Needhikku Tholvi Nizhalanatho

1961
Lyrics
Language: English

Nedhikku tholvi nizhalaanadhoo
Neriyizhandha vanjanai munn thalai thazhndhadhoo
Chorus : Haa..aaa..aaa

Vanjanaiyaale sagalamum thottrae
Vaakkai kakka vendi
Andhoo vanathu kekkindraarae

Vanjanaiyaale sagalamum thottrae
Vaakkai kakka vendi
Andhoo vanathu kekkindraarae

Vidhi vazhi katta dharumam pinn thodara
Vizhipada ulagam eriyumendranji
Thalai kunithadhaegum dharman ivane
Chorus : Andhoo vanathu kekkindraanae

Sabaiyil seidha sabadham mudikka
Samayam ennaal varumena enni
Kumaridum erimalaiyaana beeman
Chorus : Andhoo vanathu kekkindraanae

Theemaiyin uruvaam kaurava saenaiyai
Seerum than kanaiyaal maaippadhu endrae
Urudhiyum kondi paarthathan sendraan

Vanjanaiyaale sagalamum thottrae
Vaakkai kakka vendi
Andhoo vanathu kekkindraarae

Ethanai yugamoo kandathu ulagam
Evarukkum illai unnilai thaayae
Ethanai yugamoo kandathu ulagam
Evarukkum illai unnilai thaayae
Boomiyai poale poruthirunthaayae
Chorus : Haa..aaa..aaa


Language: Tamil

கண்டசாலா

குயிலன்

நீதிக்குத் தோல்வி நிழலானதோ
நெறியிழந்த வஞ்சனை முன் தலை தாழ்ந்ததோ
குழு : ஹா..ஆஆ ..ஆ

வஞ்சனையாலே சகலமும் தோற்றே
வாக்கைக் காக்க வேண்டி
அந்தோ வனத்துக் கேகின்றாரே..

வஞ்சனையாலே சகலமும் தோற்றே
வாக்கைக் காக்க வேண்டி
அந்தோ வனத்துக் கேகின்றாரே..

விதி வழி காட்ட தருமம் பின் தொடர
விழிபட உலகம் எரியுமென்றஞ்சி
தலை குனிந்தேகும் தர்மன் இவனே
குழு : அந்தோ வனத்துக் கேகின்றானே

சபையில் செய்த சபதம் முடிக்க
சமயம் எந்நாள் வருமென எண்ணி
குமுறிடும் எரிமலையான பீமன்
குழு : அந்தோ வனத்துக் கேகின்றானே

தீமையின் உருவாம் கௌரவ சேனையை
சீறும் தன் கணையால் மாய்ப்பது என்றே
உறுதியும் கொண்டு பார்த்தன் சென்றான்

வஞ்சனையாலே சகலமும் தோற்றே
வாக்கைக் காக்க வேண்டி
அந்தோ வனத்துக் கேகின்றாரே..

எத்தனை யுகமோ கண்டது உலகம்
எவருக்கும் இல்லை உன்னிலை தாயே
எத்தனை யுகமோ கண்டது உலகம்
எவருக்கும் இல்லை உன்னிலை தாயே
பூமியைப் போலே பொறுத்திருந்தாயே...
குழு : ஹா..ஆஆ ..ஆ


Movie/Album name: Pandavar Vanavasam

Artists