Vizhi Oram

2020
Lyrics
Language: English

Female : Vizhi oram undhan yekkam
Unnai kaana vaadum nenjam
Engu sendraai vegu dhooram
Tholaithenae unnai naanum

Female : Thozh saayavae nee illaiyae
Unakkaagathanae vaazhum endhan jeevanae
En uyirae
Nee indri pogum naatkal ingu vedhanai
Vaa uyirae

Female : Ah…ah…aa…aaa….haaa..
Ah…ah…aa…aaa….haaa..

Female : Unnodu naanum sera
Nee sendra paadhai engae
Kaanamal thedi nindren
Kaadhal nenjae nenjae

Female : Kan moodum neram kooda
En munnae unnai kanden
Kanavodu kavithai aana
Maayam enna enna

Female : Enai vittu yen pirinthaai
En anbae
Naanum thudikindren
Ninaivodu naan endrum uyirai
Unai yendhi nindrenae

Male : Oh nanbaa
En nanbaa
Neeyum illai
Engae nanbaa
Maru jenmam ondru irunthaal
Undhan natpae podhum nanbaa

Male : Un thyagamae eedillaiyae
Naan seidha paavam
Ennai ingu vaattuthae
En nanbanae
Vidai illa kelviyaaga
Maari ponadhae
En vazhkaiyae

Male : Uyir pogum neram kooda
Anbaana paarvai thadhaai
Un natpin aalathai naan
Kanden angae angae

Male : Naan seidha dhrogam ennul
Theeyaaga maari maari
Ovvoru naalum ennai
Kolluthingae ingae
Vazhi thadu maari sendren naan
Vazhiyodu vaazhgindren
Ini engu povathu naan endru
Ennaiyae ketkindren


Language: Tamil

பெண் : விழி ஓரம் உந்தன் ஏக்கம்
உன்னை காண வாடும் நெஞ்சம்
எங்கு சென்றாய் வெகு தூரம்
தொலைத்தேனே உன்னை நானும்

பெண் : தோள் சாயவே நீ இல்லையே
உனக்காகத்தானே வாழும் எந்தன் ஜீவனே
என் உயிரே
நீ இன்றி போகும் நாட்கள் இங்கு வேதனை
வா உயிரே

பெண் : ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஹா…..
ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஹா…..

பெண் : உன்னோடு நானும் சேர
நீ சென்ற பாதை எங்கே
காணமல் தேடி நின்றேன்
காதல் நெஞ்சே நெஞ்சே

பெண் : கண்மூடும் நேரம் கூட
என் முன்னே உன்னை கண்டேன்
கனவோடு கவிதை ஆன
மாயம் என்ன என்ன

பெண் : எனை விட்டு ஏன் பிரிந்தாய்
என் அன்பே
நானும் துடிகின்றேன்
நினைவோடு நான் என்றும் உயிரை
உன்னை ஏந்தி நின்றேனே

ஆண் : ஓ நண்பா
என் நண்பா
நீயும் இல்லை
எங்கே நண்பா
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
உந்தன் நட்பே போதும் நண்பா

ஆண் : உன் தியாகமே ஈடில்லையே
நான் செய்த பாவம்
என்னை இங்கு வாட்டுதே
என் நண்பனே
விடை இல்லா கேள்வியாக
மாறி போனதே
என் வாழ்க்கையே

ஆண் : உயிர் போகும் நேரம்கூட
அன்பான பார்வை தந்தாய்
உன் நட்பின் ஆழத்தை நான் கண்டேன்
அங்கே அங்கே

ஆண் : நான் செய்த துரோகம் என்னுள்
தீயாக மாறி மாறி
ஒவ்வொரு நாளும் என்னை
கொல்லுதிங்கே இங்கே
வழி தடு மாறி சென்றேன் நான்
வழியோடு வாழ்கின்றேன்
இனி எங்கு போவது நான் என்று
என்னையே கேட்கிறேன்


Movie/Album name: Unakkagathane

Artists