Maalai Nerathile

1959
Lyrics
Language: English

Malai nerathilae yamuna theerathilae

Haa..aa..aaa..aa..
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Vazhi melae vzhi veithae
Vaadi nindraal raadhai

Vaarayoo nandha murari
Muagm paarayoo giridhaari

Haa..aa..aaa..aa..
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Vazhi melae vizhi veithae..ye
Vazhi melae vizhi veithae
Vaadi nindraal raadhai
Malai nerathilae ….

Maaya jaalam yen kanna
Neela megha vanna..aa..aa
Maaya jaalam yen kanna
Neela megha vanna
Neeyilladha en vaazhvu
Nilavilladha vaanam androo

Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Maadhavan unnalae
Vaadigindren thanimaiyilae
Malai nerathilae ….

Kallathanam naan ariven
Kanna nee poo poo
Sollai meeri nee yaaridam
Pallai katti nindraai
Andha kanniyidam poo poo

Kaanadha podhu thabama
Neril kandalae kobama
Neril kandalae kobama

Ponaana maarbil nagakuri indru
Undaana vidham enna
Sollu muraari
Undaana vidham enna
Sollu muraari

Sandhegam yenadi en kanne
Indha pudhar mulai paradi un munnae
Indha pudhar mulai paradi un munnae
Female : Podhum podhumaiyaa
Podhum podhumaiyaa veliveshamae
Indha pedhaiyai seiyaadhae moosame

En solali keladi inbamae
Indha madhavanum unakkaethaan sondhame

{Maadhava
Male : Kanmani} (4)


Language: Tamil

பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

ஏ. மருதகாசி

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
வழி மேலே விழி வைத்தே
வாடி நின்றாளே ராதை....

வாராயோ நந்த முராரி
முகம் பாராயோ கிரிதாரி

ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
வழி மேலே விழி வைத்தே..ஏ
வழி மேலே விழி வைத்தே
வாடி நின்றாளே ராதை....
மாலை நேரத்திலே.....

மாய ஜாலம் ஏன் கண்ணா
நீல மேக வண்ணா...ஆஆ
மாய ஜாலம் ஏன் கண்ணா
நீல மேக வண்ணா
நீயில்லாத என் வாழ்வு
நிலவில்லாத வானமன்றோ

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாதவனே உன்னாலே
வாடுகின்றேன் தனிமையிலே
மாலை நேரத்திலே.....

கள்ளத்தனம் நானறிவேன்
கண்ணா நீ போ போ
சொல்லை மீறி நீ யாரிடம்
பல்லைக் காட்டி நின்றாய்
அந்தக் கன்னியிடம் போ போ...

காணாத போது தாபமா
நேரில் கண்டாலே கோபமா
நேரில் கண்டாலே கோபமா
பெண் : பொன்னான மார்பில் நகக்குறி இன்று
உண்டான விதம் என்ன
சொல்லு முராரி
உண்டான விதம் என்ன
சொல்லு முராரி

சந்தேகம் ஏனடி என் கண்ணே
இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே
இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே
பெண் : போதும் போதுமையா
போதும் போதுமையா வெளிவேஷமே
இந்தப் பேதையைச் செய்யாதே மோசமே

என் சொல்லைக் கேளடி இன்பமே – இந்த
மாதவனும் உனக்கேதான் சொந்தமே

{மாதவா.......
ஆண் : கண்மணி..... } (4)


Movie/Album name: Kalaivanan

Movie Summary Kalaivanan (1959) is a Tamil romantic drama starring Sivaji Ganesan and Padmini, revolving around a gifted singer and dancer whose love and artistic career face trials.

Song Credits - Song: Maalai Nerathile - Film: Kalaivanan (1959) - Lyricist: A. Maruthakasi - Music Director: G. Ramanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodious romantic duet in the traditional Tamil film music idiom, blending Carnatic melodic structure with orchestral accompaniment typical of late-1950s Tamil cinema.

Key Artists Involved - On-screen: Sivaji Ganesan, Padmini - Playback: T. M. Soundararajan, P. Susheela - Composer: G. Ramanathan - Lyricist: A. Maruthakasi

Scene Context An evening romantic sequence in which the lead pair expresses their love through song.


Artists