavanin kuttramallava
Idhu padaithavanin kuttramallava
Andha paavi seidha paavam allavaa
Aaa…aaa…aaa….
Kungumathai azhikkavaa
Koondhal vazham kalaikkavaa
Manjalaiyum izhakkavaa
Mangala naan kazhattravaa
Kungumathai azhikkavaa
பி. சுசீலா
குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா
நாளும் கழிந்ததென்றார்
நடந்த கதை முடிந்ததென்றார்
நாளும் கழிந்ததென்றார்
நடந்த கதை முடிந்ததென்றார்
வாழ வைத்த ஐயா நீர்
மறைந்து விட்டீர் என்கின்றார்
வாழ வைத்த ஐயா நீர்
மறைந்து விட்டீர் என்கின்றார்
எதை எண்ணி குங்குமம் வைப்பேன்
நான் என்ன சொல்லிப் பூ முடிப்பேன்
குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா
பெற்றவரை நானிழந்து
பேதலித்து நிற்கையிலே
பெற்றவரை நானிழந்து
பேதலித்து நிற்கையிலே
உற்றவரும் ஊராரும்
உதவாத சகுனமென்றார்
உற்றவரும் ஊராரும்
உதவாத சகுனமென்றார்
நான் பாவமென்று மணமுடித்தீரோ
அந்தப் பாவத்தினால் மறைந்து விட்டீரோ
ஹோ ஹோ ஓ
குங்குமத்தை அழிக்கவா
நானறிந்து செய்ததில்லை
நான் புரிந்த குற்றமில்லை
நானறிந்து செய்ததில்லை
நான் புரிந்த குற்றமில்லை
பெண் பிறந்த வேளையிலே
பிறந்து வந்த பாவமென்றால்
பெண் பிறந்த வேளையிலே
பிறந்து வந்த பாவமென்றால்
இது படைத்தவனின் குற்றமல்லவா
அந்தப் பாவி செய்த பாவமல்லவா
ஆஆ......ஆஅ......ஆஅ.....
குங்குமத்தை அழிக்கவா
கூந்தல் வளம் கலைக்கவா
மஞ்சளையும் இழக்கவா
மங்கல நாண் கழற்றவா
குங்குமத்தை அழிக்கவா
Movie Summary Panithirai (1961) is a Tamil film starring Sivaji Ganesan and Vijayakumari, centered on themes of love, sacrifice, and family conflict.
Song Credits - Song: Kungummathai - Film: Panithirai - Year: 1961 - Lyricist: Kannadasan - Music Director: Viswanathan–Ramamoorthy - Singers: P. Susheela, T. M. Soundararajan (as applicable to the track version)
Musical Style A melody-driven Tamil film song of the early 1960s, blending classical-inflected film music with light orchestration typical of Viswanathan–Ramamoorthy.
Raga Details Not reliably documented.
Key Artists Involved - Sivaji Ganesan - Vijayakumari - Kannadasan (lyricist) - Viswanathan–Ramamoorthy (composers) - P. Susheela / T. M. Soundararajan (playback singers)
Scene Context Not reliably documented.