Aadaikatti Vantha Nilavo

1959
Lyrics
Language: English

Aadai katti vandha nilavoo
Kannil medai katti aadum ezhiloo
Aadai katti vandha nilavoo
Kannil medai katti aadum ezhiloo
Kulir odaiyil midhakkum malar
Jaadaiyil sirikkum ival
Kaadu vittu vandha mayiloo
Nenjil koodu katti vaazhum kuyiloo
Kulir odaiyil midhakkum malar
Jaadaiyil sirikkum ival
Kaadu vittu vandha mayiloo
Nenjil koodu katti vaazhum kuyiloo
Aadai katti vandha nilavoo
Kannil medai katti aadum ezhiloo

Thulli thulli aaduminba loga mangai
Sondhamulla raaniyaval naaga mangai
Thulli thulli aaduminba loga mangai
Sondhamulla raaniyaval naaga mangai
Ellaiyattra aasaiyilae odi vandhaal
Thalli vittu pona pinnum thedi vandhaal
Ellaiyattra aasaiyilae odi vandhaal
Thalli vittu pona pinnum thedi vandhaal

Kilaithaanirundhum kaniyae sumandhu
Thaniyae kidantha kodi thaanae
Kannalanudan kalandhaanandhame
Pera kaavinil aadum kili thaanae

Thulli thulli aaduminba loga mangai
Sondhamulla raaniyaval naaga mangai

Aaa…aa…andhi veyil pettra magaloo
Kulungum alli malar inathavalo
Andhi veyil pettra magaloo
Kulungum alli malar inathavalo
Kundril undhi vilum neer alaiyil odi vilayadi manam
Sindhi varum thendral thaano
Inbam thandhu magizhkindra maano

Haa…aaa…hahahaha…aa…
Ho…ooo…ooo…ooo

Anbu manam kooduvadhil thunbam illai
Male : Anji anji oduvadhil inbam illai
Female : Veenai mattum irundhaal naadham illai
Male : Mettum viralgal pirindhaal gaanam illai

Haa..a.aa….
Female : Haa…
Both : Haaa….aaa….

Aadai katti vandha nilavoo
Kannil medai katti aadum ezhiloo
Kulir odaiyil midhakkum malar
Jaadaiyil sirikkum ival
Kaadu vittu vandha mayiloo
Nenjil koodu katti vaazhum kuyiloo
Ival aadai katti vandha nilavoo
Kannil medai katti aadum ezhiloo


Language: Tamil

விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஓடையிலே மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
இவள் ஓடையிலே மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

துள்ளித் துள்ளி ஆடுமின்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை
துள்ளித் துள்ளி ஆடுமின்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை
எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போனபின்னும் தேடிவந்தாள்
எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போனபின்னும் தேடிவந்தாள்

கிளைதானிருந்தும் கனியே சுமந்து
தனியே கிடந்த கொடிதானே...
கண்ணாளனுடன் கலந்தானந்தமே - பெறக்
காவினில் ஆடும் கிளிதானே

துள்ளித் துள்ளி ஆடுமின்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை
ஆண் : ஆஅ....ஆஅ...அந்தி வெயில் பெற்ற மகளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
அந்தி வெயில் பெற்ற மகளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
குன்றில் உந்தி விழும் நீரலையில் ஓடி விளையாடி மனம்
சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்து மகிழ்கின்ற மானோ

அன்பு மனம் கூடுவதில் துன்பம் இல்லை
ஆண் : அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
பெண் : வீணை மட்டுமிருந்தால் நாதமில்லை
ஆண் : மீட்டும் விரல்கள் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
ஆண் : நன் நேரமிதே
பெண் : மனம் மீறிடுதே
இருவர் : நன் நேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகையோரம் ஆடிடுவோம்

ஹா....ஆஆ....
பெண் : ஆஅ...ஆஅ....
இருவர் : ......................

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஓடையிலே மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ


Movie/Album name: Amuthavalli

Artists