Ranga Rangaiah

1980
Lyrics
Language: English

Female : {Rangaa rangaiyaa
Engae ponaalum
Ragasiyam manasukku
Sumai thaanae} (2)

Female : Pollaadha kobaththai thallu
Ingu ennodu yedhaenum sollu
Pollaadha kobaththai thallu
Ingu ennodu yedhaenum sollu
Nalla poo pola ullathai kaattu
Intha pen meedhu ennathai maatru

Female : Rangaa rangaiyaa
Engae ponaalum
Ragasiyam manasukku
Sumai thaanae

Female : Aaaaa aaa aaaa….
Poiyaana kanakkezudhum
Vanigar undu
Pozudhellaam oor kedukkum
Manidhar undu
Thavaraaga panam serkkum
Kayavar undu
Sathiyamae thalai maraivaai
Ponadhundu

Female : Nalla manidhar aayiram solli
Nyaayam nilaikkavillai
Nalla manidhar aayiram solli
Nyaayam nilaikkavillai
Naalu doctor paartha pinnum
Needhi pizhaikkavillai

Female : Sorgathai kaangindra vayasu
Idhu sonthangal kondaadum manasu
Aahaa pakkathil nirkindra ilasu
Un paarvaikku thavikkindra pudhusu

Female : Ah rangaa rangaiyaa
Engae ponaalum
Ragasiyam manasukku
Sumai thaanae

Female : Aaaa aaaa aaa……..
Mai theettum kangalilae
Mayakkam undu
Malar soodum koonthalilae
Manjam undu
Kaiyodu sernthirukka
Kanni undu
Kaadhalilae namakkendror
Kavidhai Undu

Female : Paruva silaiyai pakkathil vaithu
Ulagai ninaikkaadhae
Paavam niraintha ulagathukkaaga
Vedham padikkaadhae

Female : Poongkaatru thalaattum iravu
Intha poovaikku unnodu uravu
Adi ammaadi ennenna kanavu
Idhai ariyaamal yen intha ninaivu

Female : Ah rangaa rangaiyaa
Engae ponaalum
Ragasiyam manasukku
Sumai thaanae


Language: Tamil

பெண் : {ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே} (2)

பெண் : பொல்லாத கோபத்தை தள்ளு
இங்கு என்னோட ஏதேனும் சொல்லு
பொல்லாத கோபத்தை தள்ளு
இங்கு என்னோட ஏதேனும் சொல்லு
நல்ல பூ போல உள்ளதை காட்டு
இந்த பெண் மீது என்னத்தை மாற்று

பெண் : ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே

பெண் : ஆஆஅ ஆஅ ஆஆ…
பொய்யான கணக்கெழுதும்
வணிகர் உண்டு
பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும்
மனிதர் உண்டு
தவறாக பணம் சேர்க்கும்
கயவர் உண்டு
சத்தியமே தலை மறைவாய்
போனதுண்டு

பெண் : நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி
நியாயம் நிலைக்கவில்லை
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி
நியாயம் நிலைக்கவில்லை
நாலு டாக்டர் பார்த்த பின்னும்
நீதி பிழைக்கவில்லை

பெண் : சொர்க்கத்தை காண்கின்ற வயசு
இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு
ஆஹா பக்கத்தில் நிற்கின்ற இளசு
உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு

பெண் : ஆ ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே

பெண் : ஆஆஅ ஆஆ ஆஅ…..
மை தீட்டும் கண்களிலே
மயக்கம் உண்டு
மலர் சூடும் கூந்தலிலே
மஞ்சம் உண்டு
கையோடு சேர்ந்திருக்க
கன்னி உண்டு
காதலிலே நமக்கென்றோர்
கவிதை உண்டு

பெண் : பருவ சிலையை பக்கத்தில் வைத்து
உலகை நினைக்காதே
பாவம் நிறைந்த உலகத்துக்காக
வேதம் படிக்காதே

பெண் : பூங்காற்று தாலாட்டும் இரவு
இந்த பூவைக்கு உன்னோடு உறவு
அடி அம்மாடி என்னென்ன கனவு
இதை அறியாமல் ஏன் இந்த நினைவு

பெண் : ஆ ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே


Movie/Album name: Varumayin Niram Sigappu

Movie Summary Varumayin Niram Sigappu is a 1980 Tamil drama directed by K. Balachander, following four unemployed, idealistic young men sharing a cramped tenement in Madras as they struggle with poverty, disillusionment, and the moral compromises forced upon them by a society that values money over integrity.

Song Credits - Song: Ranga Rangaiah - Film: Varumayin Niram Sigappu (1980) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A light, folksy, and earthy Tamil film tune with a semi-classical lilt, brisk folk rhythm (similar to a therukoothu or kummi beat), and a playful, ironic tone suited to a street-theatre scene.

Raga Details - Raga: Sindhu Bhairavi - Scale: S R2 G2 M1 P D1 N2 S (with characteristic oscillating ga–ma and ni–sa phrases)

Key Artists Involved - Singer: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Kannadasan - Composer: M. S. Viswanathan - Directed by: K. Balachander

Scene Context The song appears as a street-theatre or stage-performance number enacted by the characters, using the folk idiom to deliver satirical commentary on social inequality and the illusions of status, fitting the film's themes of unemployment and societal hypocrisy.


Artists