Erumai Annachi

1975
Lyrics
Language: English

Ooraar porul thirudi
Unnugindra kaakkai ellaam
Utkkaara idam kodukkum
Erumai annaachchi
Ungalai pol naangalumthaan
Namma porumai ennaachchu

Erumai annaachchi
Namma porumai ennaachu
Erumai annaachchi
Namma porumai ennaachu

Edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Konjam edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Intha unmaiyai kandaachu

Erumai annaachchi
Namma porumai ennaachu
Konjam edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Intha unmaiyai kandaachu

Vaikkala thinnuputtu
Maadu paala kodukkuthu
Namma echchila thinnuputtu
Naayi vaala aattuthu

Ozhaicha ozhaippukku
Ellaam nandriya kaattuthu…oo…oo…hoi
Ozhaicha ozhaippukku
Ellaam nandriya kaattuthu…
Manusha jaathi onnuthaan
Eena puthiyai kaattuthu
Eena puthiyai kaattuthu

Erumai annaachchi
Namma porumai ennaachu
Konjam edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Intha unmaiyai kandaachu

Erumai annaachchi
Namma porumai ennaachu

Yaezhaikalai kandaal
Thendral etti nadakkuthaa
Pazham koorai kudisai endraal
Mazhai kotta marukkuthaa

Yaezhaikalai kandaal
Thendral etti nadakkuthaa
Pazham koorai kudisai endraal
Mazhai kotta marukkuthaa

Irandu varkkam endru
Iyarkkai piriththu vaikkuthaa…aa…aa…hoi
Irandu varkkam endru
Iyarkkai piriththu vaikkuthaa…
Naama eththanai solli enna
Manushan nenjil oraikkuthaa
Manushan nenjil oraikkuthaa

Erumai annaachchi
Namma porumai ennaachu
Konjam edam koduththaa mudhugil yaerum
Ulagam endraachu
Intha unmaiyai kandaachu

Erumai annaachchi
Namma porumai ennaachu


Language: Tamil

 : டி. எம். சௌந்தரராஜன்

ஊரார் பொருள் திருடி
உண்ணுகின்ற காக்கை எல்லாம்
உட்கார இடம் கொடுக்கும்
எருமை அண்ணாச்சி
உங்களைப் போல் நாங்களும்தான்......
நம்ம பொறுமை என்னாச்சு........

எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு
எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு

எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
இந்த உண்மையை கண்டாச்சு.....

எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு
கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
இந்த உண்மையை கண்டாச்சு.....

வைக்கல தின்னுப்புட்டு
மாடு பால கொடுக்குது
நம்ம எச்சில தின்னுப்புட்டு
நாயி வால ஆட்டுது

ஒழைச்ச ஒழைப்புக்கு
எல்லாம் நன்றிய காட்டுது.....ஊ.....ஊ...ஹோய்
ஒழைச்ச ஒழைப்புக்கு
எல்லாம் நன்றிய காட்டுது...
மனுஷ ஜாதி ஒண்ணுதான்
ஈன புத்தியைக் காட்டுது
ஈன புத்தியைக் காட்டுது

எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு
கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
இந்த உண்மையை கண்டாச்சு.....

எருமை அண்ணாச்சி....
நம்ம பொறுமை என்னாச்சு

ஏழைகளை கண்டால்
தென்றல் எட்டி நடக்குதா
பழம் கூரை குடிசை என்றால்
மழை கொட்ட மறுக்குதா

ஏழைகளை கண்டால்
தென்றல் எட்டி நடக்குதா
பழம் கூரை குடிசை என்றால்
மழை கொட்ட மறுக்குதா

இரண்டு வர்க்கம் என்று
இயற்கை பிரித்து வைக்குதா....ஆ....ஆ...ஹேய்
இரண்டு வர்க்கம் என்று
இயற்கை பிரித்து வைக்குதா....
நாம எத்தனை சொல்லி என்ன
மனுஷன் நெஞ்சில் ஒறைக்குதா....
மனுஷன் நெஞ்சில் ஒறைக்குதா....

எருமை அண்ணாச்சி
நம்ம பொறுமை என்னாச்சு
கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும்
உலகம் என்றாச்சு
இந்த உண்மையை கண்டாச்சு.....

எருமை அண்ணாச்சி....ஈ......
நம்ம பொறுமை என்னாச்சு


Movie/Album name: Puthu Vellam

Movie Summary Puthu Vellam is a 1975 Tamil film directed by K. S. Gopalakrishnan, starring Sivaji Ganesan and Jayalalithaa in the lead roles, with a story centered on social and family conflicts in a rural setting.

Song Credits - Song: Erumai Annachi - Film: Puthu Vellam - Year: 1975 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, L. R. Eswari

Musical Style Folk-based film song with a rustic, earthy flavour, using rural Tamil idiom and rhythm suited to a village setting.

Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan (male playback singer) - L. R. Eswari (female playback singer) - Sivaji Ganesan (lead actor) - Jayalalithaa (lead actress)

Awards & Recognition Not applicable / not available.

Scene Context The song appears in a rural/village sequence of the film, reflecting the folk life and local culture of the characters, in keeping with the film's rural backdrop and the title's reference to a buffalo (erumai).


Artists