Kandukondain Kandukondain

2000
Lyrics
Language: English

Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Viral thodum thoorathilae
Vennilavu kandukonden

Vennila velichcham
Kinnathil vizhundhu
Nirainthaal valindhaal magizhchi

Vennilaa velichcham
Kinnaththai udaithaal
Uyirai udaippaal oruthi

En kan paarthathu
En kai serumo
Male : Kai seraamalae
Kanneer serumoo….

Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden

Malar manjam
Vizhi kenjum
Manam anjum allavaa

Uyir minjum
Ival nenjam
Un thanjam allavaa

Un thanimaiyin kadhavin
Thaazh neekkavaa

Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden

Megam thiranthaal
Adharkul un mugam paarkiren
Pookkal thiranthaal
Adharkul un kural ketkiren

Kangalai thirandhum
Kanavugal valarkkum
Kaadhalin viralgal
Kallaiyum thirakkum

Unnai thediyae
Ini enadhu payanamo
Endhan saalaigal
Un veettil mudiyumo

Ye kanavu mangaiyae
Unadhu manadhu
Enadhu manadhil inaiyumo

Kandukonden kandukonden..eh hey
Kaadhal mugam kandukonden..eh hey
Male : Viral thodum thoorathilae..ey..hey
Vennilavu kandukonden

……………………….

Aaaahaaa….
Nadhiyin thedal
Kadaisiyil kadal kaanbadhu
Uyirin thedal
Kadaisiyil unai kaanbadhu

Kadal konda nadhiyo
Mugam thanai ilakkum
Naan unnil kalanthaal
Pudhumugam kidaikkum

Natchathirangalai
Oru naaril kattuven
Endhan neramum
Un kadhavu thattuven

En kaadhal dhevanae
Enadhu imaiyil
Unadhu vizhigal mooduven

Kandukonden kandukonden..
Female : Kandukonden kandukonden…
Male : Kaadhal mugam kandukonden..
Female : Kaadhal mugam kandukonden..

Viral thodum thoorathilae..
Female : Viral thodum thoorathilae..
Male : Vennilavu kandukonden
Female : Kandukonden kandukonden…
Male : Kaadhal mugam kandukonden..


Language: Tamil

ஏ. ஆர். ரஹமான்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி

வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி

என் கண் பார்த்தது
என் கை சேருமோ
ஆண் : கை சேராமலே
கண்ணீர் சேருமோ

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

மலர்மஞ்சம் விழி கெஞ்சும்
மனம் அஞ்சுமல்லவா
பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம்
உன் தஞ்சமல்லவா

உன் தனிமைக் கதவின்
தாள் நீக்கவா

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

மேகம் திறந்தால்
அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால்
அதற்குள் உன் குரல் கேட்கிறேன்

கண்களைத் திறந்தும்
கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள்
கல்லையும் திறக்கும்

உன்னைத் தேடியே
இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள்
உன் வீட்டில் முடியுமோ

ஏ கனவு மங்கையே
உனது மனது எனது மனதில்
இணையுமோ

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
காதல் முகம் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
ஆண் : விரல் தொடும் தூரத்திலே
ஹே ஹேய்ய்
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆஆஆஆ...
நதியின் தேடல் கடைசியில்
கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில்
உனைக்காண்பது

கடல் கொண்ட நதியோ
முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால்
புது முகம் கிடைக்கும்

நட்சத்திரங்களை
ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும்
உன் கதவு தட்டுவேன்

ஏ காதல் தேவனே
எனது இமையில் உனது விழிகள்
மூடுவேன்

கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்
பெண் : கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்...
பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன்

விரல் தொடும் தூரத்திலே...
பெண் : விரல் தொடும் தூரத்திலே
ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன்
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்


Movie/Album name: Kandukondain Kandukondain

Movie Summary Two sisters navigate love, family expectations, and personal aspirations as they search for happiness and suitable life partners.

Song Credits - Film: Kandukondain Kandukondain (2000) - Composer: A. R. Rahman - Lyricist: Vairamuthu - Singers: Hariharan, Mahalakshmi Iyer

Musical Style A melodious, semi-classical romantic duet blending Indian classical elements with Rahman’s contemporary orchestration.

Raga Details Based primarily on Raag Hamsanandi.

Key Artists Involved - Director: Rajiv Menon - Starring: Ajith Kumar, Tabu, Mammootty, Aishwarya Rai - Music: A. R. Rahman

Awards & Recognition - Tamil Nadu State Film Award for Best Lyricist – Vairamuthu - Filmfare Award for Best Lyricist – Tamil – Vairamuthu

Scene Context A romantic montage song picturized on Ajith Kumar and Tabu, expressing the blossoming of their love and emotional connection.


Artists